நேருவை மறக்கலாமா?!
நமது நாட்டின் 75வது சுதந்திர தினத்தை ஒட்டி மத்திய கல்வி அமைச்சகம் ஒரு விளம்பர போஸ்டரை வெளியிட்டது, அதில் முன்னாள் பிரதமர் நேரு படம் இல்லை. பாரதிய ஜனதா ஏற்கனவே ஜவஹர்லால் நேருவை விமர்சித்து, சர்தார் வல்லபாய் பட்டேல் புகழ் பாடும் வேலையை தற்போது புதிதாக தொடங்கி இருக்கிறது. அதன் எதிரொலி தான் ஜவஹர்லால் நேரு படம் இருட்டடிப்பு.
இதன் மூலம் சுதந்திரப் போராட்ட வரலாற்றை மூடிமறைக்கும் என்ற குற்ற உணர்வு, மத்திய அரசுக்கு தோன்றாமல் போனது ஆச்சரியம்தான்.
நேரு, பதினோரு ஆண்டுகள் சிறையில் இருந்தார். சுதந்திரப் போராட்டத்தில், காந்திக்கு அடுத்து அவரது பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. அதனால் தான் ஜவஹர்லால் நேரு, சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஆகும் தகுதியைப் பெற்றார். 17 ஆண்டுகள் இந்த நாட்டின் பிரதமராக இருந்து, சரித்திரம் படைத்திருக்கிறார் ஜவஹர்லால் நேரு.
முன்னாள் பிரதமர் வாஜ்பாய்... ஜவஹர்லால் நேரு இறந்தபோது, பாரத மாதாவின் ராஜகுமாரன் என்று நேருவை வர்ணித்தார்.
வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, ஒரு நாள் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ளே நுழையும் போது எப்போதும் அங்கு இருக்கும் ஜவஹர்லால் நேருவின் படம் அங்கிருந்து அகற்றப்பட்டு இருந்ததைப் பார்த்தார். உடனே அதிகாரிகளை அழைத்து, இங்கு வைக்கப்பட்டிருந்த நேரு படம் எங்கே என்று கேட்டார். உடனே... மீண்டும் நேரு படத்தை அதிகாரிகள் அங்கு வைத்தார்கள்.
பாராளுமன்ற ஜனநாயகம், பாரபட்சமற்ற தேர்தல், இதெல்லாம் நேரு நமக்கு அறிமுகப்படுத்தியது, சுதந்திரத்திற்காகவும் நேரு பாடுபட்டார். சுதந்திர இந்தியாவின் பிரதமர் என்ற முறையில், இந்த தேசத்துக்கு அவர் ஆற்றிய பணிகள் சொல்லிமாளாது. நேருவின் வரலாற்றை, மறுக்கவோ.. மறைக்கவும் முடியாது. அவர் ஜனநாயகத்தின் உதாரண புருஷர்.
அவர் படத்தை புறக்கணிப்பதன் மூலம், நேருவின் சகாப்தத்தை மறைக்க முடியாது. மத்திய அரசின் சிறுபிள்ளை தனத்தை, எல்லோரும் பரிகாசம் தான் செய்வார்கள், பாராட்ட மாட்டார்கள். இந்தs செயலுக்காக மத்திய அரசு வெட்கி தலைகுனிய வேண்டும்.
Leave a comment
Upload