“செய்யும் தொழிலே தெய்வம் அந்தத் திறமை தான் நமது செல்வம்.;
கையும் காலும் தான் உதவி - கொண்ட கடமை தான் நமக்குப் பதவி.”
கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.
ஆடிட் வேலையாக வெளியூரில் இருந்த எனக்கு, ரம்யாவுடமிருந்து மொபைல் வரவும், எடுத்து பேச ஆரம்பிக்கும் முன்பே விசும்பல் சப்தம் .
“என்ன ரம்யா என்னாச்சு?”
“அப்பா,!நான் எதிர்பார்த்த மாதிரி பி.எஸ். சி பிசிக்ஸ் ஃபர்ஸ்ட் கிளாஸ் இல்லப்பா?”
“பின்னே என்ன செகண்ட் கிளாஸா? “ஆர்வம் தாங்க முடியாமல் கேட்டேன்.
இப்போ விசும்பல் சத்தம் அதோடு கூட அழுகையும் சேர்ந்து கேட்டது. மொபைல் இப்போ என் மனைவி வசம்.
“ரம்யா ஃபெயில்ன்னு வந்துருக்கு. எனக்கு ஒண்ணுமே புரியல.அவ ஃப்ரெண்ட்ஸ்கள் வந்து” என்ன ரம்யா இப்படி ஆச்சு?. எதிர்பார்க்கலையே. ? துக்கம் விசாரிக்கற மாதிரி விசாரிசுட்டு போறாங்க.”
“ரம்யா கிட்ட ஃபோன் குடு”
“ரம்யா செல்லம் இதுக்காகக் கவலைப்படாதே.? செப்டம்பர் எக்ஸாமில் க்ளியர் பண்ணிடலாம். எனக்கு நாளை வேலை முடிஞ்சதும் நைட் கிளம்பி வந்துடுவேன். பிராபசர்கிட்ட கேட்டுகிட்டு அடுத்த நடவடிக்கை எடுப்போம்.சரியா.”
ரம்யாவை சமாதானப்படுத்தி அப்படிப் பேசினாலும், என் மனசும் கஷ்டமாகத் தான் இருந்தது.
பத்து நாள் முன்பு அவளுடைய புரோபசர் சிவகுமாரை மார்கெட்டில் சந்தித்துப் பேசும் போது, என் கிளாஸ்ல 10பேர் ஃபர்ஸ்ட் கிளாஸ் ;அதில் கோல்ட் மெட லிஸ்ட் ஒங்க ரம்யா. வாட் ஏ பிரில்லியன்ட் ஸ்டூடண்ட். நல்ல எதிர்காலம் இருக்கு சார் என்று வாழ்த்திவிட்டுப் போனது ஞாபகத்துக்கு வந்தது..
இப்ப அவ எதிர்காலம் இருண்டு போயிடுச்சே!
மறுநாள் சிவகுமார் சாரை அவர் வீட்டில் சந்தித்துப் பேசும் போது,” எனக்கே அதிர்ச்சியாகத் தான் இருக்கு ஆடிட்டர் சார்”.
அவளுக்குப் பிடித்த சப்ஜெக்ட் இண்டஸ்ட்ரியல் எலெக்ட்ரானிக்ஸ் அதில் ஃபெயில் என்று இருக்கும் போது நம்ப முடியவில்லை.”!
என்ன செய்யலாம்? என்று கேட்டபோது
ரம்யா நீரீ டோட்டலிங், ரீ வால்யுசன் , அப்புறம் உன் விடைத்தாளின் ஃபோட்டோ காபி அனுப்ப சொல்லி ஒரு அப்ளிக்கேஷன் அதற்குண்டான கட்டண தொகை டிமாண்ட் ட்ராப்ட் எடுத்து உடனே யுனிவர்சிடிக்கு இன்னிக்கே ரெஜிஸ்டர் தபாலில் அனுப்பு.”
“சார் !இன்னும் ஒரு மாதத்துக்குள் எம். பீ ஏ கோர்ஸ் அப்ளை பண்ணனும்.
அதற்குள் நல்ல ரிசல்ட் கிடைக்குமா சார்.? “
“நிச்சயம்.கிடைக்கும். மனசு போட்டு குழப்பிக்காதே. “ஆல் த பெஸ்ட்.”
என்னதான் பிரபசர் பாசிடிவா பேசினாலும் ,பதில் வரும் வரை கவலையாகத் தான் எனக்கும் சரி,ரம்யாவுக்குச் சரி.இருந்தது.
இருபது நாள் கடந்து விட்டது. யுனிவர்சிட்டி யிலுருந்து எந்தப் பதிலும் வரவில்லை.
பதட்டமான ரம்யாவிடம், “பதட்டபடாதே நான் நேரேயூனி வர்சிடி போய்ப் பாத்துட்டு வரேன்” .
மேலதிகாரியிடம் விசயத்தைச் சொன்னதும்,
“லீவ் போடவேண்டாம் வாசு. நம்ம கிளின்ட்க்கிட்ட சொல்றேன். நீங்க அவர் அனுப்பும் நபருடன் என்ன ஆச்சுன்னு பாத்துட்டு வாங்க. ஆல் த பெஸ்ட்.”
மறுநாள் அவருடன் காரில் பயணித்து யுனிவர்சிட்டி வளாகத்தை அடைந்த போது, என்னை மாதிரி நிறையப் பெற்றோர்களின் உள்ள குமுறல்களைப் பார்க்க நேர்ந்தது.
“என் பையன் எம்.எஸ் படிக்க யூ.எஸ் போக அப்ளை பண்ணனும் சார். ஜி.ஆர்.இ டோபெல் எக்ஸாம் க்ளியர் பண்ணிட்டான் .ஆனால் டிகிரி ஃபெயில் ன்னு வந்திச்சு. அப்படி நடக்க வாய்ப்பு இல்லைன்னு சொல்றான்
.
ரிடோட்டல், ரீ வால்யு எல்லாம் அப்ளை பண்ணி ஒரு மாசம் ஆகுது; இன்னும் ஒன்னும் தெரியல. இன்னிக்கு வா நாளைக்கு வா அலை கழிக்கிறாங்கா சார். “
இன்னொரு பெண்மணி “என் பொண்ணுக்குக் கல்யாணம்.நிச்சயம் பண்ணியாச்சு. மாப்பிள்ளை கனடாவில்.என் பொண்ணு டிகிரி ஃபெயில் ன்னு தெரிஞ்சதும் இந்தச் சம்பந்தம் வெண்டாம்ன்னு சம்மந்தி வீட்டிலே சொல்றாங்க. என் பொண்ணு நல்ல படிக்கிற பொண்ணு சார். நல்ல சம்பந்தம் இந்தப் பிரசினையினல் நழுவி போயிடுமோ என்கிற கவலை சார்.
ஒவ்வொருவரும் இப்படித் தாங்கள் ஆதங்கத்தைச் சொல்லும் போது வாசுவுக்கு மனது கனத்த்து.
ஒவ்வொருவருக்கும் மனப் போராட்டங்கள் மன உளைச்சல்கள் கேள்விப்பட்டதும் யுனி வர்சிட்டி மீது கோபமாக வந்தது.
கூட வந்த நண்பர் யாரிடமோ பேச ,அவர் உடனே நேர்முக உதவியாளரை சந்திக்கச் சொன்னார்.
“சார் இன்னும் வரல!. ஒங்க அப்ளிகேசனை அவர் வந்ததும் கொடுக்கிறேன் ; என்ன ரிசல்ட் என்பதை இன்பார்ம் பண்றேன்;.
நீங்க ஒரு அரை மணி நேரம் கழிச்சு வாங்க” என்று சொல்லவும். வெளியே வந்தார்கள் இருவரும்.
“ஒரே தலைவலியா இருக்கு காஃபி சாப்பிட்டு வருவோம் என்று நண்பர் கூப்பிட கேன்டினில் காஃபி குடித்துவிட்டு ,நேர்முக உதவியாளர் அறைக்குப் போக மாடிப்படிகளில் ஏறும் போது ஒருவர் கையில் சில பைல்களுடன் , என் மீது மோத நானும் சாரி சொல்ல, அவரும் சாரி சொல்ல ,இருவரும் நிமிர்ந்து பார்த்த போது. “டேய் வாசு நீயா ? “என்று கேட்கவும் “டேய் கார்த்தி நீயா? என்று நானும் கேட்கவும், இருவரும் சூழ்நிலை மறந்து கட்டிகொண்டோம்.
பக்கத்துச் சேரில் பேச ,”ஆமாம் கார்த்தி நீ டெல்லியில் தானே இருந்தே இங்கே எப்படி?.
“அது பெரிய கதை. அப்புறமா சொல்றேன்”.
“பை த பை இவர் எங்க கிளின்ட்.ஆபிஸ் நண்பர். இவர் மூலம் தான் இங்கே வந்தேன்.”
நண்பரும் கார்த்தியும்” ஹை “சொல்ல டீ ஆர்டர் பண்ணட்டுமா வாசு.”என்றான்
“இல்ல கார்த்தி இப்ப தான் சாப்பிட்டு வரோம்”.
“என்ன இவ்வளவு தூரம்.உன் சுட்டி ரம்யா என்ன படிக்கிறா?”
நடந்தவற்றைக் கார்த்தியிடம் சொல்ல ஆரம்பித்தேன்.
“யூ டோண்ட் ஒரி கம்யூட்டர் செக்சன்ல தான் வொர்க் பண்றேன். ரம்யா எக்சாம் நம்பர் கொடு.”குறித்துக்கொண்டான் கார்த்தி.
வந்த நண்பரிடம் நானும் கார்த்தியும் பிளஸ் 2,வரைக்கும் ஒண்ணா படிசசவங்க. டெல்லி போனவன் ஒரு முறை என் குடும்பத்தைப் பாத்துட்டு போனவன் . இப்ப தான் பார்க்கும் படி நேர்ந்துருக்கு !
என்றேன்.
அடுத்தப் பத்தாவது நிமிடம் “டேய் வாசு ரம்யா அந்தச் சப்ஜெக்ட் ஃபெயில் இல்லைடா பாஸ் தான். எவ்வளவு மார்க் என்ன கிளாஸ்ன்னு சொல்ல கூடாதுடா”.
“பத்து நிமிசம் வெயிட் பண்ணு நானே நேரில் ரிஜிஸ்டரார் கிட்ட அழைச்சுட்டு போறேன்”!
சொன்னபடியே அவரிடம் அழைத்துப் போய் ரிவைஸ்டு மார்க் ஷீட் வாங்கிக்கொடுத்து வேண்டிய ஏற்பாடுகள் பண்ணியது மட்டுமல்லாமல், ரம்யா கை எழுத்து போட்டு வைத்து இருந்த எம் பீ. ஏ அப்ளிக்கேஷன் பாரத்தைப் பூர்த்திச் செய்து செய்து பியூன் மூலம் டிமாண்ட் ட்ராப் ட் வாங்கி வரசொல்லி சம்பந்தபட்ட செக்சனில் சேர்த்து விட்ட பிறகுகார்த்தி என்னிடம் மார்க் ஷீட் காண்பித்த போது இண்டஸ்ட்ரீஸ் எலக்ட்ரானிக்கில் 62சதவீதம் என்று இருந்தது.
கார்த்திக் சூசகமாகச் சொன்னது இதற்காகத் தானா?
எப்படிக் கார்த்தி இந்தத் தவறு?
கம்ப்யூட்டரில் டேட்டா என்றி போடும் போது இண்டஸ்ட்ரீஸ் எலெக்ட்ரானிக்ஸ் கோட் Z 26 ஐ அப்படியே போட்டுள்ளார்கள்.உண்மையில் ரம்யா வாங்கிய மார்க் 62.
நம்ம அக்கவுண்டன்ஸியில படித்து இருப்போம்.மாற்ற தோற்ற பிழை. Malification of Eye.அப்படி நடந்த தவறு தான். இது. சூப்பர்வைசர் பார்வையிலிருந்து இது தப்பி உள்ளது. அதுக்காக நான் மன்னிப்புக் கேட்கிறேன் வாசு.”
என்றான் கார்த்தி.
“வெளியே வந்து பாரு கார்த்தி!,என்னை மாதிரி எவ்வளவு பெற்றோர்கள்,மாணவ மாணவியர்கள் மன உளைச்சலை பார்க்கும் போது அவங்க எதிர்கால வாழ்க்கையை இதனால் சூனியமாக ஆகிவிடும் போல் இருக்கு!.
கடவுள் அருளால் நீ எனக்கு உதவி செஞ்சே.என் பிரச்சனை தீர்ந்தது.மத்தவங்களுக்கு யார் உதவி செய்வாங்க?”
“ஒன் ஆதங்கம் வருத்தம் எனக்குப் புரியுது. இது கடல் மாதிரி இப்படித் தவறுகள் நிறைய நடக்க வாய்ப்பு இருக்கு”.
ஓகே வாசு !பீ ரிலாக்ஸ்.ரம்யாவை கேட்டதா சொல்லு.
கார்த்திக்கு மீண்டும் ஒரு முறை நன்றி சொல்லி விட்டு வெளியே வந்த போது,கூட வந்த நண்பர்,
“சார் தப்பா நினைக்கக் கூடாது. இன்பாக்ட் ஒங்க நண்பர் சரியான நேரத்தில் உதவி பண்ணி உள்ளார்.அதில் நோ டவுட்.ஆனா இங்கு நடக்கும் குளுறுபடிகள் பற்றி அவரால் பேச முடியாது. அவர் நிலைமை அப்படி”.
எந்த வேலையையும் சுயநலமின்றிப் பிறர் நலத் துக்காகச் செய்ய வேண்டும்.அதில் கடமை உணர்வு இருக்க வேண்டும்.
செய்யும்தொழிலே தெய்வம் அந்தத் திறமை தான் நமது செல்வம். என்று பட்டுக்கோட்டையார் அறுபது வருஷம் முன்னாடியே பாடி விட்டார். ஆனா அது காத்துல போயிடுச்சு.”
“இது முழுக்க முழுக்க Swapping Scandal மாதிரியான செயல். அதாவது இட மாற்றம் ஊழல்”
.அப்படின்னா என்ன அர்த்தம்.?
ஒரு குறிப்பிட்ட விடைத்தாளில் உள்ள மதிப்பெண்களைக் குறைத்து அல்லது கூட்ட செய்வது,இதனால் நன்றாகப் பாஸ் பண்ண கூடிய ஸ்டூடண்ட் மதிப்பெண்களைக் குறைத்து ஃபெயில் ஆக்குவது,ஃபெயில் ஆன ஸ்டூடண்ட் ஐ பாஸ் பண்ண வைப்பது. விடைத்தாளில் ஒரு பக்கத்தை எடுத்து யாருக்கும் தெரியாமல் கிழித்து எறிவது, ஒங்க பொண்ணுக்கு நடந்த சம்பவம் கிட்ட தட்ட அதே மாதிரி தான்.
“இந்தப் பிரச்சனை முழுவதும் களைய எந்தத் தீர்வும் இல்லையா?”
“ஏன் இல்லை? டெக்னாலஜி வளர்ந்து கொண்டுருக்கும் இந்தக் காலத்தில் Digital Evaluation மூலம் மதிப்பீடு செய்யும் முறை ஒவ்வொருயூனிவர்சிடியும் கொண்டு வரப்பட வேண்டும். “
“தமிழகத்தில் பள்ளி தேர்வுகள் இந்த முறையில் செய்வதால் ரிசல்ட் சீக்கிரம் கிடைக்கிறது. இது வரவேற்க கூடிய ஒன்று”.
“டிஜிட்டல் முறை தமிழ்நாடு விவசாயப் பல்கலை கழகத்தில் கொண்டு வரப்பட்டுள்ளுது என்று கேள்விப்பட்டேன்.மற்ற பல்கலை கழகங்கள் இந்தத் திட்டத்தை நடைமுறை படுத்த வேண்டும்”.
ரொம்ப நல்ல திட்டமா இருக்கே இதற்கு நிதி உதவி எப்படி?
( RUSA Rashtriya Uchchatan Shiksha Abhiyan ) என்கிற மத்திய அரசு உதவி 60சதவீதம் அளிக்கிறது. மாநில அரசு 40 சதவீதம் செலவு பண்ண வேண்டும். 2013இல் இந்தத் திட்டம் அறிமுகப் படுத்தி இருந்தாலும் இன்னும் நடைமுறையில் கொண்டு வரப்பட வில்லை.
“ஆமாம் சார்! Digital Evaluation கொண்டு வரப்பட்டால், நல்ல தீர்வு தான்.”
இவ்வளவு நல்ல விஷயங்களைச் சொன்ன நண்பரை பாரட்டிவிட்டு, அவருக்கு நன்றி சொன்னேன்.
நடந்த விசயத்தை ரம்யாவுக்குச் சொல்ல போனை எடுத்தேன்
Leave a comment
Upload