தொடர்கள்
சினிமா
சினிமா சினிமா சினிமா-லைட் பாய்

திரிஷா

2026061009441619.jpg

பொது நிகழ்ச்சிகளுக்கு நடிகை திரிஷா அணிந்து வரும் புடவை ட்ரெண்டிங் ஆகிவிட்டதால் ஜவுளிக்கடை அதிபர்கள் புடவை கடை விளம்பரத்திற்கு திரிஷாவை தேட ஆரம்பித்து விட்டார்கள்.

ஆண்ட்ரியா

லீடர் படத்துக்கு பிறகு, நோ என்ட்ரி மற்றும் மனுஷி போன்ற தமிழ் படங்களில் நடித்து வருகிறார் நடிகை ஆண்ட்ரியா.

கமலஹாசன்

20260610164207433.jpg

"அவருக்கு வயதாகி விட்டதே என்று யாரும் தப்பு கணக்கு போட்டு விடாதீர்கள். இப்போதும் சவாலான வேடங்களில் நடிக்க நான் தயார்" என்கிறார் 71 வயதாகும் கமலஹாசன்.

சாய் பல்லவி

நடிகை சாய் பல்லவி தனுஷ் மற்றும் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவின் நடிப்பை பாராட்டி பேசியதும் பட வாய்ப்புகளுக்காக இப்படி பேசுகிறார் என்று எல்லோரும் கருத்து சொல்ல "ஒருவரின் நடிப்பை பாராட்டி பேசினால் கூட ஆதாயம் தேடும் முயற்சி என்று சொல்வது வேதனையாக இருக்கிறது" என்று கோபப்படுகிறார் சாய் பல்லவி.

தனுஷ்

தனுஷ் நடிக்கும் 55-வது படத்திற்கு 'ஓம்' என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இந்தப் படத்தில் கிளைமாக்ஸ் காட்சியில் தனுஷ் முதிர்ச்சியான கெட்டப்பில் வருவாராம்.

ஸ்ரீ லீலா

20260610171510512.jpg

நடிகை ஸ்ரீலீலா "தனக்கு இணையாக நடனமாட எந்த நடிகையும் நடிகரும் கிடையாது " என்று சொன்னதாக யாரோ ஒரு தகவலை கொளுத்தி போட பயந்து போன நடிகை "தான் என்ற அகந்தை என்னிடம் கிடையாது .என்னை நன்கு அறிந்தவர்களுக்கு எனது குணம் தெரியும். வதந்திகளை பரப்புபவர்கள் தங்கள் போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும் "என்று கோபமாக பேசி இருக்கிறார் நடிகை ஸ்ரீலீலா.

சமந்தா

20260610164808780.jpg

ஏற்கனவே பெர்பியூம், ஆரோக்கியப் பொருட்கள் தொழில் ஈடுபட்டுள்ள நடிகை சமந்தா இப்போது புதிதாக பெண்களுக்கான மாதவிலக்கு மற்றும் ஆரோக்கிய பராமரிப்பு பிராண்ட் ஒன்றை அறிமுகப்படுத்தும் தொழில் ஈடுபட்டு இருக்கிறார்.

மலாய்க்கா அரோரா

பாலிவுட் இன்றும் தனது கவர்ச்சியால் வைத்திருக்கும் நடிகை மலாய்க்கா அரோரா உடற்பயிற்சி செய்வது உட்படகவர்ச்சிப் படங்களை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து ரசிகர்களை அப்டேட் செய்கிறார்.

பிரிஜிடா

20260610170150419.jpg

'பவி டீச்சர்' என்று ரசிகர்களால் அழைக்கப்பட்ட பிரிஜிட தன்னுடன் நடித்த ஆனந்தராமுடன் காதல் என்ற முக்கிய செய்தியை அறிவித்திருக்கிறார். இந்த ஆண்டடே திருமணமாம்.

காஜல் அகர்வால்

ஒரு ஹீரோ என்னை காதலிப்பதாக சொன்னார் என்ற தகவலை சொல்லி இருக்கும் நடிகை காஜல் அகர்வால் யார் அந்த ஹீரோ என்று சொல்லவில்லை. திருமதி ஆகிவிட்டார் விடுங்க.

திவ்யா பாரதி

20260610165920763.jpg

"கலெக்டர் ஆக வேண்டும் என்று நான் விரும்பினேன். என் அம்மா கன்னியாஸ்திரி ஆக வேண்டும் என்று விரும்பினார். கல்லூரி படிப்பு முடித்ததும் வேலைக்கு போய் திருமணம் ஆகி செட்டில் ஆக வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் நடிகையாக வேண்டும் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை" என்கிறார் நடிகர் திவ்யா பாரதி.

அமைராதஸ்தூர்

20260610193441536.jpeg

அனேகன் படத்தில் தனுசுக்கு ஜோடியாக நடித்தார் அமைராதஸ்தூர். ஆனாலும் தமிழில் அதிகம் நடிக்கவில்லை, இருந்தாலும் இன்ஸ்டாவில் அவரது பதிவுக்கு தமிழ் ரசிகர்கள் தான் அதிகம்.

தமன்னா

"ஒரு பாடல் உருவாக நூற்றுக்கணக்கான நடன கலைஞர்கள் கடுமையாக உழைக்கிறார்கள். அந்த உழைப்புக்கு கொஞ்சம் கூட மரியாதை தராமல் ' அயிட்டம் டான்ஸ்' என்கிறார்கள். ஆனால், அந்தப் பாடலை எழுதிய கவிஞரை பாராட்டுகிறார்கள் என்று வருத்தப்படுகிறார் தமன்னா.

பிரீத்தி முகுந்தன்

2026061016564151.jpg

' பிளாஸ்ட் ' படத்தில் ஆக்சன் காட்சிகளில் பிரீத்தி இயங்கியதை பார்த்து மிரண்டு விட்டார் ஆக்சன் கிங் அர்ஜுன். அவர் உடம்பின் ஒவ்வொரு அங்கமும் எல்லா கோணங்களிலும் இயங்கியதை நேரில் பார்த்து தான் இப்படி ஒரு கமெண்ட்.