தொடர்கள்
சினிமா
சினிமா சினிமா சினிமா-லைட் பாய்

பாக்கிய ஸ்ரீ போர்ஸ்

20260721120101114.jpg

தெலுங்கு தமிழ் என்று பிஸியாக இருக்கும் பாக்யஸ்ரீ போர்ஸ் ஆதித்யராய் கபூர் ஜோடியாக இந்தி படத்தில் நடிக்கிறார்.

துஷாரா விஜயன்

20260721122017405.jpg

ஜிடி நாயுடு படத்தில் நடித்த தூஷாரா விஜயனுக்கு கவரிங் நகைகள் ஒத்துக் கொள்ளாததால் சரும பிரச்சனை ஏற்பட்டு சிகிச்சைக்குப் பிறகு மீண்டும் நடித்தாராம். படம் தாமதத்திற்கு நீங்கள் தான் காரணம் என்று கிண்டல் செய்கிறார்களாம் பட குழுவினர்.

நயன்தாரா

20260721115431410.jpg

பொதுவாக எந்தப் படப் பிரமோஷன் நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாத நயன்தாரா ' டாக்ஸிக்' பட பிரமோஷனில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சிக்கு அவர் அணிந்து வந்திருந்த வைர நகைகள் அனைத்தும் தமன்னாவின் ஜுவல்லரி ஷாப்பில் வாங்கப்பட்டதாம்.

மிருணாள் தாக்கூர்

20260721123056557.jpg

கிரிக்கெட் வீரருடன் டேட்டிங் என்று தன்னைப் பற்றி வரும் செய்தியை மறுக்கிறார் மிருணாள் தாக்கூர் ."படித்தவர்களே வதந்திகளை உண்மை என்று நம்புகிறார்கள் "என்கிறார் நடிகை.

வாமிகா கபி

20260721115918900.jpg

டிசி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அப்பட நாயகி வாமிகா கபி மொட்டை அடித்திருக்கிறார். அது தொடர்பான வீடியோ ட்ரெண்டிங் ஆனது. ஆனால், அது ஏ.ஐ வீடியோ .அவர் முடியை குட்டையாகத்தான் வெட்டி இருக்கிறார் என்கின்றனர் சிலர்.

ஹன்சிகா

விவாகரத்துக்கு பின்னார் சமீபத்தில் கொண்டாடிய பிறந்தநாள் படங்களை பகிர்ந்திருக்கிறார் ஹன்சிகா. இது வித்தியாசமான பிறந்தநாள் என்று அதில் பதிவிட்டு இருக்கிறார்.

ஸ்ரீ லீலா

20260721113336446.jpg

ரஜினிகாந்த் நடிக்கும் தர்மன் படத்தில் இணைகிறார் ஸ்ரீலீலா. .ரஜினிக்கு அவர்தான் ஜோடி என்று ஒரு தரப்பும் இல்லை இல்லை முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்று இன்னொரு தரப்பும் பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருக்கிறது.

கரீனா கபூர்

பாலிவுட் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி தயாரிப்பில் வரலாற்று பின்னணி கொண்ட கதையில் தனுஷ் நடிக்கிறார். படத்தை பி எஸ் மித்ரன் இயக்குகிறார். இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக கரீனா கபூரை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடக்கிறது.

சமந்தா

20260721123136449.jpg

சின்னத்திரையில் ஒளிபரப்பாக இருக்கும் சமையல் நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கி இருக்கிறார் நடிகை சமந்தா. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை பிரபல ஓட்டிடித்தளமான சோனி பிக்சர் நெட்வொர்க் இந்தியா நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது.

யாஷ்

"நான் எப்போதும் ஆபாசத்தை ஊக்குவிப்பதில்லை. திரைப்படங்களில் ஆபாசம் என்பது முற்றிலும் தவறு. அந்தரங்க காட்சிகளுக்கும் ஒரு எல்லை உண்டு" என்கிறார் நடிகர் யாஷ்.

ஸ்ரேயா

"சிவாஜி படத்தில் ரஜினி ஜோடியாக நடிக்கும் போது எனக்கு பதட்டமாக இருந்தது .என் பதற்றத்தை போக்க நெருங்கிய நண்பர் போல் பழகினார் அவர். எப்போதும் உன்னுடைய வேலையை நேசி தொடர்ந்து கற்றுக் கொண்டே இரு என்று என்னிடம் சொல்லிக் கொண்டே இருப்பார் ரஜினி "என்கிறார் நடிகை ஸ்ரேயா.

சுகன்யா

20260721115722973.jpg

நடிகை சுகன்யா, ' மேரி கோல்ட் ' என்ற படத்தில் 31 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபுக்கு ஜோடியாக நடிக்கிறார்.