
குட்கா வழக்கில் சிபிஐ ஒத்துழைக்கவில்லை உயர் நீதிமன்றத்தில் சி.பி.ஐ. நீதிமன்றம் அறிக்கை
அப்புறம் எல்லோரும் எதற்கு சிபிஐ விசாரணை தேவை என்கிறார்கள் ?
மேகதாது அணை கட்டினால் தமிழகத்திற்கும் அதிக நன்மைகள் கிடைக்கும். கர்நாடக முதல்வர் சிவகுமார்.
நீங்கள் காவிரி தண்ணீர் திறந்து விடுவதில் காட்டும் அக்கறையை பார்த்தாலே அது தெரிகிறது ?
எங்கள் கட்சியின் வெற்றி வாய்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சோனியா காந்தி.
அப்போ, தனித்துப் போட்டியிட்டால் டெபாசிட் நிச்சயம் அப்படித்தானே மேடம்?
விலைவாசி உயர்வே டிரம்ப் தோல்விக்கு காரணம் மாணிக்கம் தாகூர்.
ஆனால், தமிழ்நாட்டில் விலைவாசிகள் பற்றி கேட்டால் தலைவர் அது பற்றி நான் இன்னும் ஆய்வு செய்யவில்லை என்பார் !!
பண்டிகை காலங்களில் கொலை சம்பவங்கள் நடப்பது புதிதல்ல , அமைச்சர் ராஜமோகன்
அமைச்சரை பொருத்தவரை எல்லாம் பழசு தான் புதுசு அல்ல !!
அதிமுக ஆட்சி அமைத்தால் தடுப்பணைகள் உயர்த்தப்படும் எடப்பாடி பழனிச்சாமி.
உங்கள் சட்டமன்ற உறுப்பினர்களை வெளியே போகாம இருக்க, ஏதாவது தடுப்பணை இருக்கிறதா என்று பாருங்கள் !!
சட்டம் ஒழுங்கு ஐசியுவில் ,கோமாவில் ஆட்சி நிர்வாகம் திமுக தலைவர் ஸ்டாலின்.
நல்லா எதுகை மோனையோடு பேசறீங்க, ஆனால் தொகுதியில் கோட்டை விடுகிறீர்கள் !! அப்பாவை காணோம் என்று எல்லாம் பேசும்படி ஆகிவிட்டது !!
தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வது யார் ? காங்கிரஸ் பெண் எம்பிக்கள் கேள்வி.
கூட்டணியில் இருக்கிறீர்கள் ,அமைச்சரவையிலும் பங்கு பெற்று இருக்கிறீர்கள், இப்போது யார் என்று கேட்கிறீர்கள் ? நல்ல தமாஷ் !!
புத்தகப் கொள்முதல் முறைகேடு. லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்ய கோரி திமுக மனு.
வழக்கு போட்டா வாய்தா வாங்கலாம் ! தடை வாங்கலாம் ! இப்படி நிறைய வசதி இருக்கு.
நான் பிரதமர் ஆவதை எதிர்த்த ராகுல், பிரியங்கா சுயசரிதையில் சோனியா காந்தி தகவல்.
அந்த சின்ன வயசுல அவங்க ரெண்டு பேருக்கும் பிரதமர் ஆசை இருந்திருக்கு !!
மூன்றாவது மனைவியை விவாகரத்து செய்த நடிகர் பவன் கல்யாண்.
விவாகரத்தில் ஏதாவது கின்னஸ் ரெக்கார்டு பண்ண போறாரு என்னவோ?
உத்திரபிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் உண்மையான பலம் என்ன ? களஆய்வு செய்கிறார் அகிலேஷ் யாதவ்.
போன முறையே இரண்டு தொகுதி தான் ஜெயித்தார்கள், உண்மையை அவங்களுக்கு புரிய வைக்க தான் இந்த கள ஆய்வு போல தெரியுது ?
தமிழக வெற்றிக்கழக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் சென்னை வர உத்தரவு.
அப்பாடா, ரெண்டு மூணு நாட்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் அதிகாரிகள் மிரட்டல் தொந்தரவு இல்லாமல் நிம்மதியா வேலையை பார்க்கலாம்.
தமிழக வெற்றி கழக ஆட்சியில் கொலைக்கும், மது விற்பனைக்கும்தான் போட்டி முன்னாள் அதிமுக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கருத்து.
'வெற்றி'க்கோப்பை எல்லாம் தருவாங்களோ ?
தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர் மீது கலெக்டர் புகார் கொடுத்தால் நடவடிக்கை அமைச்சர் ராஜ்மோகன் பேட்டி.
அதாவது கலெக்டர் மீது அப்படித்தானே அமைச்சர் !

Leave a comment
Upload