ஸ்ரீ திவ்ய பிரபந்தம் சேவிப்போம்
தமிழ் மொழியை பல்லாயிரம் காலமாக வாழ்விக்க பல விஷயங்கள் உதவியுள்ளது. அதில் முக்கியமானது ஆழ்வார்கள் அருளிய ஸ்ரீ திவ்ய பிரபந்தம். சங்கரா தொலைக்காட்சியின் முயற்சியில் கவசம் யுடியூப் சேலில் தினமும் ஒரு பாசுரம் என அடுத்து 4000 நாட்களுக்கு நம்மை தமிழுயிலும், பக்தியிலும், ஆன்மீகத்திலும் ஈடுபடுத்த முயற்சிக்கிறது. இது நமக்கு கிடைத்த மாபெரும் பாக்கியம். அடுத்த 11 வருடம் நமக்கு இது ஒரு பழக்கமாகவே தொடரும். நம் அடுத்த தலைமுறையினருக்கும் இதனை எடுத்து சென்றால் என்றென்றும் நம் இல்லத்தில் பிரபந்தம் ஒலிக்கும்.
விகடகவி வாரம்தோறும் அந்த காணொளிகளை தொகுத்து உங்களுக்கு வழங்குவதில் பெருமை கொள்கிறோம்
ெரியாழ்வார் திருமொழி 2-8-1- காப்பிடல் பாசுரம்
இந்திரனோடு பிரமன்*
ஈசன் இமையவர் எல்லாம்*
மந்திர மா மலர் கொண்டு*
மறைந்து வராய் வந்து நின்றார்*
சந்திரன் மாளிகை சேரும்*
சதுரர்கள் வெள்ளறை நின்றாய்*
அந்தியம் போதிதுவாகும்*
அழகனே! காப்பிட வாராய்.
பெரியாழ்வார் திருமொழி 2-8-2- காப்பிடல் பாசுரம்
கன்றுகள் இல்லம் புகுந்து*
கதறுகின்ற பசுவெல்லாம்*
நின்றொழிந்தேன் உன்னைக் கூவி*
நேசமேல் ஒன்றும் இலாதாய்!*
மன்றில் நில்லேல் அந்திப் போது*
மதிள் திருவெள்ளறை நின்றாய்!*
நன்று கண்டாய் என்தன் சொல்லு*
நான் உன்னைக் காப்பிட வாராய்.
• பெரியாழ்வார் திருவடிகளே சரணம்
https://www.youtube.com/watch?v=TZuUUlNIZI8
பெரியாழ்வார் திருமொழி 2.8.3 காப்பிடல் பாசுரம்
செப்போது மென் முலையார்கள்*
சிறுசோறும் இல்லும் சிதைத்திட்டு*
அப்போது நான் உரப்பப் போய்*
அடிசிலும் உண்டிலை ஆள்வாய்!*
முப்போதும் வானவர் ஏத்தும்*
முனிவர்கள் வெள்ளறை நின்றாய்!
இப்போது நான் ஒன்றும் செய்யேன்*
எம்பிரான் காப்பிட வாராய்!
• பெரியாழ்வார் திருவடிகளே சரணம்
https://www.youtube.com/watch?v=h-pcIxFf9SQ
பெரியாழ்வார் திருமொழி 2.8.4 காப்பிடல் பாசுரம் 4
கண்ணில் மணல் கொடு தூவிக்*
காலினால் பாய்ந்தனை என்றென்று*
எண் அரும் பிள்ளைகள் வந்திட்டு*
இவரால் முறைப்படுகின்றார்*
கண்ணனே! வெள்ளறை நின்றாய்!*
கண்டாரொடே தீமை செய்வாய்!
வண்ணமே வேலையதொப்பாய்!*
வள்ளலே! காப்பிட வாராய்.
- பெரியாழ்வார் திருவடிகளே சரணம்
https://www.youtube.com/watch?v=vqcvJ8R3BEc
ெரியாழ்வார் திருமொழி 2-8-5- காப்பிடல் பாசுரம்
பல்லாயிரவர் இவ்வூரில் பிள்ளைகள்
தீமைகள் செய்வார்*
எல்லாம் உன் மேல் அன்றிப் போகாது*
எம்பிரான்! நீ இங்கே வாராய்*
நல்லார்கள் வெள்ளறை நின்றாய்!*
ஞானச் சுடரே! உன் மேனி*
சொல் ஆர வாழ்த்தி நின்றேத்திச்*
சொப்படக் காப்பிட வாராய்.
• பெரியாழ்வார் திருவடிகளே சரணம்
https://www.youtube.com/watch?v=AwXPTO1e1k4
பெரியாழ்வார் திருமொழி 2-8-7- காப்பிடல் பாசுரம்
கள்ளச் சகடும் மருதும்*
கலக்கழிய உதை செய்த*
பிள்ளை அரசே! நீ பேயைப் பிடித்து
முலை உண்ட பின்னை*
உள்ளவாறொன்றும் அறியேன்*
ஒளிவுடை வெள்ளறை நின்றாய்!*
பள்ளி கொள் போதிதுவாகும்*
பரமனே! காப்பிட வாராய்.
• பெரியாழ்வார் திருவடிகளே சரணம்
https://www.youtube.com/watch?v=7Rzv1r-7Ygg.
பெரியாழ்வார் திருமொழி 2-8-8- காப்பிடல் பாசுரம்
இன்பம் அதனை உயர்த்தாய்!*
இமை அவர்க்கென்றும் அரியாய்!*
கும்பக் களிறட்ட கோவே!*
கொடுங்கஞ்சன் நெஞ்சினில் கூற்றே!*
செம் பொன் மதிள் வெள்ளறையாய்!*
செல்வத்தினால் வளர் பிள்ளாய்!
கம்பக் கபாலி காண் அங்குக்*
கடிதோடிக் காப்பிட வாராய்.
• பெரியாழ்வார் திருவடிகளே சரணம்
https://www.youtube.com/watch?v=bJu0JrkUkIY
https://www.youtube.com/watch?v=GEFn2I2oSxo
பெரியாழ்வார் திருமொழி 2-8-9- காப்பிடல் பாசுரம்
இருக்கொடு நீர் சங்கில் கொண்டிட்டு*
எழில் மறையோர் வந்து நின்றார்*
தருக்கேல் நம்பி! சந்தி நின்று*
தாய் சொல்லுக் கொள்ளாய் சில நாள்*
திருக்காப்பு நான் உன்னைச் சாத்தத்*
தேசுடை வெள்ளறை நின்றாய்!*
உருக் காட்டும் அந்தி விளக்கு*
இன்றொளி கொள்ள ஏற்றுகேன் வாராய்.
• பெரியாழ்வார் திருவடிகளே சரணம்
https://www.youtube.com/watch?v=xXCKboyYTMw
பெரியாழ்வார் திருமொழி 2-8-10- காப்பிடல் பாசுரம்
போதமர் செல்வக் கொழுந்து*
புணர் திரு வெள்ளறையானை*
மாதர்க்கு உயர்ந்த அசோதை*
மகன் தன்னைக் காப்பிட்ட மாற்றம்*
வேதப் பயன் கொள்ள வல்ல*
விட்டுசித்தன் சொன்ன மாலை*
பாதப் பயன் கொள்ள வல்ல*
பத்தர் உள்ளார் வினை போமே.
• பெரியாழ்வார் திருவடிகளே சரணம்
https://www.youtube.com/watch?v=eUOfHXJw4HQ
Leave a comment
Upload