ஒரே நாளில் பத்து துறை செயலாளர்களுடன் ஆலோசனை நடத்திய முதல்வர் ஸ்டாலின் பணிகளை விரைவாக முடிக்கும் உத்தரவு.
ஆமா ஆமா தேர்தல் வருது இல்ல !!
பணத்தை பதுக்கிய நீதிபதி வர்மா மீது வழக்கு புதிய சட்டத்தை காட்டி மத்திய அரசின் கைகள் கட்டப்பட்டன துணை ஜனாதிபதி ஜகதீப்தன்கர்.
மத்திய அரசு கையையே கட்டும் அந்த பெரிய தாதா யாரு அதையும் சொல்லலாம் இல்ல !!
25 தொகுதிகளில் கவனம் செலுத்த மதிமுகவினருக்கு தலைமை உத்தரவு.
ஆமா ஆமா அப்பதான் ரெண்டு மூணு தொகுதி யாவது கிடைக்கும் !!
விஜய் கட்சிக்கும் எங்களுக்கும் 1000 கிலோ மீட்டர் தூர இடைவெளி சீமான் பேட்டி.
ஏதாவது ஒரு கணக்கு இருக்கும் !!
இருட்டிலும், இக்கட்டிலும் மாட்டிக் கொண்டிருப்பவர் பழனிச்சாமி அமைச்சர் துரைமுருகன்.
உங்க கதையும் அப்படித்தான் பேசுறாங்க ?
நாடு முழுவதும் இண்டியா கூட்டணி சிறப்பாக செயல்படுகிறது முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு.
அப்படியா, இண்டியா கூட்டணி இருக்கான்னு ஒரு காங்கிரஸ்காரர் கேட்டார் அது தெரியுமா ?
தேர்தல் வாக்குறுதி 100-க்கு 100 நிறைவேற்ற முடியாது திருமா.
ஆனா திமுக நூற்றுக்கு நூறு தேர்தல் வாக்குகள் நிறைவேற்றி விட்டதா சொல்றாங்களே அது பொய்யா திருமா !!
முஸ்லிம்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைக்க அனைத்துக் கட்சிகளும் கொள்கை முடிவு எடுத்து செயல்படுத்த வேண்டும் ஜவாஹிருல்லா.
இத முதல்ல திமுக கிட்ட போய் சொல்லுங்க !!
மாணவர்கள் விடுதிகள் இனி சமூக நீதி விடுதிகள் என அழைக்கப்படும் தமிழக அரசு.
விடுதிகள் எதுவும் சரியா இல்லைன்னு ஒரே புகாரா இருக்கு சமூக நீதிக்கும் அதே கதி தான் பேர் பொருத்தம் சரிதான் !!
சீனாவின் புகழ் பாடுகிறார் ராகுல் பாஜக விமர்சனம்.
ஏதோ யாரையாவது புகழ்ந்தால் சரி !!
திமுகவின் 50 சதவீத வாக்குகள் தமிழக வெற்றி கழகத்திற்கு வரும் ஆதவ் அர்ஜுனா.
ஐ யம் வெயிட்டிங் !!
பாஜக என்னும் எலி பொறிக்குள் சிக்கி இருக்கிறது அதிமுக முத்தரசன்.
நீங்க திமுக கூட்டணியில் சுதந்திரமாய் இருக்கிறதா நினைப்போ !!
Leave a comment
Upload