
தென்மேற்கு பருவமழை கேரளாவில் தொடங்கி இருக்கிறது. இதனால் வெயிலின் தாக்கம் குறையும் என்று எல்லோரும் மகிழும் போது வாய்ப்பில்லை என்கிறார்கள் வானிலை ஆய்வாளர்கள். இந்தாண்டு எல் நினோ ஆண்டு என்பதால் சராசரிக்கும் குறைவான மழை பொழிவேஇருக்கும் எனவே கோடை வெப்பம் ஜூன் மாதத்தையும் கடந்து நீடிக்கும் என்று எச்சரிக்கின்றனர்.
இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. அதுவும் நாடு முழுவதும் ஒரே மாதிரியாக இருக்கிறதா என்றால் இல்லை. ஒரு நகரத்திலேயே வெயிலின் அளவு மாறுபடுகிறது. உதாரணமாக பூங்காக்கள், மரங்கள்நிறைந்த பகுதிகள் அல்லது நீர்நிலைகளுக்கு அருகில் உள்ள இடங்களில் வெப்பம் குறைவாக இருக்கிறது. நெருக்கமான கட்டிடங்கள் கான்கிரீட் பகுதிகள் உள்ள இடங்களில் வெயிலில் தாக்கம் அதிகமாக இருக்கிறது.
வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தின் அறிக்கையின்படி நம் நாட்டில் நகர்ப்புற மக்கள் தொகை 2020ல் 48 கோடியாக இருந்தது.2050 குள் அது 95 கோடியாக அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது .அடுத்த 25 ஆண்டுகளில் நகர்ப்புற மக்கள் தொகை இரு மடங்காக அதிகரிக்கும் என்று அந்த ஆய்வு கூறுகிறது. இதை நாம் சாதாரணமாக கடந்து செல்ல முடியாது கடந்த 20 ஆண்டுகளில் நகர்ப்புறங்கள் வேகமாக விரிவடைந்துள்ளன. அதே நேரத்தில் பசுமைப் பரப்பு விவசாய நிலங்கள் திறந்தவெளிகள் சுருங்கியு ள்ளன .சாலைகள், கட்டடங்கள்பிற உள்கட்ட அமைப்புகள் ஆகியவை காடுகள் வயல்வெளிகள்அல்லது நீர் நிலைகளைவிடஅதிக வெப்பத்தைஉறிஞ்சி வெளியிடுகின்றனநகர்ப்புறத்தில் அதிக வெப்பம் இருப்பதற்கு இதுதான் காரணம்.
இதை தடுப்பதற்கு ஒரே வழி நகர்ப்புறங்களில் இருக்கும் வசதி வாய்ப்புகளை கிராமங்களில் ஏற்படுத்திக் கொடுப்பதன் மூலம் நகரங்களை நோக்கி மக்கள் படையெடுப்பதை குறைக்க முடியும். இதனால் நகரமயமாக்கல்என்பது குறையும். எனவே மத்திய மாநில அரசுகள் நகர்ப்புற திட்டங்களை வடிவமைக்கும் போது இதை மனதில் கொள்ள வேண்டும்.


Leave a comment
Upload