தொடர்கள்
கதை
அபூர்வ ராகம்!  முனைவர் என். பத்ரி

20260114094311867.jpg

எனது அப்பாதான் அந்த கல்யாணப் பேச்சைத் தொடங்கினார். ’எதிர்வீட்டுலதாவின் அம்மா கமலாவை நான் நான் திருமணம் செய்துக் கொள்ளலாம்’ என்றுநினைக்கிறேன் ’அவளுக்கும் கணவன் இல்லை.நான் சாப்பாட்டுக்குப்படும் கஷ்டம் மிகஅதிகமாக இருக்கிறது’ என்று சொல்லிக் கொண்டே போனார். எனக்கு ஒன்றும் புரியவில்லை.

நான் குழந்தையாக இருந்த போதே என்னுடைய அம்மா இறந்து விட்டாள். இப்பொழுது 48 வயதாகும் அப்பாவின் நிலை எனக்கு திருமணம் ஆகிவிட்டால் என்னவாகும்?இந்த நினைப்பு அவருக்கு. இதே நிலை தான் எதிர்விட்டு லதாவின் அம்மாவிற்கும்.

ஆனால் கமலாவின் மகள் லதாவுக்கும் எனக்கும் இடையே உள்ள இந்த ஈர்ப்பு இவர்கள்திருமணம் செய்து கொண்டால் என்னவாகும்?

எனக்கு தலைச் சுற்றியது. என்னுடைய அப்பா தான் முதுகில் தட்டினார்

’சரி. சரி.” முதலில் உன் கல்யாணத்தை முடிக்கிறேன். பிறகு நான் என்கல்யாணத்தை பற்றி யோசித்துக் கொள்கிறேன்.’ என்று சொல்லிவிட்டு பக்கத்தில் இருந்தநூலகத்திற்குச் சென்று விட்டார்.

சில மாதங்களுக்கு முன்பு….

தாம்பரத்திலிருந்து அந்த ரயில் புறப்பட்டது. அந்த இளம் வயது பெண்மணிஎன்னிடம்,’இது மாம்பலம் போகுமா?’ என்று கேட்டுக் கொண்டே இரயிலில் ஏறமுற்பட்டாள்.இரயில் ஏறத்தாழ புறப்பட்டு விட்டது அவள் கீழே விழுந்து விடாமல் இருக்கஅவளை அணைத்துப் பிடித்து இழுத்து உள்ளே ரயிலில் ஏற்றி விட்டேன்.பார்வையாலேயேநன்றி சொன்னாள் அவள் .அடிக்கடி அண்ணலும் நோக்கினாள்.நானும்தான். மாம்பலம் வந்தது.நானும் அவளும் இறங்கினோம்.

காலை 11 மணி இருக்கும்.எங்கள் அலுவலத்தில் நடந்த நேர்காணலில் அவளும்கலந்து கொண்டாள்.அவளின் பெயர் லதா என்று அறிய வந்தேன். எம்.டி.க்கு வேண்டியஒருவருக்கு அந்தப் பதவி ஒதுக்கப்பட்டது.

அன்று மாலை. நான் வீட்டுக்கு திரும்ப மாம்பலம் ரயில் நிலையத்தில் ரயிலுக்காககாத்திருந்தேன். லதாவை திரும்பவும் பார்க்க நேர்ந்தது. ஸ்டேஷன் கேண்டீனில் காஃபிகுடித்துக் கொண்ட நாங்கள் நெருக்கமாகி விட்டோம். வேறொரு கம்பெனியில் வேலை கிடைத்து விட்டதாகச் சொன்ன அவள் தங்க இடம் வேண்டும் என்றாள்.

என்னுடைய எதிர் வீட்டில் காலியாக இருந்த போர்ஷனில் அவளுக்கு தங்க இடம்கிடைத்தது. மகிழ்ச்சியில் நான். லதா தன் அம்மாவுடன் அடுத்த வாரமே வந்து அந்த வீட்டிற்குவந்து செட்டிலாகிவிட்டாள்.

இருவருக்குமே அலுவலகம் மாம்பலத்தில்தான். எனவே, ஒன்றாகவே போய்வந்தோம்.பார்ப்பவர்கள் எல்லோருமே எங்களை கணவன்,மனைவி என்றே பேசிக்கொள்கிறார்களாம்.இதைச் சொன்ன அவள் முகம் வெட்கத்தால் சிவந்தது.

நன்றாகச் சென்று கொண்டிருந்த எங்கள் காதல் வாழ்க்கையில், லதாவை சிலநாட்களாகக் காணவில்லை. அவளுடைய அம்மாவையும் தான்.எதிர் வீட்டில் போய்க்கேட்டேன்.சொந்த ஊருக்கு போயிருப்பதாக அந்த அம்மா என்னிடம் சொன்னாள்..தனிமைஎன்னை வாட்டியது.

அப்பாவின் பிடிவாதம் என்னை அடுத்து வந்த ஞாயிற்றுக்கிழமை திருச்சியில் பெண்பார்க்கும் படலத்துக்கு அழைத்துச் சென்றது. பெண்ணின் பெரியப்பாவிடம், ’நீங்கள்வேறு ஒரு நல்ல இடத்தை பார்த்துக் கொள்ளுங்கள். உங்களுடைய தம்பி மகளுக்கு என்னைவிட சிறப்பாக ஒரு மணமகன் கிடைப்பான்’ என்று தைரியமாக சொல்லிவிட்டு அப்பாவைபார்க்க தைரியம் இல்லாமல் தலைகுனிந்தேன்.

அப்போது தான் அது நடந்தது உள்ளிருந்து பச்சைப் புடவையில் தேவதையாக லதா வந்துஎதிரே உட்கார்ந்தாள். என்னை பார்த்து சிரித்தாள். ’வழக்கம்போல் மாடிக்குச் சென்று போய்பேசுங்கள்’ என்று சொன்னார்கள். மேலே சென்றோம் நடந்ததைச் சொன்னாள்.

‘நாம் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைத்தது. நீங்களும் நானும் ஒருவரைஒருவர் விரும்புவது போல என்னுடைய அம்மாவும் உங்களுடைய அப்பாவும் ஒருவரை ஒருவர்விரும்புகிறார்கள். அபூர்வ ராகங்கள் கதையாகி விட்டது.’சொல்லி முடித்தாள் லதா.

இதையெல்லாம் என்னுடைய பெரியப்பாவிடம் என்னுடைய அம்மா வந்து சொல்லிஇருக்கிறார். அதற்கு அவர் பிள்ளைகள் வாழ்க்கைதான் மிகவும் முக்கியம். அவர்களின்திருமணத்தை முதலில் நடத்தி முடித்து விடுவோம். நீங்கள் நல்ல நண்பர்களாகஇருங்கள்’என்று சொன்னார்கள்.

அந்த முடிவை ஏற்றுக் கொண்ட என்னுடைய அம்மா உன்னுடைய அப்பாவிடம்இதை சொல்லியிருக்கிறாள். அவர்களுக்கு தேவை நம்முடைய ஆதரவு தான். திருமணம்இல்லை என்று சொல்லியபடி கையில் வைத்திருந்த ஒரு சிவப்பு ரோஜாவை புன்னகையுடன்என்னிடம் கொடுத்தாள்.அவள் காதில் நான் இனிமேல்,’ உன் பெயர் அபூர்வ ராகம்’ என்றேன்.