காதல் ஸ்பெஷலில் சுஜாதாவின் ஏழாவது கட்டளையை போடுவது கொஞ்சம் அநியாயம் தான்.
இருந்தாலும் குருநாதர் சொல்லிட்டாரே.. என்ன செய்வது.

7. வாரத்தின் ஏழாவது தினமான ஞாயிறன்று என்ன செய்தாலும் காதல் பிஸினஸ் வேண்டாம். காதலுக்கு ரொம்பச் செலவாகும். மனம், வாக்கு, காயம்(உடல்), எல்லாவற்றையும் ஆக்கிரமிக்கும் தீ அது. பொய் நிறையச் சொல்ல வேண்டும். வினோதமான இடங்களில் காத்திருக்க வேண்டும். இந்த வயதில் நாசமாய்ப்போன படிப்புத்தான் உங்களுக்கு முக்கியம்.குறிப்பு: பெண்களை சைட் அடிப்பதும், கலாட்டா பண்ணுவதும், அவர்களுக்கு கர்சீப் முதலியன ரோடிலிருந்து பொறுக்கிக் கொடுப்பதும், உபத்திரமில்லாத கவிதைகள் எழுதுவதும், காதலோடு சேர்த்தியில்லை.
சுஜாதா சொல்லுவார் "சூப்பர்" என்ற வார்த்தை இல்லையெனில் தமிழில் ஆச்சரியப்பட வார்தையே இல்லை என.
அது போலவே காதல் என்ற சமாச்சாரம் இல்லையெனில் உலக சினிமாவே இல்லை. குறிப்பாக பாலிவுட்டில் எல்லா நட்சத்திரங்களும், டைரக்டர்களும் ரோடு போட போய் விட வேண்டியது தான்.
சினிமாவில் ஏக தொடர்பு இருந்தாலும், ஶ்ரீரங்கத்து தேவதைகளில் காதலை தொட்டு சிலாகித்திருந்தாலும், வாத்தியார் ஏன் ஏழாவது கட்டளையை இப்படி போட்டர் தெரியவில்லை.
அவர் சொன்னா அப்பீல் ஏது !

Leave a comment
Upload