
கிளம்புமா பூதம் -1....!?
திமுக ,அதிமுக இதுப்போன்ற அதிசய தேர்தலை இப்போது தான் முதல் முறையாக பார்க்கிறது.

இளைஞர்களும் , இளைஞிகளும் சாரை சாரையாக உற்சாகமாக வாக்களித்தனர்.

திரை நட்சத்திரங்கள் த்ரிஷா, கீர்த்தி சுரேஷ் , அஜீத், ரஜினிகாந்த், கமல் என வரிசையாக வாக்களித்து சென்றனர்.
பல தொகுதிகளில் முன்னிரவு வரை வாக்களர்களுக்கு பிரதான கட்சிகள் விட்டமின் ப வெயிட்டாக விநியோகித்தது.
பல வாக்காளர்கள் பணம் வாங்கி கொண்டு வேறு சின்னத்திற்கு வாக்களித்தனர் என்ற தகவல் அறிந்து பிரதான கட்சிகள் அரண்டு விட்டது.

மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு வந்து வாக்களித்த முன்னாள் மத்திய அமைச்சர் மு. க.அழகிரி தன் விரலை காணப்பித்து புகைப்படம் எடுத்து கொண்டவர்..” தேர்தல் களம் மிகவும் சூடாக இருக்கிறது,வெயிலும் அதிகமாக இருக்கிறது, முடிவுகள் எப்படி இருக்கும் என்று தெரியவில்லை” என்று ஆச்சரியப்பட்டு சொன்னார். இந்த தகவலை கேட்டு ஸ்டாலின் அப்செட்.

ஆட்சி மாற்றம் ஏற்படுமா? என்று வாக்களித்த பின் கமலிடம் நிருபர்கள் கேட்ட போது ..” ஆட்சி மாற்றம் இல்லை…உங்கள் வாழ்க்கை மாறும்” என்று கமல் சொல்லி விட்டு நகர்ந்தார்.
வேகமான விறுவிறுப்பான வாக்குபதிவினை பார்த்து …மக்கள் நிச்சயமாக ஒரு தெளிவான முடிவினை எடுப்பார்கள் என்று கனிமொழி சொல்லிவிட்டு போனார்.
வாக்கு சதவீதம் உயர்ந்ததை வரவேற்கிறேன், வெளிநாட்டில் வாழும் சொந்தங்கள் தபால் வாக்குகள் செலுத்தும் வாய்ப்பை தேர்தல் ஆணையம் வழங்க வேண்டும் என்று காரைக்குடியில் சீமான் சொன்னார்.
ஆட்சி மாற்றத்திற்கு வாக்களித்தவர்களுக்கு நன்றி என்று அன்புமணி ராமதாஸ் சொன்னார்.
இப்படி வாக்குசாவடியில் இளைஞர்கள் வாக்கினை செலுத்தி வாக்கு புரட்சி ஏற்படுத்தியது தமிழகமே ஆச்சரியத்தில் பார்த்தது.

முதல்வர் தனது கிச்சன் கேபினேட் முக்கியஸ்தர்களிடம் பேசிய போது இப்படி வாக்களிக்கும் வேகம் கூடும் என நினைக்கவில்லை .எல்லாம் நாம் தான் வெற்றிபெறுவோம் என்று தவறான தகவலை கொடுத்து விட்டீர்களே …இன்னும் வேறு மாதிரி கடுமையாக உழைத்திருப்பேன் என்று சொல்லிவிட்டு சென்றதாக தகவல்.
அடுத்த ஆட்சி தமிழகத்திற்கு புதியதாக இருக்கலாம் என்று மத்திய ,மாநில உளவுத்துறை ரிப்போர்ட் வேறு டெல்லிக்கு சென்றுள்ளது.
திமுக, அதிமுக மற்றும் பல கட்சிகள் ஆடித்தான் போயிருக்கிறது.

அலாவுதீன் அற்புத விளக்கை திமுக உரச அதிலிருந்து விஜய் என்கிற பூதம் கிளம்பி வாக்கு புரட்சியை ஏற்படுத்தியது .
பெண் வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகரித்திருப்பது எந்த திட்டங்களின் தாக்கம் , ஏன் வாக்குவிகிதம் குறைந்துள்ளது… எங்கே கோட்டை விட்டோம் என்று இரவோடு இரவாக திமுக அறிவாலயத்தில் ஐ.டி விங் நபர்கள் டேட்டாவுடன் பேசி கொண்டனர்.
திமுக ஆட்சி அமைக்கும் என்று ஆலந்தூர் பாரதி சொன்னார்.

அதிமுக ஆட்சி அமைக்கும் என்று எடப்பாடி சொன்னார்.
ஜோசப் விஜய், தனது பிரசாரங்களில் தி.மு.க. எதிர்ப்பிற்கே மிகுந்த முக்கியத்துவம் அளித்த நிலையில், இந்த வாக்கு சதவீத அதிகரிப்பு எந்த விதமான தாக்கத்தினை 234 தொகுதிகளிலும் வெற்றியை தலை கீழாக புரட்டி போடுமா என்று வெயிட் அண்ட் சீ தான் .
ஸ்டாலின் கொடைக்கானலுக்கும் , உதயநிதி துபாய்க்கும் குடும்பத்துடன் ஓய்வெடுக்க சென்று விட்டனர்.
தமிழகத்தில் அரசியல் கட்சிகளின் தேர்தல் செலவு 45ஆயிரம் கோடி மேல் என்று உளவுத்துறை தகவல்

அடுத்த தமிழகத்தின் மன்னர் யார் என்பது மே 4 தேதி நடிகை த்ரிஷா பிறந்தநாள் அன்று தெரியும் .
(கண்ணாழ்வாரின் குசும்பு = ஆர்)

Leave a comment
Upload