
தமிழகத்தில் இன்னும் சில நாட்களில் வருகிற சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாக இருக்கிறது.

திமுக தனது கூட்டணியை கிட்டதட்ட முடிவு செய்து விட்டு ஹாயாக தேர்தல் பணிகளை முழுவீச்சில் முடுக்கிவிட்டுள்ளது.

அதிமுக தனது கூட்டணியை எப்படி அமைப்பது என்ற சக்கர வியூகம் அமைத்து கொண்டு செயல்பட்டு கொண்டிருக்கிறது.
பிஜேபி தமிழகத்தில் காலூன்றி வலுவான நிலையில் தங்களுக்கு இரட்டை இலக்கு வாக்கு வங்கி உள்ளது என்ற அசைக்க முடியாத நம்பிக்கையில் உள்ளது.
நாம் தமிழர் கட்சி ஏற்கனவே தமிழகத்தில் அனைத்து தொகுதிகளுக்கும் தனது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு கூலாக இருக்கிறது.

காங்கிரஸ் கட்சி ஆட்சியில் பங்கு என்ற வாசகத்தினை முன் வைத்து மதில் மேல் பூனையாக கூட்டணி யாருடன் என்ற கனவில் சுழன்று வருகிறது.
காங்கிரஸ் கட்சியில் தற்போது தமிழகத்தில் தங்களுக்கு வாக்கு வங்கி குறைந்து இருப்பதாக கவலை மறுபுறம் தோன்றியுள்ளது.

நடிகர் விஜய் தற்போது சவால் விட்டு பேசி வருவது திமுக , அதிமுக தரப்பினை டென்ஷன் ஆக்கி வருகிறது.

நடிகர் விஜய் தற்போது ஆளும் திமுக ,எதிர்கட்சி அதிமுகவிற்கு சிம்ம சொப்பனாக இருந்து வருகிறார்.
தவெக கட்சி தமிழக அரசியலில் பல ஜாம்பவான் வேட்பாளர்களுக்கு வெற்றி ,தோல்வியை நிர்ணையிக்கும் என்று அரசியல் நோக்கர்களின் கருத்தாக உள்ளது.

அனைத்து மகளிருக்கும் ருபாய்1000 வழங்கப்படும் என்று சென்ற திமுக தேர்தல் அறிக்கையில் இருந்தது, அதன் பின் தகுதியுள்ள மகளிருக்கு ரு1000 என மாற்றப்பட்டு பணம் வங்கி கணக்கில் பயனாளருக்கு அனுப்பிவந்தனர். தற்போது இன்ப அதிர்ச்சியாக ரு5000 தகுதியுள்ள மகளிருக்கு திமுக திராவிட மாடல் ஆட்சி அனுப்பி வைத்துள்ளது.
இதில் பலர் மனுப்போட்டும் இதுவரை அவர்களுக்கு கலைஞர் மகளிர் உதவி தொகை கிடைக்கவில்லை என்பது தமிழக பெண்கள் பெரும்பாலோனர் வருத்தத்தில் உள்ளனர் .

அன்புமணி ராமதாஸ் சவுமியா தம்பதிகள் மதுரை கள்ளழகர் கோயிலுக்கு குடும்ப சமேதராய் சென்று வழிபட்டனர்.
பீகார் போன்று ரு10 ஆயிரம் அனைத்து ரேஷன் கார்டுக்கும் தமிழக முதல்வர் வழங்க வேண்டும் என்று தற்போது தமிழக வாக்களார்களின் குரலாக ஒலிக்கிறது.
அரசு ஊழியர்கள் கொஞ்சம் ஆளும் கட்சி மீது கோபத்தில் இருப்பது இப்போது வரை நிஜம் .
எது எப்படியோ , வருகிற தேர்தல் திமுக தலைமை தங்களுக்கு 45 சதவீத வாக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளனர் .
தமிழக வாக்களார்கள் தங்களது வாக்கினை கடைசி நிமிடம் வரை எப்படி அளிப்பார்கள் என்பது பில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.
வெற்றி யாருக்கு என்பது இப்போதைக்கு வெயிட் அண்ட் சீ தான்!

Leave a comment
Upload