
உத்திரபிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ராமர் கோயிலை ஸ்ரீ ராமஜெயம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை நிர்வாகித்து வருகிறது. இந்தக் கோவில் உண்டியலில் செலுத்தப்படும் காணிக்கை மற்றும் நன்கொடைகளில் முறைகேடு நடந்ததாக சமீபத்தில் எழுந்த புகாரை அடுத்து இது பற்றி சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வருகிறது.
நிதிமுறை கேடு மற்றும் நிர்வாகக் குளறுபடிகள் குறித்து குற்றச்சாட்டுக்கள், கோயில் நிர்வாகத்தின் மீது களங்கம் என்று மட்டும் முடிய கூடிய விஷயம் அல்ல இது. அரசியல் ரீதியான தலைவர்கள் , இந்து அமைப்புகள் ஆகியவற்றிற்கும் சங்கடத்தை ஏற்படுத்தி இருக்கிறது இந்த முறைகேடு உத்திரபிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் அயோத்தி கோயில் நன்கொடை முறைகேடு ஆளும் பாரதிய ஜனதாவுக்கு மிகப்பெரிய தர்ம சங்கடத்தை ஏற்படுத்தும். எதிர்க்கட்சிகள் தேவையில்லாமல் இந்த விஷயத்தில் ராம பக்தர்களையும் சங்கடப்படுத்துவார்கள். எனவே முறைகேடுகள் தொடர்பான விசாரணையை விரைவாக முடித்து உண்மையான குற்றவாளிகளை அடையாளம் கண்டு சட்டரீதியாக அவர்களுக்கு தண்டனை வாங்கித் தந்தால்தான் இந்தக் களங்கும் நீங்கும்.

Leave a comment
Upload