ன்றே விநாயகர் ஸ்பெஷல் புரமோ வீடியோ செம அசத்தல்! பூஜையை சீக்கிரமே முடிச்சுட்டு, இதை பார்க்க வேண்டியதுதான்!
ரோகித், சாய்கிருஷ்ணா, சைதாப்பேட்டை
வாவ் வாட்ஸப்!
Comment : அனைத்து வாட்ஸ் அப் படங்களும் செம சூப்பர்! எதை சொல்றது, எதை விடறதுன்னே தெரியலை... மொத்தத்தில், வீடியோ படங்கள் கொள்ளை அழகு!
தீட்சிதா, கௌஷிக், ஷிவானி, மும்பை
15 நாட்களுக்குள் முறிந்த எலும்பை இணைக்கலாம்... - மாலாஸ்ரீ
Comment : மிக நல்ல விஷயம். ஏன்னா, கை, கால் எலும்பு உடைஞ்சவங்க பல மாதங்களாக மாவு கட்டோ அல்லது புத்தூர் கட்டோ போட்டு வேதனையுடன் அலைவதை கண்கூடாக பார்த்திருக்கிறேன். இந்த புதிய செயல்முறையை விரைவில் கொண்டு வர வேண்டும்.
சியாமளா விஸ்வம், ராயப்பேட்டை
‘வந்தார் மாப்பிள்ளை’ - வெ.சுப்பிரமணியன்
Comment : சுப்பிரமணியனின் வந்தார் மாப்பிள்ளை சிறுகதை மிக மிக அருமை. அதில் ஒவ்வொரு கேரக்டர்களும் மிக சிறப்பாக கையாளப்பட்டு இருக்கின்றன.
ரேணுகா ஹரிஹரன், பெங்களூர்
கல்யாணராமனின் 'ஞாயிறு என்பது கண்ணாக'... மீண்டும் ஒரு காதல் பேய் கதையா..?! பேயையே பெண்ணாக உருவாக்கி, உங்களிடம் அனுப்பி வைத்து, நாங்கள் தரமான பேயடிச்சான் கதையை கொண்டு வருவோம்.
ராதா வெங்கட், ஆலப்பாக்கம்
மிஸ்டர் ரீல்...! - ஜாசன்
வருங்கால முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சொல்ற வார்த்தைகளை வெச்சு, இப்படியா கலாய்ப்பீங்க மிஸ்டர் ரீல்?! அப்புறம், நாளைக்கு நீங்க சேப்பாக்கம் தொகுதி பக்கம் போனா, உங்களை எய்ம்ஸ் கல் தாக்கிடப் போகுது!
மாயா குப்புசாமி, ஶ்ரீரங்கம்
நாதஸ்வர தர்பார் - 6... - இசை விமர்சகர் வி. சந்திரசேகரன்
நாதஸ்வர சக்ரவர்த்திகளான சம்பந்தம் சகோதரர்களின் சிறப்புகளை பற்றி, தனது சகோதரரின் மகுடி வாசிக்கும் வித்தையை மிக அழகான ஓவியம் போல் வர்ணித்து இருக்கிறார் தவில் பாலசுப்பிரமணியன்.
ரத்தினசபாபதி, வேங்கடமங்கலம்
“ஊட்டி மார்க்கெட் சீல்”... - ஸ்வேதா அப்புதாஸ்
என்னடா இது... ஊட்டி நகராட்சிக்கு வந்த பெரும் சோதனை! விருது வாங்கிய கையோடு, நகராட்சி மார்க்கெட்டுக்கு சீல்... வியாபாரிகளும் மாத வாடகையை ஒழுங்காக செலுத்தியிருந்தால், இந்த இக்கட்டான நிலை வந்திருக்காது. ஒருவரையொருவர் சார்ந்துதானே அனைவரும் வாழ்கிறோம். இப்பிரச்னைக்கு உரிய தீர்வு காண வேண்டும்.
கோப்பெருந்தேவி, ஈரோடு
சினிமா... சினிமா... சினிமா... - லைட் பாய்
லைட்பாயின் சினிமா, சினிமாவில் வரும் அனைத்து செய்திகளும் புத்தம்புது பட ரிலீஸாக உள்ளது. அதற்கு பரிசாக, விநாயகர் சதுர்த்தி தினத்தன்று உமக்கு ஸ்பெஷல் கொழுக்கட்டை தர்றோம்!
அபிநயசுந்தரி, திலோத்தமை, நங்கநல்லூர்
பத்மஸ்ரீ விருது வென்ற வில்லிசை கலைஞரின் நினைவலைகள்... - 32 - கலைமாமணி பாரதி திருமகன்
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, அதுதொடர்பாக நிகழ்ந்தவற்றை மிக அழகாக பாரதி திருமகன் எடுத்துரைத்தார். வயல்களில் நெற்பயிர்களை காக்க, எலிமீது விநாயகர் அமர்ந்துள்ளார் என கூறியது, விவசாயிகளின் நெஞ்சில் பால் வார்க்கும்.
சொக்கலிங்கம், கருணாகரன், திருவொற்றியூர்
கருத்து கதிர்வேலன்...
அரசியல்வாதிகளின் பேச்சு, சட்டமன்றத்தில் வெளியாகும் செய்திகளுக்கு கருத்து கதிர்வேலனின் நெத்தியடி காமெண்ட்ஸ் செம டாப் கிளாஸ்!
ரகுபதி, ரஹ்மான், வேலூர்
நேசித்த புத்தகங்கள் - 29 - வேங்கடகிருஷ்ணன்
திரையில் ஓடும் பிலிமில் பளபளக்கும் திரை நட்சத்திரங்கள், பின்னர் வாழ்வின் இறுதி நாட்களில் ஒளி இழந்து, செல்வங்கள் பறிபோய், அநாதரவாக இறந்து போனதுதான், திரையில் பிலிம் காட்டியவர்களின் வாழ்வில் நிகழ்ந்தது என இப்புத்தக வரிகள் விளக்கின.
மாயா குப்புசாமி, வடபழனி
விகடகவியார் ஸ்பெஷல் ரிப்போர்ட்...
ஆரம்ப காலத்தில் மு.க.ஸ்டாலினுக்கு சரிவர மேடை பேச்சு வராது. எனினும், அவரது அன்பான அணுகுமுறையால் ஏராளமான இளைஞர்கள் அவர் பின்னே அணிவகுக்கவில்லையா? அப்போ தந்தை... இப்போ மகன் உதயநிதி! இதெல்லாம் அரசியல்ல சகஜமப்பா! திமுகதானே பதவி கொடுத்தது... அதான், அவங்க வீட்டு கூரையில நின்னு காங்கிரஸ் பீட்டர் அல்போன்ஸ் சேவல் கூவுது!
நாகராஜன், மயில்சாமி, பிரமோத், திருவிடந்தை
பாராலிம்பிக்ஸ்... தொடர்கிறது இந்தியாவின் பதக்க வேட்டை... - தில்லைக்கரசிசம்பத்
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளைவிட பாராலிம்பிக் போட்டிகள்தான் அதிக விறுவிறுப்பாக இருந்தன. அதிலும் நம் இந்திய வீரர், வீராங்கனைகள் பல்வேறு விளையாட்டு பிரிவுகளில் மொத்தமாக 15 பதக்கங்களை பெற்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளனர். இந்திய வீரர்கள் பதக்கம் வென்ற வேகத்துக்கு ஏற்ப, வெற்றி பெற்ற வீரர்களின் படங்களுடன செய்தி வழங்கிய தில்லைக்கு ‘ராஜீவ் கேல் ரத்னா’ விருது வழங்கலாம்.
மனிஷா ராகவேந்திரா, பெங்களூர்
வலையங்கம்
தமது பிள்ளைகளை பள்ளி, கல்லூரிக்கு அனுப்பினாலும் தங்கள் பொறுப்பில் உள்ள பிள்ளைகள் மீது நோய்தொற்று பரவலை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதை வலையங்கத்தில் சிறப்பாக உணர்த்தினீர்கள். சபாஷ்!
பத்மாவதி சுதர்சனம், திருவாலங்காடு
‘வந்தார் மாப்பிள்ளை’ - வெ.சுப்பிரமணியன்
முழு நீள திரைப்படம் பார்த்த மகிழ்ச்சி அளிக்கிறது. அதிலும் அழகு பற்றிய பாலுவின் விளக்கம் அருமை. கதை முழுவதும் தூவப்பட்டிருந்த சோகம், முடிவில் சுபமானது மகிழ்ச்சி அளிக்கிறது.
புகலரசன் எம், கள்ளகுறிச்சி
‘வந்தார் மாப்பிள்ளை’ - வெ.சுப்பிரமணியன்
Excellent, always the last twist adds honey to the icecream top Nice , thanks.
அருள் டாஸ், சென்னை
பேசிக்கறாங்க...
இந்த வாரம், என்ன ஆச்சு? வறட்சி கற்பனையில் காலத்தை ஓட்டுவது கஷ்டம் தான்.
வணங்குகிறோம்....! - சி. கோவேந்த ராஜா.
நல்லதொரு பதிவு
Leave a comment
Upload