தொடர்கள்
வலையங்கம்
வரவேற்போம்

20260324221042316.jpeg

தேரதல் ஆணையம் 100% வாக்கு பதிவுக்கான எல்லா முயற்சிகளிலும் தீவிரமாக இறங்கியது. வாக்குச்சாவடிகளில் குடிநீர் வசதி செல்போன் பாதுகாப்புக்கு ஏற்பாடு மாற்றுத்திறனாளிக்கான இருக்கைகள் 70 வயதிற்கு மேல் இருப்பவர்கள் வீட்டிலிருந்தே வாக்களிக்க வசதி அனைவரும் தங்களது ஜனநாயக கடமையை செய்ய வேண்டும் என்பதற்காக தேர்தல் ஆணையம் எல்லாம் முயற்சிகளையும் முழு மனதோடு செய்தது.
கடந்த காலங்களில் தேர்தல் நாள் என்பது ஒரு விடுமுறை தினம் என்று வாக்களிக்க வேண்டும் என்ற தனது ஜனநாயக கடமையை மறந்து பலர் ஓட்டு போடுவதை தவிர்த்து விடுமுறை தினமாக கொண்டாடினார்கள். ஆனால் இந்த முறை அப்படி அல்ல கடந்த தேர்தலை விட இந்த தேர்தலில் 20 லட்சத்துக்கும் அதிகமானோர் கூடுதலாக வாக்களித்து இருக்கிறார்கள். ஜனநாயக கடமை வாக்களிப்பது நமது உரிமை என்ற விழிப்புணர்வு நமது மக்களிடம் ஏற்பட்டிருப்பதை தான் இந்த அதிக அளவு வாக்குப்பதிவு சதவீதம் நமக்கு உணர்த்துகிறது.

புதிய கட்சி தொடங்கி புதிய வரவான நடிகர் விஜய் கூட குழந்தைகளிடம் ஒரு வேண்டுகோள் வைத்தார் உங்கள் தாத்தா பாட்டி அப்பா அம்மா சித்தப்பா சித்தி அக்கா அண்ணன் ஆகியோர் விசில் சின்னத்துக்கு வாக்களிக்க வையுங்கள் என்றார். இந்த முறை முதல் தலைமுறை வாக்காளர்கள் இளைஞர்கள் பெண்கள் என்று நிறைய பேர் வாக்களித்து இருக்கிறார்கள். ஓட்டுக்கு பணம் என்பதால் வாக்குப்பதிவு அதிகம் என்ற வாதம் ஏற்புடையது அல்ல எல்லாக் கட்சிகளுமே ஓட்டுக்கு பணம் தருகிறது. இன்னும் சொல்ல போனால் சில இடங்களில் வாக்காளர்கள் எங்களுக்கு பணம் பட்டுவாடா செய்ய வில்லை என்று மறியல் எல்லாம் செய்ததாக செய்திகள் வருகின்றன. ஆனால் பணத்தை வாங்கிக் கொண்டு வாக்காளர்கள் ஓட்டுப் போடுவதில்லை யாருக்கு ஓட்டு போட வேண்டும் என்பதை அவர்கள் தீர்மானம் செய்திருப்பார்கள். எல்லா கட்சியிலும் பணமும் வாங்கிக் கொள்வார்கள் யாராவது ஒருவரை தான் அவர்கள் தேர்ந்தெடுப்பார்கள். அந்த யார் என்பதை வாக்காளர் தான் முடிவு செய்கிறார் அரசியல் கட்சிகள் அல்ல என்பதைத்தான் தேர்தல் முடிவுகள் எப்போதும் சொல்கிறது. இந்த முறை அதிக அளவு வாக்குப்பதிவு என்பது தேர்தல் ஆணையத்தில் முயற்சிக்கு கிடைத்த முதல் வெற்றி என்று நாம் கொண்டாடுவோம்.