தொடர்கள்
மருத்துவம்
நீரிழிவு நோய்.. புதிய மருத்துவ புரட்சி- மாலாஶ்ரீ

வாரம் ஒரு முறை போடும் இன்சுலின் ஊசி!

20260610183424490.jpeg

டென்மார்க் நாட்டின் பிரபல முன்னணி மருந்து நிறுவனமான நோவோ நார்டிஸ்க் (Novo Nordisk), இந்தியாவில் கடந்த 9-ம் தேதி நீரிழிவு நோயாளிகளின் ரத்த சர்க்கரை அளவு கட்டுப்படுத்துவதை எளிதாக்கும் வகையில், வாரந்தோறும் ஒருமுறை மட்டுமே போட்டுக் கொள்ளும் 'அவிக்லி' (Awiqli) என்ற பிராண்ட் பெயரில், 'ஐகோடெக்' (Icodec) இன்சுலின் ஊசி மருந்தை அறிமுகப்படுத்தி உள்ளனர்.

இந்த ஐகோடெக் எனும் வாராந்திர இன்சுலின் ஊசி மருந்து, இந்திய நீரிழிவு நோயாளிகளின் ரத்த சர்க்கரை அளவை எளிதாக கட்டுப்படுத்தும் வசதியாக மாற்றுகிறது. இந்த ஊசி மருந்து வெறும் ₹261 என்ற சகாய விலையில் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

தற்போது நாள்தோறும் ஒருமுறை செலுத்தப்படும் ஊசிகளுக்குப் பதிலாக, வாரத்துக்கு ஒருமுறை மட்டுமே செலுத்த வேண்டிய உலகின் முதல் நீண்ட கால சிக்கன செயல்பாடு கொண்ட இன்சுலின் ஊசி இதுவாகும்.

இந்த ஐகோடெக் எனும் வாராந்திர இன்சுலின் ஊசி மருந்து, நீரிழிவு நோய் சிகிச்சையில் புதிய மருத்துவ புரட்சியாகப் பார்க்கப்படுகிறது.

இதன் முக்கிய சிறப்பம்சங்கள் குறித்து டாக்டர்கள் கூறுகையில், “நீரிழிவு நோயாளிகள் நாள்தோறும் இன்சுலின் ஊசி போடுவதற்குப் பதிலாக, இந்த ஐகோடெக் எனும் புதிய இன்சுலின் ஊசி மருந்தை வாரத்துக்கு ஒருமுறை மட்டும் போட்டுக் கொண்டால் போதும். இதன்மூலம் ஆண்டுக்கு 365 நாட்களுக்கு போடப்படும் இன்சுலின் ஊசிகளின் எண்ணிக்கை 52 ஆக குறைகிறது.

இந்த ஐகோடெக் இன்சுலின் ஊசி மருந்து, நமது உடலுக்கு தேவையான இன்சுலினை வாரம் முழுவதும் சீராக வழங்கி, ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.

இதில், டைப் 1 (Type 1) மற்றும் டைப் 2 (Type 2) சர்க்கரை நோய் உள்ள 18 வயதுக்கு மேற்பட்டவர்களும் பயன்படுத்தலாம். இதன் 1 எம் எல் (700 யூனிட்) பென்னின் விலை சுமார் ₹2,611. 3 எம் எல் (2100 யூனிட்) பென்னின் விலை ₹7,833. இதனால் இந்த இன்சுலின் ஊசி மருந்து, நீண்ட கால அடிப்படையில் சிக்கனமானதாக இருக்கும்.

இந்த இன்சுலின் ஊசியை நாள்தோறும் ஊசி குத்துவதால் ஏற்படும் வலி மற்றும் பயம் குறைகிறது. எனினும், நாம் அனைவரும் நாள்தோறும் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை தொடர்ந்து பரிசோதிக்க வேண்டும்.

ஒவ்வொருவருக்கும் சர்க்கரை நோயின் வீரியத்தைப் பொறுத்து, ஒருசிலருக்கு நாள்தோறும் போடும் இன்சுலின் ஊசி தேவைப்படலாம்!” என்று டாக்டர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

20260610183453647.jpeg

ஒரு நாளைக்கு ஒருமுறை இன்சுலின் எடுக்கும் நிலைக்கு சுமார் 40 ஆண்டுகள் பிடித்தன.

மற்றுமொரு 20 ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போது வாரத்துக்கு ஒருமுறை மட்டுமே எடுத்துக் கொள்ளக்கூடிய ஐகோடெக் இன்சுலின் ஊசி மருந்து நம்மிடையே பயன்பாட்டுக்கு வந்துள்ளது!” மருந்து நம்மிடம் உள்ளது," என்று டென்மார்க்கின் நோவோ நார்டிஸ்க் மருந்து நிறுவனத்தின் இந்திய பிராந்திய நிர்வாக இயக்குநர் விக்ராந்த் ஸ்ரோத்ரியா மகிழ்ச்சி தெரிவித்தார்.