தொடர்கள்
ஆன்மீகம்
குருவருளும் திருவருளும் - 103 - ஸ்ரீநிவாஸ் பார்த்தசாரதி

20261010113204438.png

ஸ்ரீ மஹாபெரியவாளின் அனுபவங்களை பல வருடங்களாக தொடர்ந்து கேட்டு அவரின் அனுகிரஹத்தை பெற்று வருகிறோம். ஸ்ரீ சிவராமன் மாமா அவர்களின் ஸ்ரீ பெரியவா பக்தர்கள் உடனான நேர்காணல் மிகவும் நெகிழ்ச்சியாகவும், ஆச்சரியமாகவும் இருக்கும். அப்படி ஒரு காணொளி தான் இந்த வாரம்.

ஸ்ரீ மஹாபெரியவா அந்த காலத்தில் ஒவ்வொருவரையும் கண்டுபிடித்து ஆட்கொண்டு அவர்களுக்கு வாழ்வளித்து அனுக்கிரஹம் செய்து வர்கள் வாழ்க்கையையும் மேம்படுத்தி வேதத்தையும் சனாதன தர்மத்தையும் வளர்த்து பேணி காத்துள்ளார் என்பது இக்காணொளி மூலம் தெரியும்.

ஸ்ரீ ரிக் வேத வைத்தா மாமா

1934ல் பிறந்து 50களில் பெரியவாளை தரிசித்து, வேடம் படித்து,ஆங்கில கல்வி முடித்து TAFE யில் வேலைக்கு சேர்ந்து பின்பு 66ல் தனியாக தொழில் தொடங்கி சிறப்பாக வாழ்ந்த அனுபவத்தை நமக்கு வழங்குகிறார். இத்தனைக்கும் ஸ்ரீ பெரியவா தான் காரணம். அதுமட்டுமல்ல அத்தனை காலகட்டத்திலும் அவர் ஸ்ரீ மகா பெரியவாளுடன் கூடவே இருந்திருக்கிறார். இந்தவாரம் உங்களுக்கு ஒரு அற்புதமான அனுபவம்.