தொடர்கள்
வாசகர் மெயில்
வாசகர் மெயில்

20240613090800984.jpg

Heading : விகடகவி ஆசிரியர் குழு

Comment : Dear Mr Madan, Wishing you a very Happy Birthday (11th July) 🌹 M. R. Murthi, Mumbai.

Heading : நீலகிரி கூடலூரை புரட்டி போட்ட தென்மேற்கு பருவமழை" - ஸ்வேதா அப்புதாஸ் .

Comment : கூடலூர்வாசிகள் மழை வெள்ளத்தில் தவிக்கும் போது, நீலகிரி எம்பி, ஊட்டி எம்எல்ஏ எங்கே போனார்கள்? அவர்களுக்கு ஓட்டு மட்டும்தான் வேணும் போல... ஆறுகளை அகலப்படுத்தி தூர்வாரும் போது, அதை ஆழப்படுத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு தெரியாதா? மக்களுக்கு குறைவான இழப்பீட்டு தொகை கொடுத்தால் சரியாகிடுமா?! முதல்வர் கவனிக்கட்டும்.

தவசீலன், முருகானந்தம், கோமதி, கோவை

Heading : சுகங்களை அள்ளி தரும் சுருளி மலை முருகன் கோயில்!! - ஆரூர் சுந்தரசேகர்.

Comment : சுருளிமலை முருகன் குறித்து முதன்முறையாக கேட்டறிகிறோம். அதுபற்றிய தகவல்களை ஆரூர் சுந்தரசேகர் மிக அழகாக விளக்கியுள்ளார். அவர் விளக்கிய விதம், எங்களை உடனடியாக சுருளிமலைக்கு போக வைத்தது. விகடகவியில் வரும் இதுபோன்ற ஒருசில கட்டுரைகள், எங்களுக்கு ஆக்கப்பூர்வமாக வரும் பயனுள்ளதாகவும் வழிகாட்டியாகவும் அமைந்துள்ளது.

ரேணுகா ஹரி, ஜமுனா பிரபாகரன் , ஊத்துக்கோட்டை

Heading : சினிமா சினிமா சினிமா - லைட் பாய்

Comment : லைட்பாயின் சினிமா பக்கத்தை பார்த்தபோது, ஒரே இளவட்ட நடிகைகளின் படங்களும் செய்திகளை படித்தபோது 'கிக்' ஏறியது. சந்தேகத்தோடு அட்டைப் படத்தைப் பார்த்தால், ராஷ்மிகா மந்தனா குறும்புத்தனம் ஆக சிரித்தபோது அனைவருக்குமே கிறக்கமாகிவிட்டது. என்ன... சொல்லாமல் கொள்ளாமல் சினிமா ஸ்பெஷலா?! கீப் இட் அப்!

காஞ்சனா ரகுநாதன், பாத்திமா பீவி , நாகப்பட்டினம்

Heading : 2024 T20 உலக கோப்பை சாம்பியன் இந்தியா – பால்கி

Comment : தென்னாப்பிரிக்காவில் இந்திய அணி வீரர்களின் உணர்ச்சி கொண்டாட்டங்களை அப்படியே படம்பிடித்து, ஓரளவு கவிதை நடையாக நேரடி வர்ணனை வழங்கிய பால்கி அவர்களுக்கு ஓராயிரம் கோடி வாழ்த்துக்கள்.

தஸ்லிமா நஸ்ரின், ரோஹித் கிருஷ்ணா , மஸ்கட், யுஏஇ

Heading : உலகக் கோப்பை வெற்றி ஊர்வலம் – மும்பையிலிருந்து நேரடி ரிப்போர்ட் - பால்கி

Comment : மும்பையில் உலக கோப்பை வென்ற இந்திய அணி வீரர்களை வரவேற்க திரண்டிருந்த ரசிக(பக்த)ர்களின் ஆர்ப்பரிப்பு அலையை பால்கி யின் நேரடி வர்ணனை மற்றும் வீடியோ, படங்கள் அட்டகாசம்! அதற்காக அவருக்கு ஒரு ஷொட்டு வைக்கலாம். ஆனால், கிரிக்கெட் வீரர்கள் யாரும் தெய்வங்கள் இல்லையே... அவர்களும் நம்மைப் போல் மனிதர்கள். அதனால் ரசிகர்களை பக்தர்கள் என்று கூறியதற்காக பால்கிக்கு ஒரு குட்டு வைக்கலாம்!

ரத்னா பாலகுமாரன், சுகுணா செல்வம், நெய்வேலி

Heading : வலையங்கம் - வெறும் வாய் ஜாலம்

Comment : Your valayanga opinion it's absolutely correct, in TN CM's statement. They won't control anything. Voted people very sad. Officer's only changed, but crime rate increased in Tamil Nadu. We're felt guilty.

Gnanasekaran, Swarnalatha, Swaminathan , Worli, Mumbai

Heading : 2024 T20 உலக கோப்பை சாம்பியன் இந்தியா – பால்கி

Comment : Arumai.Nicely brought out details.Gives the satisfaction of again watching the full match

V n venkataraman , Chennai

Heading : வாழ்க்கை இது தான்- பால்கி

Comment : Short ,sweet and meaningful

VNVenkataraman , Chennai

Heading : வலையங்கம் - வெறும் வாய் ஜாலம்

Comment : என்னதான் நடக்கிறது,தமிழ்நாட்டுல? பார்க்கவன் VA USA

Heading : சந்திப்போம் பிரிவோம் -16 - பொன் ஐஸ்வர்யா

Comment : மீண்டும் எப்பொது சந்திப்போம்..? எம். ஆர். மூர்த்தி, மும்பை.

Heading : கருத்து கதிர்வேலன்

Comment : வேட்டி சேலைகளை கைப்பற்றிய பாமகவினர் மீது மான நஷ்ட வழக்கு பதிவு செய்வது தான் பொருத்தமாக இருக்கும்.. எம். ஆர். மூர்த்தி, மும்பை..

Heading : “பெண்ணதிகாரம்” நூல் அறிமுகம் -மரியா சிவானந்தம்

Comment : அருமை, பெருமை, மகிழ்ச்சி... நல்வாழ்த்து

Stephenraj Sigamani, Chennai

Heading : சினிமா சினிமா சினிமா - லைட் பாய்

Comment : எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்... சிக்ஸ் பேக் பெண்களுக்கும் உண்டா...? எம். ஆர். மூர்த்தி, மும்பை..

Heading : “பெண்ணதிகாரம்” நூல் அறிமுகம் -மரியா சிவானந்தம்

Comment : பத்மாவின் சீரிய முயற்சிக்கு வெகு சிறப்பான பாராட்டு ! வாழ்த்துகள் பத்மா💐💐💐💐💐💐

கல்ஆணிஶ்ரீதர், சென்னை