தொடர்கள்
விகடகவியார்
பிடிவாதம் பிடிக்கும் காங்கிரஸ்

20260113172749840.jpg

டெல்லியில் பத்தாம் தேதி தமிழகத்தைச் சேர்ந்த புதிய மாவட்ட தலைவர்கள் ஆலோசனை கூட்டத்தை ராகுல் காந்தி கூட்டி இருந்தார்.

இந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் கார்கே, மூத்த தலைவர் பா சிதம்பரம், செல்வப் பெருந்தகை ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

இவர்கள் தவிர தொகுதி பங்கீடு பற்றி பேசுவதற்காக நியமிக்கப்பட்ட கிரீஸ் சோடங்கர், சூரஜ் ஹெக்டெ, நிவேதிக் ஆல்வா ஆகியோரும் கலந்து கொண்டார்கள்.

தொகுதி பங்கீடு பற்றி காங்கிரஸ் குழு அமைத்து 70 நாட்கள் ஆகிறது

திமுக பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை என்ற வருத்தத்தை அங்கு பேசிய தலைவர்கள் எல்லாம் ராகுல் காந்தியிடம் தெரிவித்தார்கள்.

39 தொகுதி மற்றும் ஒரு ராஜ்யசபா என்பதில் காங்கிரஸ் உறுதியாக இருக்கிறது என்பதை ராகுல் காந்தி தெளிவுபடுத்தினார்.

ஆட்சியில் பங்கு விஷயத்தை நாம் தேர்தலுக்குப் பிறகு பேசுவோம் என்றும் அந்த கூட்டத்தில் சொல்லி இருக்கிறார் ராகுல் காந்தி.

பெரும்பாலான மாவட்ட தலைவர்கள் திமுக தங்களை மதிப்பதில்லை.

தங்கள் கோரிக்கைகளை கண்டு கொள்வதில்லை போன்ற புகார்களை சொல்லி இருக்கிறார்கள் .எனக்கு எல்லாம் தெரியும் என்று அவர்களை சமாதானப்படுத்தி இருக்கிறார் ராகுல் காந்தி.

சந்திப்பிற்கு பிறகு வெளியே வந்த செல்வப் பெருந்தகை நிருபர்களை சந்திக்கும் போது "பேச்சுவார்த்தைக் குழுவை திமுக அமைக்கவில்லை என்பதில் காங்கிரஸ் தலைமைக்கு ஏக வருத்தம். சென்னைக்கு போய் முதல்வரை சந்தித்து இதை நான் சொல்வேன்.

ராகுல் காந்தி பிரியங்கா காந்தி தேர்தல் பிரச்சாரத்திற்கு வர தயாராகி விட்டார்கள். ஆனால் தொகுதி பங்கீடு என்ற விஷயம் தான் இதற்கு தடையாக இருக்கிறது" என்றெல்லாம் பேசியிருக்கிறார் நிருபர்களிடம் தமிழக காங்கிரஸ் தலைவர்.

செல்வப் பெருந்தகை திமுக தலைவர் சந்திப்பு நடக்கவில்லை. அதற்கு பதில் 22- ஆம் தேதி முதல் கூட்டணித் தலைவர்களுடன் தொகுதி பங்கீடு பற்றி திமுக பேசும் என்று ஒரு அறிக்கை வெளியானது.

அந்த அறிக்கையில் வாக்காளர் சிறப்பு திருத்தம், பூத்கமிட்டி ,இளைஞர் அணி மாநாடு, மகளிர் அணி மாநாடு திமுக ஆட்சியின் சாதனைகளை விளக்கி மகளிர் அமைப்பு வீடு வீடாக சென்று பிரச்சாரம் செய்கிறோம், இடைக்கால பட்ஜெட் என்று நாங்கள் பிசியாக இருக்கிறோம்.

கூட்டணி கட்சிகளுக்கும் சேர்த்து நாங்கள் வேலை பார்க்கிறோம் நீங்கள் ஒன்னும் செய்யவில்லை என்பதை அந்த அறிக்கையில் மறைமுகமாக திமுக தலைமை சுட்டிக்காட்டி இருக்கிறது.

காங்கிரஸ் வேண்டாம் அவர்களை கழட்டி விடுங்கள் என்று மூத்த தலைவர்கள் முதலமைச்சருக்கு அழுத்தம் தந்தாலும் நீங்கள் யாரும் உணர்ச்சிவசப்பட்டு ஏதாவது பேசி கூட்டணியை கெடுக்காதீர்கள் என்று திமுக தலைவர் தடை போட்டு இருக்கிறார்.

அதையும் மீறி ராஜ கண்ணப்பன் போன்ற அமைச்சர்கள் காங்கிரஸ் கட்சியை குறை சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். முதலமைச்சரும் கூட்டணி ஆட்சி தமிழகத்திற்கு ஒத்துவராது என்று தெளிவுபடுத்தி இருக்கிறார்.

காங்கிரஸ் கட்சியே யோசித்தபோது ராகுல் காந்தியை நாம் பிரதமர் வேட்பாளர் என்று அறிவித்தோம்.

ராகுல் காந்தியயே இப்போது நமக்கு சரியில்லையே என்ற ஆதங்கமும் திமுக தலைவருக்கு இருக்கிறது.

தேர்தல் நெருங்க நெருங்க ஆளுங்கட்சியில் இதுபோல் நிறைய முட்டல் மோதல்கள் எதிர்பார்க்கலாம் .