தொடர்கள்
பொது
“மலரும் நினைவுகளில் மிதந்த ஊட்டி...” - ஸ்வேதா அப்புதாஸ்.

20210224081817599.jpeg

கடந்த வாரம் ஊட்டி அரசு கல்லூரி விழா கோலத்தில் இருந்தது...
கல்லூரி முழுவதும் புதிய தலைகள்... அதுவும் பல வயதானவர்கள் கல்லூரி வளாகத்தை சுற்றிப் பார்த்து கொண்டிருந்தனர்.... நிறைய கார்கள், கல்லூரி மைதானத்தை நிரப்பி இருந்தது....

என்னதான் நடக்கிறது என்று நாமும் அழையா விருந்தாளியாக உள்ளே எட்டி பார்த்தோம்..

“ஏய்... இங்க பாரு நம்ம டிபார்ட்மென்ட்.... ஹல்லோ.... ஹொவ் ஆர் யு... எத்தனை வருடம் ஆகிடுச்சு டா... உன்னை பார்த்து...! என்று ஒரு பெண்மனி, ஒரு டிப் டாப் நண்பருடன் பேசி கொண்டிருக்க....
படிகளில் எற முடியாமல் தங்களின் ஆண் நண்பர்களின் கையை பிடித்து கொண்டு சென்றது... பார்க்கின்ற நமக்கு நெகிழ்ச்சியாக இருந்தது....

20210224081952415.jpeg
பழைய மாணவர்களின் சந்திப்பு தான் அது..... வரலாற்று சிறப்புமிக்க ஊட்டி அரசு கல்லூரியின் ஒவ்வொரு தூணும் இந்தப் பழைய மாணவர்களை பூரிப்புடன் வரவேற்றுக் கொண்டிருந்ததை உணர முடிந்தது.

வந்திருந்த பெரும்பாலானவர்கள், இந்தியாவில் உள்ள பெருநகரங்களில் உயர் பதவியில் பணிபுரிந்த அதிகாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது....
சரியாக... காலை 10.30.. மணிக்கு கல்லூரி மணி ஒலிக்க... ஆங்காங்கு சுற்றி கொண்டிருந்த சூப்பர் சீனியர், பழைய மாணவர்கள் அனைவரும் கல்லூரி அலுவலகத்திற்க்கு முன் வந்து அணிவகுத்து நின்றனர்.... கல்லூரி முதல்வர் ஈஸ்வரமூர்த்தி, என்.சி.சி. மாணவர்களின் அணிவகுப்புடன், அனைத்து முன்னால் மாணவர்களுக்கும் கார்ட் ஆப் ஆனர்... கொடுத்து, சல்யுட் அடித்து... வரவேற்றது... சூப்பர்....

20210224082019489.jpeg
முன்னால் ஐ.ஏ.எஸ். அதிகாரி சுந்தர தேவன், தலைமை வகிக்க..... விழா களை கட்டியது.

இந்நாள் மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது...

வந்திருந்த அனைத்து முன்னாள் மாணவர்களும், முக்கிய பதவி வகித்தவர்கள். அதனால் ஓய்வு பெற்ற அதிகாரிகள்.... கல்லூரியின் முதல் மாணவரான பெள்ளிராஜ் மேடையை அலங்கரிக்க... மற்ற மாணவர்களுடன அவருடன் இணைந்து அரங்கை அலங்கரித்தனர்...

‘Twinkling Stars Professors & Students Meet’ என்ற பெயருடன் இந்த முன்னாள் மாணவர்களின் சந்திப்பு நிகழ்வு நடந்தது...... அனைத்து ஸ்டார்களின் ஜொலிப்பை கண்டு பிரமித்து போனோம்...

முன்னால் கல்லூரி ஸ்டார்கள், சிலர் நரைத்த தலையுடனும்.... பலர்... கருப்பு ‘டை’யுடன் சற்று இளமையாக ஜொலித்தனர். எல்லோர் முகமும் பளிச் என்று புதிய எல்.இ.டி. பல்ப் போல மின்னிக்கொண்டிருந்தது.....
வந்திருந்த அனைவரும் வி.வி.ஐ.பி-கள் என்பதால் ஒரு சிலர் மட்டுமே பேச வாய்ப்பிருந்தது.

20210224082038630.jpeg
கலகலப்பான பேச்சுகள்... ஊட்டியின் இயற்கை... இதம்... ரயில் பயணம்... கல்லூரி மாணவர்களின் சமூக அக்கறை, போராட்டங்கள்... தங்களின் முதல்வர்கள், பேராசிரியர்கள் பற்றியும்... பொட்டானிக்கல் கார்டர்ன் நம்ம கார்டன்... அசெம்பிளி ரூம்ஸ், திரையரங்கில் பார்த்த படங்கள்.... என்று பல மலரும் நினைவுகள் பகிர.... சிரிப்பு... ஆனந்த கண்ணீர்.... சில நண்பர்களை நினைத்து, கண்கலங்கி நின்றனர்....

முன்னாள் மாணவர்கள், தங்கள் பேராசிரியர்களுக்கு பரிசு கொடுத்து கௌரவித்தனர்....

முன்னாள் மாணவர்களும்.. கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள், அலுவலக ஊழியர்கள் என்று அனைவருக்கும் நினைவு பரிசு வழங்கி மகிழ்ந்தனர்.

அறுசுவை மதிய உணவுக்கு பின்...

20210225134252635.jpeg

நீலகிரி பாரம்பரிய படுக நடனத்தில் அனைவரும் கலந்து கொண்டனர்...
பிரிந்து செல்ல மனமில்லாமல், சென்றனர்..

20210224082056943.jpeg

இந்த மறக்கமுடியாத நிகழ்வை ஏற்பாடு செய்தவர்... கல்லூரியின் முன்னாள் விலங்கியல் துறை பேராசிரியர் சுபைய்யா தான்... அவரிடம் பேசினோம்...

20210225134633485.jpeg

“கொஞ்ச நாளாகவே, அதுவும் இந்த லாக் டவுன் காலத்தில் தான்... பழைய மாணவர்கள், பேராசிரியர்களின் சந்திப்பு குறித்துப் பேசினோம்.. அப்பொழுது தான் நான் ‘Twinkling Stars of Gac’.. என்று வாட்சப் குரூப் ஆரம்பித்து... நம் சந்திப்பு குறித்து பேசினோம்... நான் 1966 முதல் 1994 வரை இந்த கல்லூரியில் விலங்கியல் துறை பேராசிரியராக பணிபுரிந்தேன்.... என் மாணவர்கள், நிறைய பேர் இன்று டாப் லெவெலில் பணிபுரிந்து, ஓய்வு பெற்றவர்கள்... மொத்தம் 200 முன்னாள் மாணவர்கள் எங்களின் அழைப்பையேற்று கலந்து கொண்டு, பழைய நினைவுகளில் மூழ்கினார்கள்.. சுந்தரத்தேவன் ஐஏஎஸ், டெல்லி உச்சநீதீமன்ற வழக்குரைஞர் கோபால வீரராகவன், விஞ்ஞானி கண்ணன்... தற்போதய ஊட்டி தொகுதி வேட்பாளர் போஜராஜ், தஞ்சாவூர் பல்கலைக்கழக விசி சுப்ரமணியம்... என்று பல மாணவர்களின் அன்பான சந்திப்பு... வயதான மாணவர்கள் கூறியது... இது எங்களை வளர்த்து ஆளாக்கின புனித பூமி.. ஒரு சபரிமலை.. மருத மலை... வேளாங்கன்னி... தர்காவிற்கு சமம் இந்தக் கல்லூரி... முதல்வர் ஈஸ்வரமூர்த்தி... சிறந்த ஏற்பாடுகளை செய்து அசத்தி விட்டார்... கல்லூரி நல்ல முன்னேற்றத்தை அடைந்துள்ளது..

நீலகிரி ஆவண காப்பக இயக்குனர் வேணுகோபால் கூறும்போது... 8. 2. கோடி செலவில் கல்லூரியை பாரம்பரிய அந்தஸ்தில் புதுப்பிக்கவும், தன்னாட்சி பல்கலை கழகமாக மாற்றும் பல திட்டங்களுக்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது... வரலாற்று சிறப்பு மிக்க கல்லூரியில்... இந்த முன்னால் பேராசிரியர்கள் - மாணவர்களின் சந்திப்பு புதிய வரலாற்றை படைத்துள்ளது..” என்று கூறினார் 88 வயது இளைஞர் சுப்பையா...

முன்னாள் மாணவர் மற்றும் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சுந்தரதேவனிடம் பேசினோம்... “சுப்பையா சார் தான் இந்த அலுமினி மீட்டை ஏற்பாடு செய்தவர்... நான் 1969-72 பேட்ச் கெமிஸ்ட்ரி, எங்க பேராசிரியர் ராஜ மாணிக்கம் அவர்களை மறக்க முடியாது.. கல்லூரிக்கு வந்து முன்னாள் மாணவர்கள், பேராசிரியர்களை பார்த்ததில் ஏகப்பட்ட சந்தோஷம்... ஊட்டி கல்லூரி வாழ்க்கை மறக்க முடியாதது... நம்ம கார்டன் சென்றது.. நோ டி.வி., செல் போன் காலம் அது...

அசெம்பிலி ரூம்ஸ் திரையரங்கில்... ஸ்டீல் சேரில், 34 பைசா டிக்கெட் எடுத்து முதல் வரிசையில் அமர்ந்து இங்கிலிஷ் படத்தை புரிந்தும் புரியாமலும் பார்த்தது இன்றும் என் நினைவில் நிழலாடுகிறது. நாங்கள் படிக்கும் போது குறைவான மாணவர்கள். இன்று 4500 மாணவர்கள் படிக்கும் கல்லூரி பல முன்னேற்றத்தை அடைந்துள்ளது.. ஒரு விஷயம் என் நண்பர்கள், பேட்ச் மேட்ஸ் யாரும் வரவில்லை என்ற வருத்தம் உண்டு.

நான் பி.எஸ்சி முடித்து, மெட்ராஸ் விவேகானந்தா கல்லூரியில் எம்.எஸ்சி படித்தேன். அப்பொழுது என் நண்பர்கள் ஐஏஎஸ் எக்ஸாமுக்கு ரெடியாகி கொண்டிருந்ததை பார்த்து, நானும் படிக்க ஆரம்பித்து... பின் ஐஏஎஸ் பாஸ் ஆனேன்.. கன்னியாகுமரி, திருச்சி காலெக்டராக பொறுப்பு வகித்து, பின் தலைமை செயலகத்தில் பணி. பின் ஓய்வு.. 52 வருடத்திற்கு பின் என் கல்லூரிக்கு வந்ததில் மகிழ்ச்சி என்று கூறின சுந்தர தேவன்... தான் கல்லூரி படிக்கும் போது, ‘ஆத்தி மேரா சாத்தி’ பட ஷூட்டிங் கல்லூரியில் நடக்க... ராஜேஷ் கண்ணா மற்றும் தனுஜா...இன்றும் நினைவில் உள்ளனர் என்று கூறினார்.

20210225134522990.jpeg

சுப்ரீம் கோர்ட் வழக்குரைஞர் கோபால வீரராகவன் கூறும்போது... “நான் ஓய்வு பெற்று பெங்களூரில் இருக்கிறேன்.. சுபையா சார் தான் இவ்வளவு மெனக்கெட்டு, இந்த மீட்டை ஏற்பாடு செய்துள்ளார். நானும் அவருக்கு உதவி செய்தேன்... நான் 1970 ஆம் வருட பேட்ச் எக்கனாமிக்ஸ்... 51 வருடத்திற்கு பின் என் கல்லூரிக்கு வந்ததில் மெய்சிலிர்த்து போய்விட்டேன்.... இது எங்களின் முதல் கோயில்... தற்போது கல்லூரியை புதுப்பிக்கும் வேலையை துவக்கியுள்ளார் முதல்வர்... பழைய கட்டிடத்தில் எந்த மாற்றமும் வராமல்... ஹெரிடேஜ் ஸ்டைலை மாற்றாமல் புதுப்பித்தல் நல்லது... கொரோனா காலம்.. எப்படி நீலகிரியினுள் நுழைவது என்று இருந்தோம்... மாவட்ட கலெக்டர் இன்னசன்ட் திவ்வியா உதவியால் வர முடிந்தது என்று கூறினார்.

மும்பையில் இருந்து வந்திருந்த கிருஷ்ணஸ்வாமி, விமான பைலட்களின் பயிற்ச்சி ஆய்வாளர்... 1967-70 பேட்ச் மாணவர். 50 வருடத்திற்கு பின் என் கல்லூரிக்கு வந்து தான் தூய காற்றை சுவாசித்தேன் என்று உணர்ச்சி வசப்பட்டார்.

இவரின் மனைவி சந்தான லட்சுமி, ஒரு ஏர் ஹோஸ்டஸ்.. மகன்கள் தினேஷ் மற்றும் கார்த்திக் இருவரும் பைலட்...

நம் கல்லூரியில் பி.எஸ்சி... Aviation படிப்பை.. அறிமுகம் செய்தால்... அந்த மாணவர்களுக்கு நான் அவர்கள் விமான துறையில் பணிபுரிய, எல்லா உதவிகளும் செய்ய தயார்..... மாணவர்கள் கணக்கு, பிசிக்ஸ் பாடத்தை சற்று கரைத்து குடித்தே ஆக வேண்டும்... என்று கூறினார்.

1995-98 ஆம் வருடம் பொருளாதாரம் படித்த... பத்மஜா மற்றும் ரூபீனா... “எங்க அரசு கலை கல்லூரியில் படித்த மாணவர்கள் பெரும்பாலும் உயர் பதவியில் இருப்பது பெருமையான ஓன்று... எங்க பேராசிரியர் சாமுவேல் லெஸ்ஸிலி சாரை பாரத்ததில் ரொம்ப ஹாப்பி... பெங்களூரில் இருந்து வந்த எங்க கல்லூரி பழைய மாணவர்களுடன் இருந்த நாள் எங்கள் வாழ்வில் பொன்னான நாள்” என்றார்கள்...

20210225134819481.jpeg

கோவையில் இருந்து டிப் டாப் சூட்டில் ஆஜராகியிருந்தார் பால் வின்சென்ட்...

20210228125626449.jpeg

“ரியலி, ஐ லவ் மை ஆர்ட்ஸ் காலேஜ்.... அருவங்காட்டில் இருந்து தினமும் பஸ்ஸில் வருவோம்.... சேரிங் கிராஸ்ஸில் இறங்கி கல்லூரி மேடை ஏறி, வருவது தினமும் ஒரு மலையற்றம் தான்... என் சப்ஜெக்ட் தாவரவியல்... அடிக்கடி பொட்டானிக்கல் கார்டன் விசிட் இருக்கும்.. அது ஒரு அருமையான மறக்க முடியாத காலம்.... இன்று அந்த மலரும் நினைவுகளில் மிதந்து கொண்டிருக்கிறேன்.... ஒரு விஷயம் உள்ளூர் முன்னாள் மாணவர்கள் மிஸ்ஸிங்” என்று வருத்தப்பட்டார்.

2021022812565722.jpeg

“நாற்பத்தி ஐந்து வருடத்திற்கு பின் என் கல்லூரி நண்பர்களை சந்தித்ததில் என் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை... என் நண்பிகள் ருக்குமணி, ரேவதி. தற்போதைய முதல்வர் ஈஸ்வரமூர்த்தி விழாவை அருமையாக ஏற்பாடு செய்திருந்தார்.. முன்னாள் மாணவர்களையும், பேராசிரியர்களையும், எங்க கல்லூரியையும் பார்த்து, சில மணிநேரம் உறவாடியது சூப்பர்.... பழைய நினைவுகள்... இந்த வயதான காலத்தில் ஒரு இளமை துடிப்பை எங்க கல்லுரியின் இயற்கை காற்று.. வருடி சென்றதை உணர முடிந்தது என்று கூறினார் கௌசல்யா, விலங்கியல் மாணவி...

20210224082234517.jpeg
கல்லூரி முதல்வர் ஈஸ்வரமூர்த்தி.. “என்ன சொல்வது என்று தெரியவில்லை... சுபையா சார் மற்றும் தீப்தி கோகுல்... இந்த ஓல்ட் அலுமினி மீட் பற்றிக் கூற... கொரோனா என்பதால் சற்று தயக்கம் இருந்தது... பின்னர் எங்களை அறியாமலே... ஒரு உத்வேகத்துடன் ஏற்பாடு செய்தோம்... 200 பழைய... மாணவர்கள் பேராசிரியர்களின் மலரும் நினைவுகளை பிரதிபலித்த தருணம்.

கல்லூரி துவக்கப்பட்ட 1955 ஆம் ஆண்டு கல்லூரியில் சேர்ந்த முதல் மாணவர் பெள்ளி கலந்து கொண்டது ஒரு பொக்கிஷமான தருணம்.”

கல்லூரி பல முன்னேற்றத்தை அடைந்துள்ளது... குடிதண்ணீர் இல்லாமல் இருந்தது, 3 லட்சம் செலவில் தண்ணீர் வசதி செய்துள்ளேன்... விளையாட்டு மைதானம் சுற்றி தடுப்பு வேலி அமைத்துள்ளோம்.. சுற்றி மரங்கள் நடப்பட்டுள்ளன..

ஒரு விஷயம் ஹை ஸ்பீட் கார் வாஷ் மெஷின் வாங்கியுள்ளேன்... எதற்கு தெரியுமா... கார்கள் வாஷ் செய்ய அல்ல... கல்லூரியில் உள்ள டாய்லெட்களை பளிச் ஆக்க... மாணவர்களின் சுகாதாரம் முக்கியம்.
மற்ற ஒரு விஷயம்.. எங்கக் கல்லூரி வாயில், பல்கலை கழக நுழைவு வாயில் போல அமைத்துள்ளோம்...... இன்னும் பல முன்னேற்ற பணிகள் தொடரும்... இந்த முன்னாள் மாணவர்களின் பங்களிப்பும் அவர்களின் கல்லூரியின் உயர்வில் இருக்கும் என்று உறுதியளித்துள்ளனர்.... என்று உறுதியாக கூறினார்..


இந்த முன்னாள் மாணவ சந்திப்பை முன்னின்று எடுத்து அனைத்து ஏற்பாடுகளையும் செய்தவர், கல்லுரியின் முன்னாள் மாணவி கௌசல்யாவின் மகள் தீப்தி கோகுல்... “நான் இந்த கல்லூரியில் படிக்கவில்லை. ஆனால் என் அம்மா, குணசேகர் அங்கிள், பன்னீர் செல்வம் அங்கிள், சுப்பையா அங்கிளின் முயற்ச்சி தான், இந்த நிகழ்வின் வெற்றி.. முக. நூல் மூலம் தான் இத்தனை தொடர்புகள்...

கலெக்டரை சிறப்பு விருந்தினராக, கல்லூரி முதல்வர் ஈஸ்வரமூர்த்தி,

2021022408233385.jpeg
அம்மா, நான் இணைந்து அழைத்தோம்... தேர்தல் ஒழுங்குமுறையினால்... அவர் வர இயலவில்லை..

அனைத்து ஏற்பாடுகளையும்... நான் செய்து கொடுத்தேன்...நிகழ்வு கிரேட் சக்சஸ்... அடுத்த மெகா மீட் செப்டம்பர் மாதம்... நடத்தலாம்.. என்று இருக்கிறோம்.... அனைவரின் ஒத்துழைபஎதிர்பார்த்து... என்று முடித்தார்.

செப்டம்பர் மாதத்தை நோக்கி தன் பார்வையை திருப்பியுள்ளது ஊட்டி அரசு கலை கல்லூரி...