தொடர்கள்
அனுபவம்
நினைவலைகள்: இயக்குநர் சிகரம் கே பாலசந்தருடன் – அம்பத்தூர் ரங்கராஜன்

20261013212640265.jpg

30/7/1930 பிறந்தார். மாநில கணக்காயர் அலுவலகத்தில் [AGS] பணிபுரிந்தவர்.

இராம.அரங்கண்ணல் இவருடைய பள்ளித்தோழர். எம்.எஸ். உதயமூர்த்தி கல்லூரித்தோழர். அலுவலகத்தில் பணிபுரிந்த காலத்திலையே மேடை நாடகங்களை எழுதி இயக்கினார்.

நீர்க்குமிழி இவரது முதல் நாடகம்.

அதைப்பார்த்த எம்ஜிஆர் அவர்கள் பாலச்சந்தரை திரைத்துறைக்கு வருக வருக என வரவேற்று, அவர் நடித்த தெய்வத்தாய் படத்திற்கு கதை, வசனம் ஏற்பாடு செய்ய மெதுவாக திரைத்துறையில் காலடி எடுத்து வைத்தார்.

கவிதாலயா என்ற சொந்த திரைப்பட நிறுவனம் ஆரம்பித்தார்

செளகார்ஜானகி நடித்த இருகோடுகள் படு ஹிட். நாணல், அதுவும் ஹிட். ஜெய் சங்கர், ஜெமினி நடித்த பூவா தலையா, நாகேஷ், மேஜர் முத்துராமன், பாலைய்யா நடித்த நகைச்சுவைப்படம் பாமாவிஜயம்.

பிரபலமான டயலாக்குகளான “மாது வந்திருக்கேன்”, “படவா ராஸ்கல்” கொண்ட எதிர்நீச்சல், ஜெமினியின் அசத்தலான நடிப்பில் நான் அவனில்லை என பல படங்கள்.

ராதாரவி அறிமுகமான கோமலின் தண்ணீர் தண்ணீர், கமல்,எஸ்.வி.சேகர், ஸ்ரீதேவி , பிரதாப்போத்தன் நடித்த வறுமையின் நிறம் சிவப்பு

தமது இயக்கத்தில் பாலச்சந்தர் அதிகம் பயன்படுத்திய நடிகர்கள் ஜெமினி, நாகேஷ், மேஜர், கமல், முத்துராமன்,

கேபியின் சிறந்த நண்பர் நாகேஷ்.

அபூர்வ ராகங்கள் படத்திற்கு குமுதம் எழுதிய விமர்சனம் ஸ்ரீவித்யாவின் கண்களால் செட் போடப்பட்டது.

அடுத்ததாக மேஜர் சந்திரகாந்த் மறக்க முடியாத படம். ஏன்? மெட்ராஸ் பாஷையில் நாகேஷ் நடித்த அநுபவி ராஜா அநுபவி கூடத் தான்.

கேபி இயக்கத்தில் சிவாஜி நடித்த ஒரே படம் எதிரொலி.

இன்னும் சொல்லிகாகொண்டே போகலாம்

மரோசரித்ரா தெலுங்கு மொழி படம். கமல், சரிதா நடித்தது. அசகாய வெற்றி.

பெற்ற விருதுகள் கலைமாமணி பத்மஸ்ரீ,தாதாசாகேப் பால்கே விருது, ஏ.என்.ஆர் தேசிய விருது.

கர்நாடக சங்கீதம் தமிழ் பாடல்கள் தொடர்பாக வந்த சிந்து பைரவி படத்திற்கு பிரபல எழுத்தாளரான பாலகுமாரன் கதை வசனம் எழுதினார்.

வித்தியாசமான முறையில் படம் எடுப்பதில் படு கில்லாடி

இவரின் நாடகங்களைப்பார்த்து பிறகு சினிமா ஷூட்டிங்கிலும் அவரை சந்தித்து பேசி இருக்கிறேன்.

சிந்து பைரவி ஷூட்டிங்கில் இது பாலகுமாரனின் வாழ்க்கை தானே என்றதற்கு சிரித்தவாறு சென்றார் மறக்க முடியாத நபர்.

கடைசியாக எம்.எஸ்.பெருமாள் அவர்களுடைய கதை அவள் ஒரு தொடர்கதை எனப் படமானது. படாபட் ஜெயலஷ்மி, ஜெய்கணேஷ் அறிமுகம்.

நிறைய முறை சந்தித்த நினைவுகள்.