ரெட் ஜெயன்ட் கபளீகரம்

இப்போது பெரும்பாலான வெளியிடும் உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயிண்ட் நிறுவனம் வாங்கி வெளியிடுகிறது.கடந்த நான்கு மாதங்களில் திரையரங்குகள் மூலம் கிடைத்த வருவாயில் 90% உதயநிதி ஸ்டாலின் நிறுவனத்திற்கு போய் சேர்ந்திருக்கிறது. அந்த அளவுக்கு அவர்கள் ஆதிக்கம் தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறக்கிறது.தமிழகத்தில் ஏரியா அடிப்படையில் வினியோகஸ்தர்கள் மாவட்டவாரியாக படங்களை வாங்கி அந்தந்த மாவட்டங்களில் உள்ள திரையரங்குகளில் வெளியிடுவதுதான் வழக்கமாக இருந்தது.ஆனால் இப்போது ரெட் ஜெயிண்ட் நிறுவனம் மாநிலங்களில் திரையிடும் உரிமையை வாங்கி நேரடியாக திரையரங்குகளில் படங்களை வெளியிட்டு வருகிறார்கள். இதனால் மாவட்ட விநியோகஸ்தர்கள் பெருமளவு பாதிக்கப்படுகிறார்கள்.விநியோகஸ்தர் என்ற பெயர் பேச்சு வழக்கில் இல்லாமல் போய் விடும் போல் உதயநிதி ஸ்டாலினின் ஆதிக்கம்.ஒருவேளை இதுதான் திராவிட மாடலோ என்னவோ
முதல்வர் பாராட்டினார்

மே 20ஆம் தேதி உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் நெஞ்சுக்கு நீதி திரை படம் வெளியாகிறது. ஜீ ஸ்டுடியோ மற்றும் போனிகபூர் ராகுல் இணைந்து இந்த படத்தை தயாரிக்கிறார்கள்.இயக்குனர் அருண் ராஜா காமராஜ். இது அரசியல் நெடி சற்று தூக்கலாக உள்ள ஒரு படம். இந்தப்படத்தின் பிரத்தியோக காட்சி முதல்வர் ஸ்டாலினுக்கு திரையிடப்பட்டது.ஸ்டாலின் இந்த படத்தை பார்த்து எல்லோரையும் பாராட்டி வாழ்த்தினார்.
நான் மிரட்டவில்லை


கமலஹாசன் நடித்து தயாரித்த விக்ரம் படத்தின் பாடல் மற்றும் ட்ரெய்லர் வெளியிடும் நிகழ்ச்சி நேரு உள் விளையாட்டு அரங்கில் நடந்தது. இந்த படத்தை தமிழகத்தில் படங்களின் வெளியிடும் உரிமையை வாங்கியுள்ள சட்டமன்ற உறுப்பினர் நடிகர் தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின் நிகழ்ச்சியில் பேசும்போது இந்தப்படத்தை எனக்கே தர வேண்டும் என்று கமலை நான் மிரட்டியதாக எல்லோரும் என்னிடமே கேட்டார்கள்.நானும் மிரட்டவில்லை அவரும் பயப்படுகிற ஆளில்லை என்று சொன்னார். இந்த நிகழ்ச்சியில் இது முக்கியமாக குறிப்பிட்டு சொன்னது உதயநிதி ஸ்டாலின் யாருக்கோ அனுப்பிய மெசேஜ் மாதிரி இருக்கிறது என்று பேச்சுவர ஆரம்பித்திருக்கிறது.
குஷ்பூ நன்றாக விசில் அடிப்பார்

தயாரிப்பாளர் நடிகர் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் திருப்போரூர் அருகே ஒரு கல்லூரி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் அவர் பேசும் போது நானும் கல்லூரியில் படிக்கும்போது கலை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு மிமிக்கிரி எல்லாம் பண்ணுவேன் ஆனால் விசிலடிக்க மட்டும் எனக்குத் தெரியாது.படங்களில் கூட நான் விசில் அடிக்கும் காட்சிகளில் நான் வாய் அசைப்பேன் குஷ்பு விசில் அடிப்பார்.அவருக்கு விசிலடிக்க நன்றாக தெரியும் என்றார்.மாணவர்கள் அவரிடம் தசாவதாரம் இரண்டாம் பாகம் பற்றி கேட்டபோது அதற்கு வாய்ப்பே இல்லை அப்படியெல்லாம் என்னாலும் செய்ய முடியாது கமலும் செய்ய முடியாது என்று சொன்னார்
முதல்வர்களுடன் சந்திப்பு

நடிகர் விஜய் முதல்முறையாக தெலுங்கு மற்றும் தமிழ் என்று இரு மொழி படங்களில் நடிக்கிறார்.இதன் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடக்கிறது படத்தில் சரத்குமார் நடிக்கிறார் இப்படத்துக்கு இன்னும் பெயரிடப்படவில்லை என்பதெல்லாம் பழைய செய்தி.புதிய செய்தி ஹைதராபாத்தில் இருக்கும் நடிகர் விஜய் முதல்வர் சந்திரசேகர ராவ்சந்திப்பு என்பதுதான் ஏற்கனவே பாண்டிச்சேரி முதல்வர் சென்னையில் விஜயை வீட்டில் போய் சந்தித்து இருக்கிறார். விஜய் தரப்பு ஆனால் இதையெல்லாம் மரியாதை நிமிர்த்த சந்திப்பு என்கிறது.நாமும் அப்படியா அண்ணே சரி நான் நம்பிட்டேன் என்று சொல்ல வேற வழி.

Leave a comment
Upload