
பறக்கும் குடையுடன் குதித்தவுடனே சற்றும் எதிர்பாராத அந்தச் சம்பவம் நிகழ்ந்தது. பறக்கும்குடை பயிற்சியின் முதல் அனுபவமே வசந்த் இத்தனை வித்யாசமாய் அமையும் என்றுஎதிர்பார்த்திருக்க எந்த முகாந்திரமுமில்லை.
குதித்த வேகத்தில் தலை ஜிவ்வென எகிற, அடி வயிற்றில் ஜிலீரென்றிருந்தது. பறக்கும் குடைவிசையைத் தட்டியதும் சட்டென விரிந்து வேகம் மிதப்பட அந்தரத்தில் ஒரு மிதக்கும் பயணம்.பயம் மட்டுப்பட்டதில் கொஞ்சமாய்ச் சிரிக்கலாமா என்று யோசித்தேன்.
அதே வேளை அந்தரத்தில் நேர் கீழே அது வந்து நின்றது. கண் இமைக்கும் நேரத்தில்அதன் வாய் பிளந்து அள்ளிப் போட்டுக் கொண்டு வானத்தை கிழித்துக் கொண்டு மறைந்துபோனது.
*
வசந்திற்கு எதுவுமே புரியவில்லை. நொடியில் மயங்கிப் போனான். விழித்ததும் மெல்ல எழுந்தான். திகிலோடு சுற்றும்முற்றும் பார்த்தான். கணினி மயமாக இருந்தது. அந்தப் பெண் பருத்திஉடையில் கச்சிதமாக இருந்தாள். கனகச்சிதமான உடல்வாகு. ஆனாலும் திடகாத்திரம்.கண்களில் ஊதா நிறத்தின் மிளிரல்.
பறக்குந் தட்டின் இயக்கத்தை நிறுத்தி விட்டு நிதானமாகப் பார்த்தாள். கண்கள் சிரிக்கிறமாதிரி இருந்தது. செல்வா கைக்குட்டை எடுத்து ஒற்றிக் கொண்டான். தொண்டை வறண்டுகொண்டு வந்தது. இவன் கேட்காமலேயே தண்ணீர் கொண்டு வந்து தந்தாள். மடக்..மடக் எனகுடித்தான். இன்னொரு டபரா தண்ணீர் குடிக்கலாம் போல் தோன்றியது. இன்னொரு டபராதண்ணீர் தந்தாள். குளுகோஸ் கலந்த தண்ணீர். மிரட்சியோடு குடித்தான்.
அவள் முதல் முதல் அட்சர சுத்தமாய் பல் வரிசை காட்டி தேவதையாய்ச் சிரித்தாள்.பிரகாசத்தில் கண்கள் கூசின.

இது.. இது எந்த ஊரு..
வாட்?
வாட் ஸ் திஸ் ப்ளேஸ்?
பாரடைஸ்
சொர்க்கமா.. அப்படியொரு ஊர் நமக்குத் தெரிந்து கிடையாதே?
ஒரு மாத்திரை கொடுத்து போட்டுக் கொள்ளச் சொன்னாள். பீதியோடு விழுங்கியதும் ,வெளியேறி கதவைச் சாத்தப் போனாள்.
வசந்த் அவசரமாய்க் குறுக்கிட்டு, நான் போனும்.. என்றான்.
நீ பறையுன்னது மலையாளமாந்நோ..?
நீங்கெ கேரள சுந்தரியா?
பரையு ..
இது மலையாளம் இல்லெ.. ஞான் தமிழன்.. தமிழ்..
தமிழ்?
அதே தாங்க
ய்யா.. ய்யா.. தனக்குத் தானே சொல்லிக் கொண்டே கதவு சாத்தி விட்டுப் போனாள்.
இது தேவையா? நமக்கெல்லாம் பாராசூட் பயிற்சி தேவைன்னு யார் அழுதது? பாசை தெரியாதஇடத்தில் மாட்டிக்கொண்டு.. என்ன இடம் இது? சோறு தண்ணியில்லாமெ தன்னந் தனியா..என்ன செய்யப் போகிறோம்? அதிகம் சிந்திக்கப் பயமாயிருந்தது. பயணக் களைப்புஇமைகளில் வந்து அமர சுகமாய் புஷ்பேக் இழுத்து கொட்டாவி விட்டுத் து£ங்கிப் போனான்.
*
கட்டியிருந்த மின்துகளியல் தொழில்நுட்பம் கொண்ட கடிகாரம் சத்தம் கொடுத்ததில்விழித்துக் கொண்டான். அட! மணி ஏழாயிருச்சா? அலுவலகத்திற்குத் தாமதமாகி விடுமே?
துள்ளியெழுந்தவன் நிசர்சனம் உரைத்ததும் தலையில் தட்டிக் கொண்டான். விடுமுறை தானே.அடச்சீ.. முதலில் இங்கிருந்து வெளியேற வழியைப் பார்.. எப்படி?
சற்று பொறுத்துக் கதவு திறந்து கொண்டு வந்தாள். அதே பிரகசிப்பு. சும்மா சொல்லக் கூடாது.தேவதை மிதந்து வருகிறாற்போல் அலுங்காமல் வந்தாள்.
நல்ல காலை வணக்கம்
ஆ.. தமிழ் பேசறீங்க? ஒரே நாளில் தமிழ்னு ரெபிடெக்ஸ் ஏதாச்சும் புத்தகம்போட்டிருக்காங்களா?
சிரித்தபடி, நேத்து தான் கத்துக்கிட்டேன்.. ஒனக்காகவே..
எனக்காகவா.. ஒரே நாள்லயா.. அய்ய்யோ..
ம்.. என்று இரண்டு கண்களையும் சிமிட்டினாள்.
எப்பிடி?
சுமி கத்துத் தந்தா.. இங்க யார் எத்தனை மொழி வேணா கத்துக்கலாம்..
யாரு சுமி?
என் வீட்டு பணிப்பெண்
எங்கெ?
அவெ பாட்டரிக்கு சக்தியூட்டப் போயிருக்கா..
செல்வா குழம்பிப் போய், சுமின்னா பொண்ணு தானெ?
பொண்ணு மாதிரி
மாதிரியா
அவள் ஒரு இயந்திர மனுசி..
ரொம்ப பயமுறுத்தறீங்க நீங்க..
செல்லமாய் முறைத்து, தமிழ் இனிக்கிற செம்மொழி.. லட்சக்கணக்கான வருசப்பாரம்பரியமுடைய தொன்மையான மொழி.. நீ கொஞ்சம் குதறுறேனு படுது.. கொஞ்சம் சரியாப்பேசேன்.. பொழச்சிட்டுப் போட்டும்..
நியாயந்தான்.. உன்கிட்ட சரியா கத்துக்கிட்டா போச்சி..
முதெ இதெச் சாப்புடு.. என்று மறுபடி ஒரு மாத்திரை நீட்டினாள்.
என்னயிது?
காலை உணவு
ரொம்ப நப்பியா இருக்கீங்களே.. இதுவா காலை உணவு.. பிள்ளையார் கோயில் சுண்டல்அளவு கூட இல்லெ..
சக்தி மாத்திரை
உடனே வாங்கிச் சுயிங்கம் மாதிரி மென்று விழுங்க ஏப்பம் வந்தது.
இப்பவாச்சும் நடந்ததெச் சொல்லேன்..
ரொம்ப நாளாவே பூமிக்குச் சுற்றுலா வரணும்னு அவா. போன வாரந்தான் எங்க அரசாங்கம்ஒப்புதல் தந்தது. ஒரு வேண்டுகோளோடு.
என்னது?
பூமியிலெ இருக்கற மனுசங்க கண்லெ பட்ற வேணாம். பட்டுட்டா ராசயண வெடிகுண்டுபோட்டுடுவாங்க. ரொம்ப ஆபத்தானவங்கன்னு சொல்லி அனுப்பிச்சாங்க..
இது இங்கெ வரை தெரிஞ்சிருச்சா..
ரொம்ப ரகசியமாத் தான் சுற்றுலாவெ நெறைவு செஞ்சிட்டுத் திரும்பினேன். வழியிலெஒன்னெப் பாத்தேன். கொழந்தை மாதிரியிருந்த ஒன் மொகம் பாக்கவே சிரிப்பா இருந்துச்சி.கட்டுப்படுத்த முடியலெ. அள்ளிப் போட்டுட்டு வந்துட்டேன்.
வசந்திற்கு அழ வேண்டும் போலிருந்தது.
எ..துக்கு?
இங்கெ ஆராய்ச்சிக் கூடத்துலெ ஒப்படச்சா ஒதவுமே.. என்றதும், திகீர் என்றது . நாக்குநெளிந்து கொண்டது.
வேணாங்க.. எங்கம்மாவுக்கு நான் ஒரே புள்ளெங்க.. என்றபடி புறங்கையால் கண்ணீரைத்துடைத்து விட்டுக் கொண்டான்.
கலகலவெனச் சிரித்து, பயப்பட வேணாம் இளைஞா.. ஒன்னெப் பாத்துப் பேசினதுமே அந்த
எண்ணம் போயே போச்சி..
அப்போ விட்ருவீங்களா?
அவசரம் எதுக்கு?
விடுமுறை ஒரு வாரந்தான் போட்ருந்தேன்..
ஒரு வாரம் இருக்கே.. என் விருந்தாளியா எங்கெ உலகத்துலெ சில நாள் இருக்கக் கூடாதா?பிற்பாடு ஒரு நாள் ஒன்னெ ரகசியமாக் கொண்டு போயி விட்டர்றேன். இப்ப வெளிய வா.. என்று கை நீட்டினாள்.
ஆராய்ச்சிக் கூடத்துக்கில்லையே?
கலகலவென சிரித்ததில் பறவைக்கூட்டம் இறக்கை படபடக்கப் பறக்கிற மாதிரி சப்தம்கொஞ்ச நேரத்திற்கு இதயத்திற்குள் எதிரொலித்தது.
எங்கெ போறோம்? என்றபடி, அவள் நீட்டிய கையைப் பிடித்தான். ஜில்லென்றிருந்தது.
அபலன் இல்லத்துக்கு..
அபலன் இல்லமா?
அபலைகள் இல்லம் போலெ.. அபலன்களுக்கு..
அப்டீன்னா?
அவள் மறுபடி சிரித்தாள். பற்களில் நட்சத்திரம் சிமிட்டியது.
அனாதரவற்ற ஆண்கள், பெண்களால கைவிடப்பட்டவங்க இப்பிடிப்பட்டவங்களுக்கானபுனர் வாழ்வுக்காக அமைக்கப்பட்டிருக்கிற இல்லம்..
செல்வாவிற்கு வியப்பாய் இருந்தது.
அங்கெதுக்கு?
என் நண்பி உதவியாளியா அங்கெ பணிபுரியறா.. ஒன்னெ நல்லாப் பாத்துப்பா..
அப்போ நீ?
வருவேன். சமயம் பாத்து..
இப்பெக் கூடவரமாட்டியா?
அது உசிதமில்லெ.. அங்கெ தலைமைப் பாதுகாவலரா இருக்கறது என் அம்மா தான்..
ரொம்ப கண்டிப்பா?
ம்
ஒங்க நண்பி கூட்டிப் போக வருவாங்களா
உருவம் காட்டும் தொலைபேசியிலெ தெரிவிச்சிட்டேன்..
ஒங்க நண்பி பேரு?
ஆயிரத்துத் தொளாயிரத்துத் தொன்னு£த்தி ரெண்டு
என்னங்க இத்தினி சின்னதாயிருக்கு பேரு?
மறுபடி அதே புன்னகை.
ஒரு சின்ன வேண்டுகோள்..
என்னெ
சிரிக்கும் போது சொல்லிட்டுச் சிரிங்க..
ஏன்?
தாங்கிக்க முடியலெ. அப்பிடியே சிலுத்துக்குது..
என்னது?
கண்ணுலாம் கூசுதுன்னேன்..
சிரிக்கப் போறேன்..
மறுபடி இதயத்தை அள்ளுகிற அதே புன்னகை.
ஒங்க பேர் என்ன?
வசந்த்
நல்லாருக்கு
ம். ஒங்க பேரு.. மன்னிக்கனும். ஒங்க எண்?
2011
வசந்த் யோசித்து, ஏங்க.. ஒங்களுக்கு ஒரு பேரு வெக்கலாமா.. என்றதும், அவள் கண்களில்மின்னல் தெறிக்க, உம் என்று தலையசைத்தாள்.
யோசித்தான்.
ம்..ம்.. வானத்துல தானெ சந்திச்சோம். அதனாலெ வானா..
வானா.. திரும்பத்திரும்ப சொல்லிப் பார்த்தாள். வசந்த்.. வானா.. வானாவுக்கு வானா..
பிடிச்சிருக்கா?
யௌவனமான பேரு..
பேரு மட்டுமில்லெ என்று அவளைப் பார்த்துச் சிரித்தான். அப்படியே அந்த வாளிப்பானகன்னத்தில் அழுந்த ஒரு முத்தம் உடனே கொடுக்க வேண்டும் போலிருந்தது.
முத்தம் தரணும் போலெருக்கா? என்று கேட்டதும், வெலவெலத்துப் போனான்.
*
அபலன் இல்லம் குகைக் கோயில் மாதிரி அமானுசிய அமைதியோடு இருந்தது. 1992 வந்தாள்.செல்வாவை விட உயரமாய்த் திடகாத்திரமாய்ப் போர் வீரி ரகத்திலிருந்தாள்.பாதுகாவலரிடம் எப்படிப் பேச வேண்டும். எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று சொல்லித்தந்தாள். நுழை வாயிலில் கருப்புக் கண்ணாடி கொடுத்து ,போட்டுக்க என்றாள்.
ஏன்?
ம்.. பாதுகாவல் அதிகாரிக்கு திருட்டு முழி பிடிக்காது..என்று உதடு கடித்துச் சிரித்தாள்.
வானாவின் சிநேகிதி அந்த இல்லத்தின் தலைமைப் பாதுகாப்பு அதிகாரியிடம்அறிமுகப்படுத்தி, புதிது என்றாள். அதிகாரி, கணினி தீவிரமாய் இயக்கிக் கொண்டே, பதிவேட்டில் பதிஞ்சிடு என்றாள். செல்வா கைகுலுக்கியபோது எலும்பு தப்பித்தது ஆச்சர்யம்.
பாதுகாவலர் சென்ற பிறகு கேட்டான்.
இவங்களுக்குத் தமிழ் நல்லாத் தெரியுதே?
தொன்னு£ற்று எட்டு மொழி பரிட்சயம்.. முழுமையான, கவித்துவமான, பல மொழிகளுக்குத்தாய்மொழியான, தமிழ் மொழி படிக்காமல் எப்படி
வுட்டா நு£று போட்ருவாங்க போலெ..
மனம் விட்டுச் சிரித்தாள்.
வாழ்க தமிழ் என்று நினைத்துக் கொண்டான்.
*
மறுநாள். பாதுகாவலர் இல்லாத நேரம். வானா வந்தாள். பொட்டு வைத்த ரவிக்கைகச்சிதமாய்ப் பொருந்தியிருந்தது. மெலிதான கோரா பட்டு கஞ்சிப் பசை போட்டு தேய்த்துப் படுசுத்தமாய் உடுத்தியிருந்தாள். ஊர் சுற்றிக்காட்ட அழைத்துக் கொண்டு போனாள். வசந்த்வண்ண வண்ணப் பொட்டிருந்த ரவிக்கையையே பார்த்துக் கொண்டு வந்தான். அவள்பார்க்காத போது. ரவிக்கையில் கீழ்பொத்தான் விட்டிருந்தது. அவன் இரண்டாவது மனது விட்டிருந்த அமுக்குப் பொத்தானைப் போட்டு விட்டது.
வானா குறுநகையுடன், நன்றி என்றாள்.
எதுக்கு?
கண் சிமிட்டி, பொத்தானைப் போட்டு விட்டதுக்கு.. என்றாள்.
அய்யோ.. வசந்திற்கு என்னவோ போலாகிவிட்டது.
விழிகளில் ஆச்சர்யம் நீங்காமல் கேட்டான்.
எப்பிடி.. ஒங்களாலெ..?
இங்கெ இருக்கறவங்க எல்லாருக்குமே கண்ணெப் பாத்து மனசை வாசிக்கிற சக்தியுண்டு. ஏழாவது அறிவு.
மனசெ வாசிக்கிற சக்தி
அதே
வசந்த் சிரித்துக்கொண்டே, அப்டீனா எங்க ஊரு அரசியல்வாதிங்கள்ல பல பேரு இங்கெவந்தாக் குப்பெ கொட்டறது சிரமம்..
என்னெ?
எதுக்கும் ஒங்கிட்ட இனி கொஞ்சம் எச்சரிக்கையா இருக்கனுன்றேன்..
வானா கலப்படமில்லாத சிரிப்பை அள்ளிஅள்ளிச் சிதறவிட்டாள். அதில் அந்தப் பகுதியே
பளிச்சென பிரகசித்தது. என் மனதும்.
*
பாதுகாப்பு அதிகாரி பறக்குந் தட்டில் நகர் உலா செல்கிற போதெல்லாம் வானா தவறாமல்வந்து சந்திப்பாள். கொஞ்சநாள் தான் என்றாலும் அழுத்தமான பதிவுகள்.
விடுமுறை நெருங்க நெருங்க செல்வாவிற்கு ஊர் ஞாபகம் வந்துவிட்டது. வானாவிடம், போனும் என்றான். வானா ஊடுறுவுகிற மாதிரிப் பார்த்து, நீ.. நீ மட்டுமா? என்றாள். குரல்கரகரத்தது.
நீ மட்டுமான்னா
புரியலையா.. என்று பார்த்த போது வானா கண்களிலிருந்து வைரம் உருகிப் பளீரிடலுடன்திரண்டு வந்தது.
வசந்திற்குத் தாங்கவில்லை.
ஏன்..ஏன் அழறீங்க?
ஒனக்கு ஒன்னு தெரியுமா.. இங்கெ பெண்கள் பொதுவா அழமாட்டாங்க.. சொல்லப்போனாவிவரம் தெரிஞ்சி நா அழறது இதான் முதல் தடவெ..
அதான் ஏன்?
சொல்லத் தெரியலெ.. என்று அவன் கைகளைப் பற்றினாள். சில்லிட்டிருக்கிற அவள்தொடுகை இப்போது வெதுவெதுப்பாகி நரம்பு மண்டலம் கடந்து பரவத் தொடங்கியது. வசந்த்பற்றிய
கைகளை விடவில்லை. அந்த ஊதாக் கண்களை இமைக்காமல் பார்த்தான். தழுவிக் கொள்ளமனது துடித்தது.
வானா, வேணாஞ் சொன்னேனா?
யென்ன?
அணெச்சுக்கனும் போல இருக்குதா..
எப்பிடிச் சரியா.. மனசை வாசிச்சியோ?
இப்பெ நா ஒன் மனசெ வாசிச்சிச் சொல்லலெ.. என் மனசிலிருந்ததெச் சொன்னேன்.. என்று சொல்லி முடிக்கவில்லை..
ஆரத் தழுவிக் கொண்டார்கள்.
வானா தனக்குள் , நல்லவேளை ஒங்களுக்கு மனசெ வாசிக்கிற சக்தி இல்லேலெ.. என்றாள்மகிழ்வுப் பெருமூச்சோடு.
ஏன்?
இந்த கணத்துலெ என் மனசுக்குள்ளெ என்னஎன்னவோ நினைவுகள் அலை புரளுது.. என்றுபுதுவிதமாய்க் கண் சிமிட்டினாள்.
அப்பிடியே அதரம் சிவக்க முத்தமிடனும்னா.. என்றதும், வானாவிற்குள் திக் என்றிருந்தது.
வசந்த்.. எப்புடி.. ஒன்னாலெயும் இத்தனை சரியாச் சொல்ல முடிஞ்சது..
நானும் இப்ப ஒங்கெ மனசுலெ இருந்ததைச் சொல்லலெ.. என் மனசுல இருந்ததெச்சொன்னேன்.. என்றதும், அதரங்கள் சரிவிகிதத்தில் காந்தமாய் ஒற்றிக்கொண்டன. அந்தப்பிரதேசம் கதகதப்பில் போர்த்தப்பட்டது.
நான் உன்னெ..
நானும் உன்னெ..
*
வானா.. ஒங்க வீட்டுக்கு வந்து உன்னெ காதலிக்கிற விசயத்தை சொல்லட்டுமா?
வானாவிற்கு ஆச்சர்யம்.
அச்சச்சோ.. இங்கெ எல்லாம் ஆண்கள் இப்பிடி தைரியமாப் பேசவே மாட்டாங்க. அதோடஇங்கெ காதல் தடை செய்யப்பட்ட வார்த்தை. அப்பிடியே பழக்கப்படுத்திட்டாங்க..பழக்கத்தில் இல்லாததால யாரும் அறியாததுங் கூட.. என்னெத் தவிர.. என்று கிரக்கமாய்ப்பார்த்தாள்.
அப்போ நீ வந்து பாதுகாப்பு அதிகாரிட்ட மாப்ளெ கேக்கப் போறியா?
அதுலயும் ஒரு சிக்கல் இருக்கு காதலனே..
என்னடா சொல்றெ?
என் அம்மாவுக்கு ஒன்னெத் தெரியும். அவங்க நெறைய சம்பிரதாயம் பார்க்கறவங்க..
இங்கெயுமா..
அதோட அபலன் இல்லத்துலயிருந்து மாப்பிள்ளை தேர்ந்தெடுக்க ஒத்துப்பாங்களோஎன்னவோ?
வானா உதடு துடித்தது.
எங்கயாவுது கண் காணாத இடத்துக்குப் போயிடலாமா?
வசந்திற்கு உடனே அந்தத் திட்டம் பளிச்சிட்டது.
பூமிக்குப் போயறலாமா?
நல்ல திட்டம்..
வானா குதூகலத்தில் துள்ளினாள்.
வசந்த் பரபரப்பானான். எப்போ.. எப்பிடி?
ஒங்க வார்டனுக்குப் பிரத்யேகமாப் பறக்கும் தட்டு அரசாங்கம் தந்திருக்கில்லையா.. என்நண்பி கிட்டச் சொல்லி அதெ எப்பிடியாவுது ஏற்பாடு செய்யக் சொல்றேன்..
அப்படின்னா, பூமிக்குப் போறதுக்கான செயல்முறைத் திட்டத்தெத் தயாரிச்சி அந்தக்கணினியிலெ செலுத்திட்டு, சாவியெ நம்மகிட்டெ தரச் சொல்லிரு..
ம்
எப்பெக் கௌம்பறது?
இன்னிக்கி ராத்திரி பனிரெண்டு மணிக்கி.. அம்மா கண்லெ படாமெ கிளம்பி வந்துரு..வெளியெ சிறப்பு வாகனத்துலெ நண்பியோட காத்திருப்பேன்..
*
மனித இயந்திரம் பனிரெண்டு முறை கூவியது. எழுந்து கொண்டான். எங்கும் நிசப்தம். மனசுதவிர. இதயத்திற்குள் தடக்..தடக். பாதம் அலுங்காமல் மூச்சைப் பிடித்துக் கொண்டு மெல்லமெல்ல நடந்தான். திக்கென உணர்ந்தான்.
ஒரு கரம் தோளில் அழுத்தியதும் விதிர்த்துப்போய் திரும்பினான். பாதுகாப்பு அதிகாரி.
உடம்பெல்லாம் தெப்பலாய் வியர்வை பீய்ச்சிக் கொண்டு புறப்பட்டது.
என்ன பண்றெ
வசந்திற்கு நாக்கு ஒட்டிக் கொள்ள, ஒரு விரல் காட்டினான்.
கொட்டாவி விட்டபடி, ம்.. பயமாயிருந்தா தொணைக்கி என்னெக் கூப்பிட வேண்டியதுதானெ..
பரவாயில்லெ..
தனியாப் போயிருவியா?
ம்ம்
ச்சரிப் போ..
பாதுகாப்பு அதிகாரி மறுபடி கட்டிலில் போய் விழுந்தாள்.
யப்பாடா..
*
1992 வானாவை கட்டிப்பிடித்து பிரிவாற்றாமை தாளாமல் முத்தமிட்டாள். இருவரும் கையைஉயர்த்தி ஓசைப்படாமல் தட்டிக்கொண்டார்கள். வசந்த் வந்ததும் வானா தயாராயிருந்த ஊர்திமின்னலாய் சொடுக்கிக்கொண்டு பறக்குந்தட்டு இருந்த பிராந்தியத்திற்கு விரைந்தது.
பறக்கும் தட்டிற்கு அருகாமையில் போய் நச் என நிறுத்தி நிம்மதிப் பெருமூச்சுவிட்டபோது, அந்தச் சத்தம் கேட்டது. கையில் லேசர் துப்பாக்கியுடன் பாதுகாப்பு அதிகாரி ஓடி வந்துகொண்டிருந்தாள். சற்று நேரத்திற்கு முன் தன் தோளைத் தொட்டுத் திருப்பும்போது என்கண்கள் வழி மனதை வாசித்தறிந்து கொண்டு விட்டது இப்போது தான் வசந்திற்கு உறைத்தது.
பதற்றத்தில் ஓட முற்பட கால்கள் குழம்பிப்போய் தடுமாறியதில் இருவரும் எகிறிப்போய் குப்புறவிழுந்தார்கள். புழுதியில் மூழ்கியெழுந்து மனதின் அத்தனை விசைகளையும் ஒன்றாய்ச்செலுத்தி ஓடினார்கள்.
பறக்கும் தட்டு கதவை எட்டியபோது தான் குபீரென்றது. ச்சே சாவி எங்கே? கீழே
விழுந்திருக்குமோ? அதற்குள் சமீபித்து விட்டாள். உதட்டோரம் புரிந்துகொள்ளமுடியாதஉணர்வின் கெக்கலிப்பு. ஆட்காட்டி விரல் நுனியில் சாவி சுழன்று கொண்டிருந்தது.வானாவிற்குள் எதிர்ப்பின் வீரியம். வசந்த்தை முதுகில் மறைத்துக் கொண்டு அம்மாவைநேருக்கு நேர் தீர்க்கமாய்ப் பார்த்தாள்.
நீ இப்போ அம்மாவாத் தெரியலெ.. இயந்திரத்தோட இயந்திரமாகிப் போன நங்கையாத் தான்தெரியறெ.. நேசத்தோட அர்த்தத்தெ அகராதியிலயிருந்து அப்புறப்படுத்திட்ட ஜடப் பொருள்.வா..வா.. காதலோட எமனே.. வா.. எங்கெ காதல் இதயத்தெத் தொளச்சி ஒன் வெறியெத்தணிச்சிக்கோ..!
வானா கைகளால் பின்னால் கூடி வசந்த்தை கட்டிக்கொண்டு துணிவோடு பார்த்தாள். மனசுகாதலின் வர்ணத்தில் வானவில் வரைந்து கொண்டிருக்க, அம்மா மிக அருகில் வந்து நின்றுவிழி உருட்டிக் கம்பிரமாய் பார்த்தாள்.
பார்வையோடு பார்வை. விழி நகர மறந்து நின்று கொள்ள, வானா நெஞ்சுக்குள் குதித்தாடும்உணர்வலைகள் காதல் கொண்டு ரொம்பிப் பாயும் பார்வை. அப்பார்வையில் செருகிஇதயத்தில் வண்ணங்களின் தீட்டலாய் வார்த்தை கடந்த வர்ணஜாலம் செறிந்தது. அம்மாஅசையவில்லை.
லேசர் துப்பாக்கி வைக்கப்பட்டிருந்த இடுப்பு நோக்கி நகர்ந்தது கரம். அதன் அருகில் இருந்தசாவி எடுத்து நீட்டினாள். விரல்கள் துடித்தன. அம்மாவின் கண்களில் ஈரம்.
வாழ்வின் உன்னதம் கற்றுக் கொண்டதற்கான நன்றி பார்வையில் மிளிர, அம்மாஉற்சாகத்துடன் கட்டை விரல் உயர்த்திக் காட்டினாள்.
அடுத்த நொடி பறக்கும் தட்டு இயங்கத் தொடங்கி ஜிவ்வென வென எவ்வியது. உயரே பார்த்தபடி அம்மா மகிழ்வின் உச்சஸ்தாயியில் பிரெஞ்சு மொழியில் கத்தினாள்.
வீவிலாமூர்
பின்குறிப்பு:
வீவிலாமூர் என்றால் காதல் என்று அர்த்தம் என்பதை சொல்லவும் வேண்டுமா?


Leave a comment
Upload