தொடர்கள்
கவர் ஸ்டோரி
மிஸ்.யுனிவர்ஸ்….கேரளத்திலிருந்து.!!! - ஸ்வேதா அப்புதாஸ்

கேரளம் மாநிலத்திற்கும் மக்களுக்கும் 19 வயது இளம் மங்கை மிக பெருமையை பெற்று கொடுத்துள்ளார் கஸியா லிஸ் மெஜோ.
20260726180817548.jpeg
கடந்த 23 ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் ஜீ ஸ்டுடியோவில் மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2026 அழகி போட்டி நடைபெற்றது.
இதில் நாடு முழுவதும் இருந்து 52 இளம் பெண் போட்டியாளர்கள் கலந்து கொண்டு கலக்கினார்கள்.
இதில் 19 வயது கேரளாவை சேர்ந்த சட்ட கல்லூரி மாணவி கஸியா லிஸ் மெஜோ மிஸ் இந்தியா 2026 பட்டத்தை வென்று உலக அரங்கிற்கு தேர்வு செய்யப்பட்டு கேரளா மாநிலத்திற்கு இந்த வருட ஓணம் பரிசாக கொடுத்துள்ளார் என்பது இனிப்பான செய்தி.

கஸியா கேரளா மாநிலம் மாவெலிக்கரை பகுதியை சேர்ந்தவர்.
2007 ஆம் ஆண்டு ஏப்ரல் 17 ஆம் தேதி ஆலப்புழா மாவட்டம் கரிப்புழா ஊரில் மெஜோ ஆப்ரகாம், சுஜா மெஜோ தம்பதியினருக்கு பிறந்தவர்.

சிறு வயதில் அபுதாபியில் வளர்ந்தவர். எமிரேட்ஸ் பள்ளியில் ஆரம்ப கல்வி பயின்று பின்னர் செயின்ட் ஜோசப் பெண்கள் பள்ளியில் உயர் கல்வி பயின்று மேல் நிலை வகுப்பை அபுதாபி அல் வாதாபா இண்டியன் பள்ளியில் முடித்து விட்டு கல்லூரி படிப்பை இந்தியாவில் தொடர்ந்துள்ளார்.
2012 ஆம் ஆண்டு அபுதாபியில் இந்திய பாரம்பரிய நடனத்தில் பயிற்ச்சி எடுத்தார்.
மேலும் இசை பக்கம் திரும்பி வயலின், ட்ரம்ஸ், என்று கற்றுக்கொண்டு உடன் கராத்தே பயின்று பிரவுன் பெல்ட் வீரர் இவர்.
இத்தனைக்கும் உறுதுணையாக ஊக்குவித்து சிறு வயதில் இருந்தே உயர்த்தியவர் என் அம்மா தான் என்று கூறுகிறார்.
தற்போது வென்ற இந்த அழகி போட்டிக்காக கஸியா ஏற்கனவே பல வெற்றிகளை கடந்து வந்துள்ளார்.
2022 ஏப்ரலில் அபுதாபியில் பள்ளி படிப்பு படிக்கும் போது மிஸ் இண்டியா
போட்டியில் முதல் இடத்தை வென்றுள்ளார்
2024 ஆம் வருடம் 12 ஆம் வகுப்பு படிக்கும் பொழுது Miss Teen Diva 2024 போட்டியில் வென்று அந்த கிரீடத்தை இந்தியாவுக்கு எடுத்து வந்தார்.
இன்டர்நேஷனல் மிஸ் டீன் 2025 போட்டியில் கலந்து கொண்டு இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார்.
2026 ஆம் ஆண்டு மே மாதம் கேரளாவில் போல்காட்டி கிராண்ட் ஹயாத் கொச்சியில் நடைபெற்ற Beena Kannan Couture Miss Universe போட்டியில் முதல் இடத்தை பெற்று தேசிய போட்டியில் கலந்து கொண்டு உலக அரங்குக்கு தேர்வாகி தற்போது 75 வது Miss Universe உலக அழகி போட்டி Puerto Rico வில் உள்ள San Juan நகரில் Miss Universe Pageant 2026 நவம்பர் மாதம் நடைபெறவுள்ளது.
இந்த போட்டியில் கலந்து கொள்ள இந்தியாவின் சார்பாக தேர்வாகியுள்ளார் இந்த கேரளத்து நங்கை கஸியா.

இந்த போட்டி நடக்கும் நகர் அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள வடகிழக்கு கடற்கரை ஓரத்தில் அமைந்துள்ள பெரிய தீவு நகரமான San Juan.
20260726180955863.jpeg

52 அழகி போட்டியாளர்களில் இவரை உலக அரங்கிற்கு தேர்வு செய்தவர்கள் பாலிவுட் நடிகையும் இந்தியாவின் முதல் மிஸ் யூனிவெர்ஸ் சுஸ்மிதா சென், முன்னாள் இந்திய மிஸ் யூனிவெர்ஸ் மற்றும் நடிகையுமான ஊர்வசி ரௌட்டலா, 2024 மிஸ் யூனிவெர்ஸ் ரேஹா சிங்கா,
சுற்றுசூழல்ஆர்வலர் மற்றும் சினிமா தயாரிப்பாளர் பிரக்யா கபூர் மற்றும் முன்னாள் மிஸ் யூனிவெர்ஸ் இண்டியா செலீனா ஜைதிலி.
இவர்களின் கேள்விகளுக்கு பளிச் பதிலை கொடுத்து அசத்தியுள்ளார் கஸியா .

தன் 17 வது வயதில் கஸியா 'ஷைல்லாக்' என்ற மலையாள படத்தில் மம்முட்டியுடன் கதாநாயகியாக சினிமாவில் என்ட்ரி கொடுத்துள்ளார்.
தான் மிஸ் யூனிவெர்ஸ் போட்டிக்கு தேர்வு செய்ய பட்டவுடன் மெய்சிலிர்த்து போய்விட்டாராம்.
அதிலும் கேரள நாட்டின் முதல் நங்கை உலகரங்கில் தேர்வாகியுள்ளதை நினைத்து பார்க்கும் போது ஷாக்காக இருக்கிறது என்கிறார் இந்த ஸ்மார்ட் அழகி.
இந்த போட்டியில் வெற்றி பெற்றவுடன் மனம் திறந்து பேசியுள்ளார் கஸியா
" தன் உடல் தோற்றத்தில் எதோ ஒரு குறைபாடு இருப்பதாக கவலை உள் மனதில் உள்ளதாகவும் பெண்கள் எண்ணுகிறார்கள் அதில் நானும் விதிவிலக்கல்ல என்கிறார்.
அதனால் தான் பெண்கள் அழகை தேடுகிறார்கள்
அதனால் தானும் இந்த அழகி போட்டிக்கு வந்துள்ளேன் என்று எண்ணுகிறேன் என்கிறார் கூலாக.

மேலும் மாதவிடாய் காலத்தில் சுற்றுசூழல் பாதிக்காத வகையில், மறுபயன்படு செய்யக்கூடிய பொருட்களை நேப்கின்ஸ் பயன்படுத்துவது மற்றும் எப்படி கழிவுகளைக் குறைப்பது என்பதை பெண்கள் உணர்ந்து செயல் படுத்த வேண்டும் என்பதை தான் பெண்கள் மத்தியில் Spirit Eco Health என்கிற எங்கள் குழு மூலம் பெண்கள் மத்தியில் எடுத்து சென்றுள்ளேன் என்கிறார் இந்த கேரள அழகி.

இவரின் இந்த முயற்ச்சியை பாராட்டி டாக்டர். சசி தரூர் உன்னத விருதை இவருக்கு வழங்கியுள்ளார்.
தற்போது பெங்களூருவில் உள்ள சட்ட கல்லூரியில் சட்டம் படிக்கும் இந்த அழகி நவம்பர் மாதம் உலக அழகியாக திரும்புவது உறுதி என்கின்றனர் கேரளத்து வாசிகள்.
" எங்கள் கேரளா உலக அரங்கில் அழகியாக போகிறாள் எங்கள் கஸியாவால் என்கிறார்கள்.
இந்த மிஸ் யூனிவெர்ஸ் போட்டி தேர்வில் கஸியாவுக்கு அடுத்து தேர்வு செய்ய பட்ட தமிழகத்தை சேர்ந்த வைஷ்ணவி கணேஷ், குஜராத்தை சேர்ந்த அனுஸ்ரீ சதாவ்லேகர் இருவரும் இந்த வருட மிஸ் யூனிவெர்ஸ் எங்க கஸியா தான் என்கிறார்கள் உறுதியாக.
அவர்களின் பாராட்டினால் உச்சிகுளிர்ந்து போயுள்ளார் நம் கேரளத்து பைங்கிளி கஸியா லிஸ் மெஜோ.
20260726181044143.jpeg

கேரள முதல்வர் சதீசனை சந்தித்தபின் " என் வெற்றிக்கு முதல்வர் வாழ்த்து கூறி அனுப்பிவைத்துள்ளார் 75 வது உலக அழகி போட்டிக்கு என்னை தயார் படுத்தி கொள்ள போகிறேன்.


எப்படி சுஸ்மிதா சென்(1994), லாரா டட்டா(2000), ஹர்னாஸ் சந்து (2021)மூன்று உலக அழகி கிரீடத்தை எடுத்து வந்தார்களோ அது போல
நான் நம் இந்திய நாட்டிற்கு நான்காவது உலக அழகி கிரீடத்தை கொண்டுவரப்போகிறேன் என்கிறார் இந்த கஸியா சேச்சி தன் அழகிய சிரிப்பால்.

அப்படியே இரண்டாவதாக வந்த வைஷ்ணவி கணேஷையும் இங்கு எழுதவில்லை எனில் சுஜாதா சொல்வது போல பசித்த புலி நம்மை தின்று விடும்.

20260729070935881.jpg

முதல் ரன்னர் அப் வைஷ்ணவி கணேஷ்.

20260729071011413.jpg

அப்படியே ஒரு குரூப் போட்டோ...

2026072907110012.jpeg