தொடர்கள்
சினிமா
சினிமா சினிமா சினிமா-லைட் பாய்

மமிதா பைஜூ

20260113140705584.jpg

"ட்ரோல்கள் இதை ரசிகர்கள், பொதுமக்கள் வெறும் பொழுது போக்குக்காக மட்டும் பார்க்கின்றனர். நானும் அப்படித்தான் பார்க்கிறேன்" என்கிறார் நடிகை மமீதா பைஜூ.

ஐஸ்வர்யா ராஜேஷ்

20260113182259285.jpg

தற்சமயம் தெலுங்கு படங்களில் பிசியாக இருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். படப்பிடிப்பு தளத்தில் எல்லோருக்கும் தோசை சுட்டு தந்து பரிமாறி இருக்கிறார் நடிகை. காவலா, காவலா அதாவது வேண்டுமா வேண்டுமா என்று கேட்டு அவர் உபசரித்த வீடியோ தற்சமயம் வைரலாகி கொண்டு இருக்கிறது.

பிரியாமணி

20260113161257608.jpg

தெலுங்கு படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக பிரியாமணி நடிக்க இருக்கிறார்.

நயன்தாரா

20260113140817802.jpg

சல்மான் கான் ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார் நயன்தாரா. இந்தப் படத்தில் வில்லன் அரவிந்த்சாமி.

மீனாட்சி சவுத்ரி

20260113140924605.jpg

சமீபத்தில் ஹைதராபாத்தில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை மீனாட்சி சவுத்ரி உடலை நூலால் சுற்றியது போல் ஒரு மேலாடையை அவர் அணிந்திருந்தார். அவரது இடுப்பு பகுதி தெரியும்படி அந்த உடை இருந்தது. கல்லூரி நிகழ்ச்சியில் இப்படி அரைகுறை ஆடையுடன் அவர் வந்தது தற்சமயம் விமர்சனத்திற்கு ஆளாகி இருக்கிறது. அதற்கு முன் தினம் தான் திருப்பதிக்கு பெருமாளை தரிசிக்க ஹோம்லி லுக்கில் சென்று இருந்தார் நடிகை. .

சாய் தன்ஷிகா

20260113181653406.jpg

"மற்றவர்கள் சொல்வது போல் நினைப்பது போல் நான் துணிச்சலான பெண் கிடையாது. சொல்லப்போனால் தைரியம் குறைந்த பெண்களில் நானும் ஒருத்தி. நான் படாத கஷ்டங்களை இல்லை. அப்போது எல்லாம் மனம் உடைந்து அழுது இருக்கிறேன் "என்று சொல்லி இருக்கிறார் நடிகை சாய் தன்ஷிகா. இப்போது ரசிகர்கள் அவருக்காக அழ ஆரம்பித்து விட்டார்கள்.

திரிஷா

20260113141101916.jpg

மௌனம் பேசியதே அமீர் இயக்குனராக அறிமுகமான படம். திரிஷா கதாநாயகியாக அறிமுகமான படம். 24 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ரீரீலீஸ் ஆகிறது மௌனம் பேசியதே.

மிருணாள் தாக்கூர்

20260113161817183.jpg

முதல்முறையாக ராம்சரண் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியிருக்கிறார் நடிகை மிருணாள்தாகூர் .முதலில் இந்த பாடலுக்கு ராஷ்மிகா மந்தனாவை அழைக்க அவர் மறுத்ததால் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. இதற்கான சம்பளம் அவருக்கு கோடிகளில் கிடைத்தது.

ஸ்ருதிஹாசன்

20260113182544117.jpg

நடிகை ஸ்ருதிஹாசன் நாடக நடிகர் மைக்கேல் கோர்சேல் என்பவரை காதலித்து அந்த காதல் முறிந்தது. இதனால் 2018 முதல் 2020 வரை படங்களில் நடிக்காமல் இருந்தார். சமீபத்தில் அந்த அனுபவங்களை குறிப்பிட்டு "அவரைப் பிரிந்தது சோகமாக இருந்தது. அதனால் லண்டனில் இருந்தபடி இசையின் மூலமாக என்னை நான் மீண்டும் கண்டறிந்தேன். தினந்தோறும் எனது ஆடைகளை நானே துவைப்பது, எனக்கான உணவை நானே சமைப்பது, மெட்ரோ ரயிலில் பயணிப்பது என்று எனது வாழ்க்கையை மிக வித்தியாசமாக அமைத்து இருந்தேன். அதை நான் யாருக்காகவும் மாற்றிக் கொள்ளமாட்டேன் "என்று சொல்லியிருக்கிறார் நடிகை.

தபு

நாகார்ஜூனாவின் நூறாவது படத்தில் நடிக்கிறார் நடிகை தபு. நூறாவது படத்தில் நானும் இடம் பெற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். அவரது வேண்டுகோளை என்னால் நிராகரிக்க முடியவில்லை என்கிறார் நாகர்ஜுனா. இருவரும் ஏற்கனவே இரண்டு படங்களில் நடித்திருக்கிறார்கள் ஜோடியாக.

டாக்டர் ஸ்ரீலீலா

2026011317195988.jpg

பூனே மருத்துவ கல்லூரியில் படித்து வந்தார் நடிகை ஸ்ரீலிலா. .இப்போது மருத்துவ படிப்பை நிறைவு செய்து பட்டம் பெற்றுள்ளார். அவர் கல்லூரி விழாவில் பட்டம் பெறும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.

தமன்னா

20260113180726945.jpg

பிரபல மைசூர் சாண்டல் சோப்புக்கு விளம்பரத் தூதராக கர்நாடக அரசு நிறுவனமான சோப்பு தயாரிக்கும் நிறுவனம் தமன்னாவை நியமித்திருக்கிறது. இதற்கு அவருக்கு 6 கோடி தருகிறது. நிறுவனம். கன்னட நடிகைகளுக்கு தராமல் காங்கிரஸ் அரசு கன்னடருக்கு துரோகம் செய்துவிட்டது என்று இதை அரசியல் ஆக்கியிருக்கிறது பாஜக.