
தனிப்பெரும்பான்மை இல்லாமல் ஆட்சி அமைத்து, ஆட்சி அமைத்த சில நாட்களிலேயே ஆட்சி கவிழ்ந்த வரலாறுகள் எல்லாம் உண்டு.
ஜோசப் விஜய் ஆட்சி 100 நாட்களை தாண்டிவிட்டது.
தேர்தலில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட தன்னை விமர்சனம் செய்த அரசியல் கட்சிகள் ஆதரவுடன் நூறு நாட்கள் நிறைவு செய்வது என்பது சாதனை.
திராவிடக் கட்சிகள் தமிழக அரசியலுக்கு கூட்டணி ஆட்சி உகந்ததல்ல என்று சொல்லிக் கொண்டிருந்த நேரத்தில் கூட்டணி ஆட்சி என்று தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தார் ஜோசப் விஜய்.
கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரசுக்கு அமைச்சர் பதவி இதெல்லாம் கூட 100 நாள் சாதனை.
இந்த அரசின் சாதனை என்று ஒரு நீண்ட பட்டியலை விளம்பரமாக வெளியிட்டு இருக்கிறது தமிழக வெற்றிக்கழக அரசு.
அரசின் சாதனைகளை ஜோசப் விஜய் வீடியோவாகவும் வெளியிட்டு இருக்கிறார். திமுக சாதனை அல்ல வேதனை என்று ஒரு பெரிய பட்டியலை வெளியிட்டு கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறது.
அரசு அலுவலகத்தில் முறைகேடு, லஞ்சம் ,ஊழல் இப்போது பெரிய அளவு இல்லை என்ற பேச்சு வந்திருக்கிறது என்பதை கவனிக்க வேண்டும்.
திரும்பத் திரும்ப சென்ற ஆட்சியில் அரசு கஜானாவுக்கு போக வேண்டிய கோடிக்கணக்கான ரூபாய் கட்சி நிதியாக போனது.
இப்போது தடுத்து நிறுத்தி கஜானாவுக்கு திருப்பி இருக்கிறோம் என்று பெருமையாக சொல்கிறது இந்த அரசு. அது உண்மையாக இருந்தால் மகிழ்ச்சி தான்.
வெள்ளை அறிக்கையில் திமுக அரசு கடன் வாங்கி 10 லட்சம் கோடி கடனாளியாக தமிழகத்தை தள்ளிவிட்டது என்று நிதியமைச்சர் மரியா வில்சன் குறிப்பிட்டிருந்தார்.
மூன்று மாதங்களில் 38 லட்சம் கோடி இந்த அரசும் கடன் வாங்கி இருக்கிறது. அரசு கடன் அதிகரிக்குமே தவிர குறைவதற்கு வாய்ப்பே இல்லை .
நிதித்துறை செயலாளர், இந்த நிதிநிலை அறிக்கையில் மகளிர்க்கு 2500 ரூபாய், ஆண்டுக்கு 6 எரிவாயு சிலிண்டர்.
தமிழகம் முழுவதும் பெண்கள் இலவச பயணம் போன்ற அறிவிப்புகள் இல்லை என்ற ஏமாற்றம் பொதுமக்களுக்கு பரவலாக இருக்கிறது.
அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் கார் மாதந்தோறும் அதை பராமரிக்க 75 ஆயிரம் படி, உதவியாளருக்கு 25 ஆயிரம் ரூபாய் என்ற அறிவிப்பை வெளியிட்டு இருப்பதும் விமர்சனத்திற்கு ஆளாகி இருக்கிறது. பல உறுப்பினர்கள் வேட்புமனுவில் தந்திருக்கும் பிரமாண பத்திரத்தில் தங்களுக்கு கார் இருப்பதை குறிப்பிட்டிருக்கிறார்கள்.
திமுக தலைவர் ஸ்டாலின் தனது பிரமாண பத்திரத்தில் தனக்கு கார் இல்லை என்று குறிப்பிட்டிருந்தார் .
விஜயின் தேர்தல் அறிக்கையில் கூட்டுறவு சங்கங்களில் ஐந்து ஏக்கர் விவசாய நிலங்கள் வைத்து பெற்றுள்ள பயிர் கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்றார் . தற்போது ரூ.50,000 அதன் பிறகு ரூ.75,000 ஆயிரம் தள்ளுபடி என்று அறிவித்ததை தமிழக விவசாயிகள் ரசிக்கவில்லை . தங்களின் வாழ்வாதாரம் பாதிப்பிற்காக முதல்வர் விஜய் விவசாய கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்று போர் குரல் எழுப்பி வருகின்றனர்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக உறுப்பினர் காமராஜ் தனக்கு சொந்தமாக மூன்று கார்கள் இருந்தாலும் முதல்வர் தரும் காரில் கெத்தாக நான் சுற்றி வருவேன் என்று சட்டமன்றத்தில் பெருமையாக சொல்லி நன்றி சொன்னார்.
தமிழக வெற்றி கழக சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் பேசும்போது நான் ரயிலில் வந்து ஆட்டோவில் தான் சட்டமன்றத்துக்கு வருகிறேன்.
நான் ஆட்டோவில் வந்து இறங்குவதை பார்த்து காவலர்கள் என்னை சட்டமன்ற உறுப்பினர் என்று நம்பவில்லை ஒவ்வொரு முறையும் எனது அடையாள அட்டை காண்பித்து தான் உள்ளே வருகிறேன் என்று சொன்னபோது யார் அந்த சட்டமன்ற உறுப்பினர் என்று திரும்பிப் பார்த்தார் முதல்வர் ஜோசப் விஜய்.
அந்த உறுப்பினர் தன்னிடம் கார் இருப்பதாக பிரமாணபத்திரத்தில் குறிப்பிட்டு இருப்பது தற்சமயம் சமூக வலைதளத்தில் சர்ச்சையாகி இருக்கிறது.
திமுக இது பற்றி கருத்து சொல்லாமல் கப் சிப் ஆனது என்பதையும் கவனிக்க வேண்டும்.
100 நாளில் சட்டம் ஒழுங்கு பற்றி குறிப்பிட வேண்டுமென்றால் பெரிய அளவு முன்னேற்றம் இல்லை .
இந்த ஆட்சியிலும் லாக்கப் மரணங்கள் தொடர்கின்றன.
பாலியல் பலாத்காரம் கொலை போன்ற சம்பவங்கள் குறைந்த பாடில்லை. அதேபோல் போதை ஒழிப்பு என்று முதல்வர் முதல் கையெழுத்து போட்டாலும் போதை கலாச்சாரத்தினால் பள்ளி மாணவர்கள் கொலை செய்யப்படுவதும் தொடர்கதையாக இருக்கிறது.
ஆளுங்கட்சியின் தலைமையில் கட்சிக்காரர்கள் கட்டுக்குள் வைத்திருக்க முடிகிறதா என்றால் அதுவும் சந்தேகம் தான் என்பது போல் பல செய்திகள் வருகின்றன.
காவல் நிலையங்களில் தலையீடு கட்டப்பஞ்சாயத்து பாலியல் பலாத்காரம் போன்ற விஷயங்களிலும் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளின் பெயர்கள் அடிப்பட தொடங்கி இருக்கின்றன.
மறுபடியும் திமுக வெற்றி பெற வாய்ப்பே இல்லை நாங்கள் தான் நிரந்தர ஆட்சியாளர்கள் என்ற கருத்தை அமைச்சர்கள் தொடர்ந்து சொல்லி வருகிறார்கள்.
தமிழக மக்கள் இவர்களுக்கு பெரும்பான்மை சட்டமன்ற உறுப்பினர்களை வழங்கி ஆட்சியில் அமர வைக்கவில்லை. தீர்ந்த சக்தி தீய சக்தி என்று இவர்கள் விமர்சனம் செய்த கட்சிகளின் தயவில் தான் இவர்கள் ஆட்சி நடக்கிறது என்ற உண்மையை மறந்து போகிறார்கள் .
தனது ஆஸ்தான ஜோதிடரை அரசு பதவியில் நியமனம் செய்து விமர்சனம் வந்ததும் அந்த அரசு உத்தரவு வாபஸ் என்று தமிழக வெற்றிக் கழக நிர்வாகி ஒருவரே நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது 11 மதுபான வகைகளுக்கு தடை விதித்து அடுத்த சில மணி நேரத்தில் ஏதோ அழுத்தம் காரணமாக அந்த தடைநீக்கம்,மின் கணக்கீட்டில் குளறுபடி போன்ற கோமாளித்தனமான செயல்கள் இந்த ஆட்சியிலும் தொடர்கிறது.
இந்த அரசின் 100 நாள் என்பது பெரிதாக கொண்டாடும் படி இல்லை. இருந்தாலும் பொறுத்திருந்து வாய்ப்பு கொடுத்துத் தான் ஆக வேண்டும்.

Leave a comment
Upload