
தமிழக வெற்றிக்கழக ஆட்சி கலையாது - கார்த்திக் சிதம்பரம்.
அப்பத்தான் உங்க கட்சி மந்திரி சபையில் இருக்க முடியும் !!
அரை நூற்றாண்டு கடந்த இயக்கம் யாராலும் அழிக்க முடியாது - எடப்பாடி பழனிச்சாமி.
ஆனால் உங்களால் முடியும் !!
அரசு வக்கீல் நியமனத்தில் முறைகேடு இல்லை -சட்ட அமைச்சர் நிர்மல் குமார்.
ஆனா உங்க கட்சி வக்கீல் தான் 30 லட்சம் லஞ்சம் கேக்குறாங்க என்று நீதிமன்றம் போய் இருக்கிறார் !!
திமுகவை யாரும் தொட்டு கூட பார்க்க முடியாது -உதயநிதி ஸ்டாலின்.
அண்ணா, ஓட்டு மிஷின்ல தொட்டு உங்கள வீட்டுக்கு அனுப்பிட்டாங்க ஜனங்க !!
பணம் பெற பல வழிகள் இருக்கிறது அதை சோபாவில்தான் பெற வேண்டுமா ?
அனுபவஸ்த்தர், நீங்க சொன்னா சரியா தான் இருக்கும் !!
நான் முதல்வராவதற்காக அரசியலுக்கு வரவில்லை கமலஹாசன்.
அதுதான் எல்லோருக்கும் தெரியுமே !!
விசாரணைக்கு ஆஜராகாமல் மாஜி அமைச்சர் செந்தில் பாலாஜி டிமிக்கி !!
வந்தா அங்க மூச்சா போயிடுவாரு பரவாயில்லையா !!
எஸ்.ஐ.ஆர் பூதத்தை பார்த்தால் பயமாக இருக்கு கர்நாடக அமைச்சர் பரமேஸ்வரன்.
மம்தா பனர்ஜியிடம் பேசி இருப்பார் போல தெரியுது?
ஸ்டாலின் பெயரை கேட்டாலே விஜய்க்கு உதறுது உதயநிதி ஸ்டாலின்.
அப்படியே உல்டாவா பேசறீங்க எம்எல்ஏ !!
25 ஆயிரம் டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு
கண்டிப்பா செய்யணும், அரசு கஜானாவுக்கு குபேரர் அவங்க தானே !!
விஜய் அமைக்கும் புதிய அணியில் இடம் பெறுவோம் தொல். திருமாவளவன்.
துணை முதல்வர் பதவி வேண்டும் என்று தீர்மானம் போட்டு இருக்கீங்களே ?

Leave a comment
Upload