தொடர்கள்
கதை
சிக்னல் காதல்! முனைவர் என். பத்ரி

20260729075933921.jpeg

அந்த வெள்ளிக்கிழமை திட்டமிட்டபடி நான் பெண் பார்க்க கிளம்பினேன்.போன இடத்தில் அந்தப் பெண்ணை பார்த்தேன். அதே பெண். ஆச்சரியத்தில் விழுந்தேன்.அதே கண்கள்.அதே சுறுசுறுப்பு. எல்லோரிடமும் விசாரிப்பு இப்படியும் ஒரு பெண்ணா?

என் பெற்றோரின் மனதைக் கவர்ந்துவிட்டாள்.நான் இதைத் தானே எதிர்பார்த்தேன்.என் மனதெல்லாம் மத்தாப்பூ.

ஓர் ஐந்து நிமிடத்தில் திருமணம் பார்க்கும் சடங்கு முடிந்தது.

’தனியாக பேச வேண்டுமா?’அவளேதான் கேட்டாள்.

நான்தான் நேற்றே பேசி விட்டேனே?இல்லை இல்லை பார்த்து விட்டேனே? என்றேன்என் மனதுக்குள்.

'அது எல்லாம் வேண்டாம். பெண்ணுக்கு சரி என்றால் எனக்கும் சரிதான்’ என்றேன்அவசர அவசரமாக,

அவள் தான் அணிந்திருந்த பச்சை புடவை முந்தானையால் எனக்கு பச்சைக் கொடியைக் காட்டினாள்,எனக்கு மட்டும் புரியும்படி.

நாங்கள் எங்களுடைய கைப்பேசி எண்களை பரிமாறிக் கொண்டோம். மீதியை இன்று மாலைபேசிக் கொள்ளலாம் என்று அவளிடம் சொன்னேன்.

அவள் எதார்த்தமாக,’ 7:00 மணிக்கு பிறகு’ என்றாள்.

’இனி என்ன பேசினோம்’ என்று உங்களுக்கு சொல்ல முடியாது. இது கணவன் மனைவிக்குள்இருக்கக்கூடிய அந்தரங்க விஷயங்கள். ஆனால்.... நேற்று சிக்னலில் நடந்த சமாச்சாரம் !

முதல் நாள் மாலை……

என்னுடைய அலுவலகத்திலிருந்து நான் திரும்பிக் கொண்டிருந்தேன். சென்னையில்போக்குவரத்து நெரிசல் வழக்கத்தை விட அன்று சற்று அதிகம்தான். நாளை முகூர்த்த நாளாம்.

என்னுடைய இருசக்கர வாகனத்தில் அந்த சிக்னலில் வலப்புறத்தில் நின்றுகொண்டிருந்தேன். பின்னால் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டது ஓர்ஆம்புலன்ஸ்.அது வேகமாக தன்னுடைய ஒலிப்பானை மிக சப்தத்துடன் ஒலித்துக்கொண்டிருந்தது. அது ஒலிக்கும் விதம்,’உள்ளே உள்ள நோயாளிக்கு அவசர சிகிச்சைதேவை’ என்பதை சொல்லிக் கொண்டிருந்தது. ஆனால் போக்குவரத்து நெரிசலின் சிக்கலால்அந்த ஆம்புலன்ஸுக்கு வழியே கிடைக்கவில்லை.

அந்த நேரத்தில்தான் அது நிகழ்ந்தது. அந்த பெண்ணுக்கு 25 வயது இருக்கும். எனக்கு பக்கத்தில்தான் அவளுடைய கார் இருந்தது. காரை விட்டு இறங்கிய அவள் போக்குவரத்துநெரிசலை சில நொடிகளில் விரைவாக செயல்பட்ட்டு ஒழுங்குப்படுத்தினாள்.

இந்த வயதில் இப்படி ஒரு சமூகப் பொறுப்பு எடுத்துக் கொள்ளும் அவளுடையமனப்பக்குவம் என்னை மிகவும் கவர்ந்தது. சுடிதார் உடையில் இருந்த அவள், மிகுந்தகவனத்துடன் வாகனங்களை ஒழுங்குபடுத்தினாள்.

சில நிமிடங்களில் அவளது முயற்சியால் போக்குவரத்து சீரானது.

’அவளை எப்படி பாராட்டுவது?’ என்று எனக்கு தெரியவில்லை. சிக்னலில் பச்சைவிளக்கு எரிந்தது. நான் புறப்பட்டேன். எனக்கு முன்பே விரைவாக செயல்பட்ட அவள் காரில்போய்விட்டாள்.

‘இவளைப் போன்ற ஒருத்திதான் எனக்கு மனைவியாக வரவேண்டும்’எண்ணிக் கொண்டே வீடு போய்சேர்ந்தேன்.அன்று இரவெல்லாம் அவள் நினைவு மிகவும் வாட்டியது

இவளின் வீரமும், மனப்பக்குவம் ஆயிரத்தில் ஒரு பெண்ணுக்குத்தான்இருக்கும்.பாரதி இன்று இவளைப் பார்த்திருந்தால் மிகவும் மகிழ்ந்திருப்பான்.

இன்று நடந்துதான் உங்களுக்குத் தெரியுமே?