தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021.... - கருத்து கந்தசாமியின் பஞ்ச்

தமிழ்நாட்டுல நடக்க போற தேர்தல்ல யாரைக் கேட்டாலும்... “பாசீசம் உள்ள பூந்துரும்.. சாக்கிரதை அவனுக்கு ஓட்ட போடு... இவனுக்கு ஓட்டு போடு..!”ன்னு உசுற வாங்குறானுவ.. இன்னும் என்னென்ன கூத்து பாக்கப்போறோமுன்னு தெரியல... நம்ம பங்குக்கு நாமளும் சேர்ந்து கலாய்ப்போம் வாங்க...
தி.மு.க. கூட்டணிக்கு எம்.ஜி.ஆர். கழகம் ஆதரவு...
கந்தசாமி: ஏன்பா.. திமுக வேணாம்னு தான எம்ஜிஆரே வெளியே போனாரு.. எம்ஜிஆர் கழகமுனு வெச்சதுக்கு பேசாம எம்ஜிஆர் கலகமுனு பேர வெச்சு இருக்கலாம்.
5 முறை ஆட்சி புரிந்தும், அடுத்தவர் தயவை நம்பியுள்ள திமுக - ராமதாஸ்.
கந்தசாமி: ஐயா... பெரியய்யா.. பதவிக்காக அடுத்தவர் தயவை என்னைக்கும் நம்பி இருக்குற நீங்க இத சொல்றதுதான் ஆகப்பெரிய முரண்பாடு..
பார் உள்ளளவும்..
கடல் உள்ளளவும்..
பைந்தமிழ் உள்ளளவும்..
ஞாபகம் இருக்கா..?
“இந்த தேர்தல் விவசாயிக்கும் முதலாளிக்கும் நடக்கும் போர்” - அன்புமணி ராமதாஸ்
கந்தசாமி: எது..?! டெல்லியில நடந்துதே.. அந்தப் போரை தானே சொல்லுறீங்க சின்ன முதலாளி ..
“நாட்டை குட்டிச்சுவராக்கிய மோடி-அமித்ஷாவால் தமிழகத்தில் நுழையவே முடியாது; இது திராவிட மண்” - மு.க.ஸ்டாலின் தேர்தல் பரப்புரை!
கந்தசாமி: தலைவரே .. இதே திராவிட மண்ணுல இதே பிஜேபிக்கு என்ட்டரி பாஸ் கொடுத்து, புள்ளையார் சுழி போட்டதே உங்க திமுக தான்..
திமுக, அதிமுக பயன்படுத்திய விளம்பரங்களில் ஒரே பெண் - குழப்பத்தில் வாக்காளர்கள்...
கந்தசாமி: இதிலிருந்து என்ன தெரியுது..? ரெண்டு திராவிடமும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைங்கன்னு தெரிய வருது. இவனுவளுக்கு இதே பொழப்பா போச்சு. போன முறை ஒரு பாட்டி.. இந்த முறை ஒரு புயூட்டி.. அவ்வளவு தான் வித்தியாசம்..
இன்றும் மாற்றம் இல்லை.. 23 நாட்களாக உயராத பெட்ரோல், டீசல் விலை.. அதே விலையில் விற்பனை! - செய்தி
கந்தசாமி: பெட்ரோல், டீசல் விலை தேர்தல் வந்தா அரசு கட்டுப்பாடு.. தேர்தல் இல்லைனா எண்ணெய் கம்பெனிக்காரன் கட்டுப்பாடு. இது தாங்க மக்கள் மேல் அரசியல்வாதிகள் வச்சியிருக்கிற உண்மையான அக்கறை....
“விருகம்பாக்கத்தில் போட்டியிடாமல் இருக்க, என்னை 10 கோடிக்கு விலை பேசினார்கள்” மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் சினேகன்
கந்தசாமி: ஏன் பத்துறா மாதிரி கைல பொட்டி கொண்டு போகலையா? அதுக்கில்ல.. யாரு பேசினாங்க.. எங்க பேசினாங்கற வெவரத்தை எல்லாம் சொன்னாதானே எங்களுக்கும் வெளங்கும்..
‘டெல்லிக்கு போய் தமிழகத்திற்காக கர்ஜிப்பேன்’ - கமல் ஆவேசம்
கந்தசாமி: MLA ஆனா எப்படி டெல்லிக்கு போய் கர்ஜிக்க முடியும்.?அதுக்கு எம்பி ஆகனும்ல...
நாகூரில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அதிமுக வேட்பாளர், துணி துவைத்துக் கொண்டிருந்த பெண் வாக்காளருக்கு துணிகளை துவைத்துக் கொடுத்து ஆதரவு திரட்டினார்.
கந்தசாமி: இலவச வாஷிங்மெஷின்னு சொல்லும் போது புரியல.. இப்ப தான் புரிஞ்சிக்க முடியுது.. நல்லவேளை காலைல வரல...
“ஏழரை கோடி இளைஞர்கள் என்னை ஃபாலோ பண்ணதால டிக்டாக்கையே தடை பண்ணிட்டாங்க. வாட்ஸ்அப்புல 5 பேருக்கு மேல் மெசேஜ் அனுப்ப முடியாதுன்னு ரூல்ஸ் வந்ததும் என்னால தான்” - சீமான்
கந்தசாமி: அடேங்கப்பா..!! ஆமைக்கறி கூட பரவால தம்பி.. டைனாசர் கறி வரை போறதுதான் நமக்கு ஜீரணமாக மாட்டேங்கிது.
“உங்களுக்கு மனசாட்சினு ஒண்ணு இருந்தா, இரட்டை இலைக்கு நீங்க ஓட்டு போடலைன்னா நல்ல சாவே சாவமாட்டீங்க...” - நாமக்கல் அதிமுக வேட்பாளர் கே.பி.பி பாஸ்கர்.
கந்தசாமி: ஏன்..!!? உங்களுக்கு ஓட்டு போடாதவங்கள புடிச்சு ஹைவேல ஸ்பீடா வர லாரிக்கு அடில போட போறீங்களா..!! ஆட்சியிலே நல்லது செஞ்சதை வச்சு ஓட்டு கேக்கவேண்டியது தானே.... அத உட்டுப்போட்டு இப்டி குடுகுடுப்பைக்காரன் போல வாக்கு சொல்லி பயமுறுத்துறதா? ஓட்டு போட்டா ஜனங்களுக்கு நல்ல வாழ்வு வராது.. போடாட்டி நல்ல சாவு வராது.. அடுத்து செய்வினைதான் வைப்பாய்ங்க போலிருக்கே... ஆத்தாடி..
“தமிழகத்தில் பாஜக எந்த இடத்திலும் வெற்றி பெறாது” - திமுக தலைவர் ஸ்டாலின்
கந்தசாமி: பாஜக தமிழகத்தில் வெற்றி பெறாம போகட்டும். ஆனா நீங்க வெற்றி பெற்றால், ஆட்சியை தக்க வைக்க பாஜகக்கூட திரைமறைவுல உறவு வச்சிராதீங்கன்னு மக்கள் சொல்றாங்க...

Leave a comment
Upload