தொடர்கள்
வாசகர் மெயில்
வாசகர் மெயில்

20260324195707773.jpg

Heading : அரசியல் கட்சிகளின் பெண்கள் பாசம்

Comment : பெண்களே உங்கள் மூளையை பயன்படுத்தி ஓட்டு போடவும், இலவசத்திற்கு ஆசை பட்டு உங்கள் எதிர் காலத்தை வீணாக்கி விடாதீர்

Kanmani , Chennai

Heading : மக்கள் விழித்துக்கொண்டார்களா? - பால்கி

Comment : சரியான சிந்தனை

Ujjivanam , Chennai

Heading :வாக்களிக்கும் இளைஞர்களுக்கு....... ! முனைவர் என்.பத்ரி

Comment : தன் கையே தனக்கு உதவும் என்பதை மனதில் வைத்து இலவசங்களுக்கு மயங்காமல் சிந்தித்து போதைக்கு அடிமையாகாமல் வாக்கு அளிக்க வேண்டும்

Kanmani , Chennai

Heading : தேர்தல் வெற்றியும்..! ஆன்மீக வழிபாடும்..!! - ஆரூர் சுந்தரசேகர்.

Comment : ஆக மொத்தம் அவனின்றி ஒரு அணியும் வெற்றி பெற்றதுஇல்லை

Rama venkatesan , Trichy

Heading : ஜனநாயக கடமையை மறக்காதீர்கள்

Comment : உண்மை, நம் கடமை , உரிமை இவற்றை எப்பொழுதும் விட்டு விட கூடாது

Kanmani , Chennai

Heading : வாழ்க்கை இது தான் - பால்கி

Comment : அருமை 👌👌

Sriram S , Chennai

Heading : மக்கள் விழித்துக்கொண்டார்களா? - பால்கி

Comment : பணம் பட்டுவாடா மிக பெரிய அளவில் நடந்தேறியது.... ஆகையால் முடிவு ?!?!

Sriram S , Chennai

Heading : படை நடத்த வருகிறோம் - சூசன் கோயல் மரியா சிவானந்தம்

Comment : மிக பெரிய சாதனை.... நிச்சயமாக பாராட்ட வேண்டும்....

Sriram S , Chennai

Heading : சபாஷ் சீமான் !!- விகடகவியார்

Comment : நிச்சயமாக போன தேர்தலை விட அதிகமாக % வோட்டு கிடைக்கும்... ஆனால் எவ்வளவு சீட் என்று சொல்லமுடியாது.... இவரால் அதிக பாதிப்பு என்.டி.ஏ தான் இருக்கும்....

Sriram S , Chennai

Heading : ஜனநாயக கடமையை மறக்காதீர்கள்

Comment : புதுச்சேரி ஒரு புது ரெக்கார்ட் செய்து உள்ளது.... தமிழ் நாடு அவ்வளவு முடியாவிட்டாலும் ஒரு 75% போட்டால் கூட நன்றாக இருக்கும்....

Sriram S , Chennai

Heading : நினைவலைகள் : பாரத ரத்னா எம் எஸ் சுப்பலக்ஷ்மி - அம்பத்தூர் ரங்கராஜன்

Comment : அருமை. அவரை சந்திப்பது மகிழ்ச்சியான பெருமைமிகு தருனம். எனக்கும் அவரை சந்திக்க உரையாட வாய்ப்பு கிடைத்தது வித்தியாசமாக.1980 ல் திருமதி ராதா அவர்மகள் உடல்நிலை சரியில்லாததால் very special ward சென்னை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்தார். அப்போது நான் UG degree Students special duty பார்த்தோம். மென்மையாக அழகாக இனிமையாக MS அம்மா பேசுவார்கள். எங்களை எல்லாம் வெகுவாக பாராட்டுவார். எனக்கு என்றுமே அதில் பெருமை உண்டு. அவர் தவறிய பொழுது மதுரை கல்லூரியில் பணியாற்றி கொண்டிருந்தேன். மதுரை வானொலியில் பணி புரிந்து கொண்டிருந்த என் சிநேகிதி ஜோதி ஹரிகிருஷ்ணன் உடனிருந்து கடைசிவரை TVயில் பார்த்து அவரை பற்றியே பேசி கொண்டிருந்தோம். மென்மையான மேன்மையான உள்ளம். நினைவு படுத்தியமைக்கு பெரிய நன்றி. 🙏

ஜெயா, சென்னை

Heading : ஹெல்ப் லைன் - பா.அய்யாசாமி

Comment : மிகவும் அருமை. மமனம் நெகிழ்ந்தது. உங்களின் மனிதநேயம் மிக்க செயலுக்கு மீண்டும் ஒரு ஆதாரம்.

ஸ்ரீப்ரியா சங்கர், சீர்காழி

Heading : உயிர் துளி - நைத்ருவன்

Comment : ஆஹா… ,மிகவும் அற்புதம்…..

GEETHA, CHENNAI

Heading : தமிழக தேர்தல் –கண்ணாழ்வார்

Comment : தொண்டன் : நீங்க தேர்தல்ல ஜெயிச்சு பதவிக்கு வந்ததும் முதல் கையெழுத்து எதுல போடுவீங்கன்னு சனங்க கேக்கறாங்க... தலைவர் : நீ என்ன சொன்ன..? தொண்டன் : முன் ஜாமீன் மனுலதான்னு சொன்னேன்...

எம். ஆர். மூர்த்தி, மும்பை

Heading : அரசியல் கட்சிகளின் பெண்கள் பாசம்

Comment : தலைவர் : ரூட் டை மாத்து.. தொண்டன்: ஏன் தலிவா..? தலைவர் : போற வழி நெடுக 500 பொம்பளைங்க ஆரத்தி எடுக்க தட்டோட காத்துக்கிட்டிருக்காங்களாம்... நான் திவால்தான்...

எம். ஆர். மூர்த்தி, மும்பை

Heading : ஹெல்ப் லைன் - பா.அய்யாசாமி

Comment : கதை மிக சிறப்பு எப்பவும் நேர்மையாக இருந்தா நல்ல பலன் கிடைக்கும் என்பதை அழகாக சொல்லி இருக்கிறார் வாழ்த்துகள்

விமலாநாகேஷ், சென்னை

Heading : ஏப்ரல் 23

Comment : வேட்பாளர் : ஹி.. ஹி... ஏப்ரல் 23... மறந்துடாதீங்க... வாக்காளர் : நல்ல வேளை... என் பெண்டாட்டியோட பிறந்த நாளை ஞாபகப்படுத்தினதுக்கு ரொம்ப தாங்க்ஸ்...

எம். ஆர். மூர்த்தி, மும்பை.

Heading : ஹெல்ப் லைன் - பா.அய்யாசாமி

Comment : மனிதநேயமும் , சமயோசிதமாக செயல்பட்டு மூதாட்டியை காப்பாற்றிய ரவிக்கு பாராட்டுக்கள். நகையை கழற்றி பாக்கெட்டில் போடும்போது, காமிராவை கவனிக்கவில்லை.... எழுத்தாளரின் ட்விஸ்ட் அருமை!

Meenakshi Ragupathi , Chennai

Heading : ஹெல்ப் லைன் - பா.அய்யாசாமி

Comment : மிக அருமை

Seethalkshmi R, Thiruverumbur, Trichy

Heading : வாழ்க்கை இது தான் - பால்கி

Comment : வாழ்க்கையை ஒரே வரியில் சொல்லிபுரிய வைத்து விட்டீர்கள் பால்கி சார்

Ujjivanam , Chennai

Heading :மனம் கவரும் நீதி தேவதை ரேவதி!- என்.பத்ரி

Comment : ரேவதி போன்ற உண்மையான அஞ்சா நெஞ்சம் படைத்த வர்கள் இருந்தால் நம் மக்கள் பயமின்றி வாழலாம், திருமதி ரேவதி அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்

Kanmani , Chennai