தொடர்கள்
அரசியல்
கருத்துக்கதிர்வேலன்

20260721125804891.jpg

யாருடைய ஆட்சியில் போதை பொருள் அதிகம் உதயநிதியுடன் அமைச்சர்கள் வாக்குவாதம் !!

சட்டமன்றத்தை பட்டிமன்றம் ஆக்கிட்டாங்க !!

தேசியத் தகுதி தேர்வில் மீண்டும் குளறுபடி வினாத்தாள் பிழைகள் காரணமாக மூன்று பாடங்களுக்கு மறுதேர்வு !!

இந்த வினாத்தாள் தேர்வாளர்களுக்கு முதல்ல நீட் தேர்வு அவசியம் !!

முதலமைச்சர் விஜயின் 100 நாள் ஆட்சி சாதனைகள் வீடியோ வெளியிட்டு விளக்கம்.

பதிலுக்கு எதிர்க்கட்சி வேதனை வீடியோ வெளியிட்டு இருக்காங்க அதையும் பாருங்க !!

திருவாரூரில் இன்று பல்கலைகழக பட்டமளிப்பு விழாவில் மூன்றாவதாக தமிழ் தாய் வாழ்த்து பாடல்.

இப்போதைக்கு வந்தே மாதரம் தான் ட்ரெண்டிங்கில் இருக்கு என்ன செய்ய ?

மோடி பதிலளிக்கும் வரை நாங்கள் ஓய மாட்டோம் ராகுல் காந்தி.

பார்லிமென்ட் முடிஞ்சு பத்து நாள் ஆயிடுச்சு, அதுவே எதிர்க்கட்சித் தலைவருக்கு தெரியல ?

தமிழ்நாட்டுக்கு காவிரியில் ஏன் தண்ணீர் திறந்து விடவில்லை ? கர்நாடகா அரசுக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி.

சரி, திறந்து விடறோம் என்று சொல்லுவாங்க ,ஆனா செய்ய மாட்டாங்க !!

சந்தர்ப்பம் கிடைப்பவர்கள் மட்டுமே வெற்றி பெறுகிறார்கள் ரஜினிகாந்த் பேச்சு.

அவரது சொந்த அனுபவத்தை சொல்றாரு !!

அமைச்சர்கள் ஊழல் செய்ய தொடங்கி விட்டனர் ஆடியோ ஆதாரம் இருக்கு அண்ணாமலை பேச்சு.

மறுபடியும் அண்ணன் ஆரம்பிச்சுட்டாரு !!

கர்நாடக பாஜக தமிழகத்துக்கு செய்யும் துரோகத்தை தட்டிக் கேட்க முடியாமல் நயினார் நாகேந்திரனும் அன்புமணியும் எங்கே போனார்கள் மாணிக்கம் தாக்கூர் கேள்வி.

கர்நாடக காங்கிரஸ் அரசு ,தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தராமல் துரோகம் செய்கிறது என்று ஒருவாட்டி சொல்லிப் பாருங்கள் , முடியுமா ? முடியாது தானே, அதே மாதிரி தான் அவங்களுக்கும் !!

ஆயுதம் ஏந்தாத நக்சல்கள் என்பதில் பெருமை கொள்கிறோம் பிரதமர் மோடிக்கு பா.சிதம்பரம் பதிலடி.

தலைவர் இப்ப சிரிப்பா பேச ஆரம்பித்துவிட்டார் !!

உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசிற்காக வாதாட மூத்த வழக்கறிஞர் பா சிதம்பரம் உட்பட 35 பேர் நியமனம்.

இப்ப சும்மா தானே இருக்காரு !! அதான் ஒரு வேலை வாய்ப்பு !!

கர்நாடக முதல் மந்திரியை எதிர்த்து குரல் கொடுக்க தயங்க மாட்டோம் மாணிக்கம் தாகூர் பேட்டி.

அண்ணன் சித்தராமையா கோஸ்டி.

மாற்றம் தூய்மை என்று சொன்னவர்கள் "கல்லா கட்ட ஆரம்பித்து விட்டார்கள்" உதயநிதி ஸ்டாலின்.

பொறாமை !!

திமுகவில் இரண்டு தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலாளர் பதவி ஸ்டாலின் முடிவு.

ஆமா இப்ப எல்லாரும் சும்மா தானே இருக்காங்க !!

சுதந்திர தினம் சும்மா தினம் ஆகிவிட்டது சீமான், கிருஷ்ணசாமி பேட்டி.

பரவாயில்லையே உங்களுக்காக ஒரு 'தினம் '?