தொடர்கள்
அரசியல்
கருத்துக்கதிர்வேலன்

20260325074603480.jpeg

வாக்குகளை அள்ளிக்குவித்து அரசியல் தலைவர்களை கலங்க வைத்த வாக்காளர்கள்.

அவங்க வாக்குறுதிகளை அள்ளி விட்டாங்க !! அதுக்கு பதில் மரியாதை இது !!

பறக்கும் படை சோதனை முடிவடைந்தது.

அப்பாடா ! அப்பாவிகள் ஹேப்பி !!

கரூரில் ஏன் வாக்களிக்கவில்லை செந்தில் பாலாஜி விளக்கம்.

அண்ணன் கோவையில் பட்டுவாடாவில் பிஸியாக இருந்தார் !!

கரூர் மாவட்டத்தில் பரிசு மழையால் வாக்குப்பதிவு அதிகரிப்பு.

வாக்காளர்களுக்கு மகிழ்ச்சி தினம், ஆனால் ஜனநாயகத்திற்கு ?

டெல்லி அணியும் வெல்லாது கில்லி அணியும் வெல்லாது லியோனி பேட்டி

பட்டிமன்ற தலைப்பு மாதிரி சொல்றாரு ?

தேர்தலுக்குப் பிறகு விஜய்யுடன் கூட்டணி இல்லை, பாஜக திட்டவட்டம்.

அவர் உங்களை கூப்பிடவே இல்லையே !!

போதிய பஸ்கள் இயக்கப்படாததால் பொதுமக்கள் சாலை மறியல்.

பஸ் வசதி இருந்தால் 100% ஓட்டு நிச்சயம் !!

மேற்கு வங்கத்தில் பாஜக மகத்தான வெற்றி பெறுவது உறுதி பிரதமர் மோடி நம்பிக்கை.

மேடத்தை டென்ஷன் பண்ணுவதே அண்ணன் வேலை ஆகிவிட்டது !!

சட்டசபைத் தேர்தலில் ஆட்சி மாற்றத்திற்கான அறிகுறிகள் உறுதியாக தெரிகிறது அன்புமணி ராமதாஸ் ஆருடம்.

ஆனா அய்யாவின் வீடியோ ஆருடம் வேற மாதிரி இருக்கே ?

அஜித், சிவகார்த்திகேயன் வந்தால் இதைவிட. அதிககூட்டம் வரும் – சீமான்.

அண்ணன் அவர்களையும் அரசியலுக்கு அழைப்பதுப் போல் தெரியுது !!

தமிழகம் மட்டும் கடன் வாங்கவில்லை, எல்லா நாடுகளும் கடன் வாங்குகின்றன ப.சிதம்பரம்.

அனுபவம் பேசுகிறது.

சிதம்பரத்துக்கு பொருளாதாரம் தெரியாது எச்.ராஜா.

அப்படியா ?