தொடர்கள்
வலையங்கம்
வலையங்கம் : இரண்டுமே தவறு

இரண்டுமே தவறு

20260721124534602.jpg

தஞ்சையில் அனுமதி இல்லாமல் விளம்பரப் பதாகை வைத்ததை அகற்ற காவல்துறை முயற்சி செய்தபோது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. அந்த சாலையை கடக்க முயன்ற மூன்று இளைஞர்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் வாக்குவாதம் செய்கிறார்கள். அப்போது அங்கு வந்த சிறப்புத் துணை ஆய்வாளர் ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அந்த வாலிபர்களை சமாதானப்படுத்தி அங்கிருந்து அப்புறப்படுத்த முயற்சி செய்யும்போது பிரச்சனை தீவிரமாகி ஒரு வாலிபரின் கன்னத்தில் அறைக்கிறார். பதிலுக்கு அந்த வாலிபரும் அந்த சிறப்புத் துணை ஆய்வாளரை கன்னத்தில் அறைகிறார். இந்த சம்பவம் இப்போது விவாத பொருளாகி இருக்கிறது.

காவல்துறையை பொதுமக்கள் கைநீட்டி அடிக்கலாமா என்று ஒரு கேள்வி. அனுமதி இல்லாமல் சாலை மறியலில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்தாமல் அப்பாவி பொதுஜனத்தை காவல் ஆய்வாளர் அடிக்கலாமா என்று இன்னொரு கேள்வி. அப்பாவி பொதுமக்கள் என்றால் இளக்காரமா. இதே மாதிரி அரசியல் கட்சி சார்ந்தவர்களை காவல்துறை கன்னத்தில் அறையுமா என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது. போலீஸ் பொதுஜனத்தை அடித்தது எப்படி தவறோ அது மாதிரி தான் பொது ஜனமும் காவல்துறையை அடித்தது தவறு.

பொதுஜனம் கேட்ட கேள்வி இதுதான் இப்படி சாலை மறியல் செய்பவர்களை கைது செய்யாமல் எங்களிடம் வாக்குவாதம் செய்கிறீர்களே என்பதுதான். இப்படி நியாயம் கேட்டதுக்கு தான் அவர் கன்னத்தில் அறை .கைது செய்யப்பட்ட அந்த இளைஞர் தற்சமயம் பிணையில் வெளி வந்திருக்கிறார். விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் உளுந்தூர்பேட்டையில் நடத்திய தமிழ் தேசிய மாநாட்டில் அவரது தொண்டர்கள் அடங்க மறு அத்துமீறு அளவில் மேடையில் ஏறி மேடை என்ன ஆகுமோ என்று பயந்து அவசர அவசரமாக பேச்சை முடித்துக் கொண்டார்.

அவரே எனக்கு இன்னொரு கரூர் சம்பவம் ஆகுமோ என்று பயந்தேன் என்று குறிப்பிட்டிருக்கிறார். ஒரு அரசியல் கட்சி கட்டுக்கடங்காமல் போனதால் கட்சித் தலைவரே பயந்து போகும் அளவுக்கு கட்சித் தொண்டர்களின் கட்டுப்பாடு இருக்கிறது.

தொண்டர்களை கட்டுப்படுத்த முடியாத தலைவர்.

சட்டத்தை மீறியவர்களை கண்டுகொள்ளாத காவல்துறை இரண்டுமே தவறு .