தொடர்கள்
பேரிடர்
“ வயநாடு நிலச்சரிவு நீலகிரி நடுக்கத்தில் “ - ஸ்வேதா அப்புதாஸ்

தென்மேற்கு பருவமழை ஒவ்வொரு ஆண்டும் துவங்குவது மே மாத இறுதியில்.
இந்த பருவமழை கேரளாவில் துவங்கி மேற்கு தொடர்ச்சி மலை பகுதி முழுவதும் மழை தொடர்ந்து செப்டம்பர் மாதம் வரை நீடிக்கும்.

20260609220057820.jpeg
கடந்த சில வருடங்களாக ஒரு சில பகுதிகளில் கனமழை கொட்டி தீர்கிறது.
அதிலும் குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பெய்து வருகிறது.
அதிலும் மேக வெடிப்பு ஏற்பட்டு குறிப்பிட்ட பகுதிகளில் மழை நிலச்சரிவு ஏற்பட்டு மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

20260609220333916.jpeg
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் 2024 ஜூலை 30 ஆம் நாள் வயநாட்டில் சூரல்மலை பகுதியில் மேக வெடிப்பு ஏற்பட்டு மிக பெரிய நிலச்சரிவு ஏற்பட்டு 234 பேர் பலியானார்கள்.
இந்த மாதம் 7 ஆம் தேதி வயநாடு காலடி பகுதியில் சுரங்க பாதை அமைக்கும் பணியில் மேக வெடிப்பு ஏற்பட்டு 6 பேர் பலியாகினர்.

20260609220428583.jpeg
இந்த மேக வெடிப்பு நிலச்சரிவு கேரளா மாநிலம் முழுவதும் பயத்தில் உறைந்து போயுள்ளது.
இந்த நிலச்சரிவால் நீலகிரி நடுக்கத்தில் உள்ளது.
நீலகிரியில் கூடலூர் பகுதி முழுவதும் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.
முக்கியமாக இரண்டாவது சிரபுஞ்சி என்று அழைக்கப்படும் தேவாலா பகுதியில் கன மழை பெய்து வருகிறது இங்கு 7.8 செ மீ மழை பெய்துள்ளது.
இந்த பகுதி மற்றும் கூடலூர் முழுவதும் 8.6 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
பந்தலூரில் 6.1 செ மீ மழை பெய்துள்ளது.
அதே போல ஊட்டி மற்றும் வெலிங்டன் இராணுவ முகாமுக்கு குடிநீர் வழங்கும் பார்சன்ஸ் வேலி பகுதியில் 8.5 செ மீ மழை பதிவாகியுள்ளது.


இந்த பதிவுகள் ஒரே நாளில் பதிவாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இரண்டு வருடங்களுக்கு முன்பு வயநாடு பகுதியில் ஏற்பட்ட மேக வெடிப்பின் தொடர்ச்சி ஊட்டி அவலாஞ்சி பகுதியில் மேக வெடிப்பு ஏற்பட்டு கன மழை கொட்டி மிக மோசமான நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
அந்த பகுதியில் மக்கள் இல்லாததால் எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை.
அதனால் அங்கு ஏற்பட்ட பாதிப்பு வெளி உலகிற்கு தெரியாமல் போனது.

20260609220559825.jpeg
நீலகிரி முழுவதும் கடந்த இரண்டு வாரமாக தொடர் மழை பெய்து வருகிறது.
அதில் கூடலூர் மற்றும் அவலாஞ்சி பகுதிகளில் கன மழை கொட்டி தீர்த்து வருகிறது.
ஒரே நாளில் ஒரே இடத்தில் பலத்த மழை பெய்வதால் மிக பெரிய ஆபத்தை நீலகிரி எதிர் நோக்கி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

20260609220936977.jpeg
நீலகிரி வாசிகள் நடுக்கத்தில் இருக்க …இந்த இயற்கை பேரிடர் ஆபத்தை உணராமல் சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.