
காங்கிரஸ் எங்களோடு தான் இருக்கும் ஸ்டாலின் திட்டவட்ட அறிவிப்பு.
ஆமா பாவம் அவங்களுக்கும் வேற வழி இல்ல !!
தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சியே தொடரும் செல்வப் பெருந்தகை.
அதாவது திமுக தனித்து ஆட்சி அப்படித்தானே !!
விஜய் கூட்டத்திற்கு சேலத்தில் பூமி பூஜை.
இதுவும் போலீஸ் சொன்ன அந்த 52 நிபந்தனைகளில் இருக்குமோ !!
திமுக காங்கிரஸ் தலைவர்களிடையே இணக்கமான நல்லுறவு உள்ளது கனிமொழி எம்பி பேட்டி.
அதாவது மாணிக்தாக்கூர் தவிர அப்படித்தானே !!
மக்களவை சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மான நோட்டிஸ்.
அப்ப இத பேசறதுக்காவது, கண்டிப்பா பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமைதியாக இருந்துதான் ஆகணும் !!
பணத்தை மட்டுமே நம்பி திமுக தேர்தலில் நிற்கிறது அன்புமணி ராமதாஸ்.
சின்னய்யாக்கு பணம் தேவை இல்லையா ?
திமுக மீது காங்கிரஸ் தொண்டர்கள் வேதனையில் இருக்கிறார்கள் கிரிஷ் சோடங்கர் குமுறல்.
திமுகவும் தான் உங்களால ரொம்ப வேதனையில் இருக்காங்க !!
எந்த காலத்திலும் கூட்டணி ஆட்சி கிடையாது அமைச்சர் ராஜ கண்ணப்பன்
ஆமா கூட்டணி ஆட்சி இருந்தால் இவருக்கு மந்திரி பதவி கிடைக்காதே !!
உலக நாடுகளுடன் போட்டியிடும் அளவுக்கு தமிழ்நாடு வளர்ந்திருக்கிறது முதலமைச்சர் ஸ்டாலின்.
ஆனா போட்டி தேர்வில் தான் நாங்க சொதப்புவோம் !!
தேர்தலுக்கு இன்னும் காலம் உள்ளது அப்போது எங்கள் நிலைப்பாட்டை தெரிவிப்போம் புதிய தமிழகம் கிருஷ்ணசாமி.
இந்த குரல் பிரேமலதா விஜயகாந்த் குரல் மாதிரி தெரியுது !!
விஜய்யை செங்கோட்டையன் புகழ்ந்து பேசுகிறார். எங்களுடன். இருந்தவர் இவ்வளவு கீழ்த்தரமாகி விட்டார் திண்டுக்கல் சீனிவாசன்.
சீச்சி இந்த பழம் புளிக்கும் !!
ஆட்சியில் பங்கு கேட்கும் உரிமை எல்லோருக்கும் உண்டு அமைச்சர் ரகுபதி.
ஆனால், தர முடியாது என்று சொல்லும் உரிமை எங்களுக்கு மட்டுமே உண்டு அப்படித்தானே அமைச்சரே !!
அரசு ஊழியர்களின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் முதல்வர் ஸ்டாலின்.
இந்த டயலாக் போன தேர்தலில் சொன்ன மாதிரி தெரியுது !!
அதிமுக ஒரு கட்சியே அல்ல செங்கோட்டையன்.
அண்ணன் தெரியாமலே அந்த கட்சியில் 50 வருஷம் இருந்துட்டு இருக்காரு !!

Leave a comment
Upload