தொடர்கள்
பொது
" ஊட்டி முதல்வர் விசிட் கலக்கல் நடனம் "- ஸ்வேதா அப்புதாஸ்

ஊட்டி பொட்டானிக்கல் கார்டனின் 124 வது மலர்க்காட்சியை துவக்கி வைக்க ஊட்டி வந்தார் முதல்வர் ஸ்டாலின் .

20220420210627209.jpg
முதல்வரின் வருகையை முன்னிட்டு மாவட்ட தி மு க நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இரவு பகலாக பம்பரமாக சுழன்றனர் .
அனைத்து பணிகளும் கழக துணை செயலர் ராசா ,அமைச்சர் ராமச்சந்திரன் மற்றும் மாவட்ட தலைவர் முபாரக் தலைமையில் நடைபெற்றது .

20220420210818959.jpg
18 ஆம் தேதி இரவு கோவை வந்த முதல்வர் விருந்தினர் மாளிகையில் தங்கினார் .
முன்னதாக ஊட்டியில் இருந்து கோவை வரை கழக கண்மணிகள் கட்சி கொடி முதல்வர் மற்றும் உதயநிதி ஸ்டாலின் படம் பொறித்த தோரணங்கள் தொங்க விட்டு விழா கோலமாக காட்சியளித்ததை பார்த்த முதல்வர் " எந்த கட்சி கொடியும் தோரணமும் இருக்க கூடாது "

20220420210930290.jpg

என்று கூற இரவோடு இரவாக அனைத்து கொடிகளும் தோரணங்களும் அப்புறப்படுத்தப்பட்டன .
19 ஆம் தேதி காலை கோவையில் தொழில் முனைவோர் கருத்தரங்கில் கலந்து கொண்ட முதல்வர் தன் துணைவியார் துர்க்கா ஸ்டாலினுடன் மேட்டுப்பாளையம் பிளாக் தண்டர் வந்து மதிய உணவை முடித்து விட்டு சிறிய ஓய்வுக்கு பின் மாலை நான்கு மணிக்கு ஊட்டிக்கு பயணித்தார் .

20220420211046593.jpg

பர்லியார் , குன்னூரில் கழக கண்மணிகள் உட்சாக வரவேற்பை கொடுக்க பூரித்து போனார் முதல்வர் .

2022042021115055.jpg
முதல்வர் காரில் பயணிக்காமல் பிரச்சார வேனில் பயணித்தது வித்தியாசமாக இருந்தது .

20220420211250522.jpg
பிரச்சார வேன் முதல்வருக்கு உயரமாக அமர்ந்து மக்களை பார்க்கவும் இயற்கை அழகை ரசிக்கவும் வேனில் இருந்தே மக்களை பார்த்து பேச எதுவாக இருப்பதால் வேன் பயணமாம் .

2022042021140779.jpg
குன்னூரிலும் , ஊட்டியிலும் மக்களை பார்த்து " ஆட்சி பிடித்திருக்குதா " என்று கேட்டார் .பின்னர் மக்களிடம் நலம் விசாரித்து விட்டு தமிழகம் மாளிகை நோக்கி செல்ல தமிழகம் தோடர் மந்து அருகில் வந்தவுடன் தோடர் மக்கள் முதல்வருக்கு வரவேற்பு கொடுக்க அவர்களுடன் சேர்ந்து நடனமாடினார் .

பின்னர் தமிழக மாளிகையில் தங்கினார் .

20220420211812238.jpg
20 ஆம் தேதி காலை 124 வது மலர் காட்சியை துவக்கி வைக்க முதல்வர் பொட்டானிக்கல் கார்டனை நோக்கி வந்தார் .கட்சி பிரமுகர்கள் முழுவதும் தமிழகம் மாளிகை முதல் கார்டன் வரை சாலை ஓரத்தில் நின்று வரவேற்றனர் ஒருவர் கூட கார்டனுள் எட்டி பார்க்கவில்லை .

20220420211941799.jpg
சுற்றுலாக்களுக்கும் உள்ளூர் வாசிகளுக்கு எந்த இடையூறும் இருக்க கூடாது என்று முதல்வர் உத்தரவிட்டாராம் .
முதல்வர் கார்டனுள் வந்தவுடன் மாவட்ட ஆட்சியர் அம்ரித் பூங்கோத்து கொடுத்து வரவேற்றார் .


முதல்வருடன் அமைச்சர்கள் பெரியசாமி , இராமச்சந்திரன் நீலகிரி எம் .பி .ராசா துர்க்கா ஸ்டாலின் ஊட்டி எம் .எல் .ஏ .கணேஷ் மற்றும் முபாரக் வந்தனர் .

20220420212127400.jpg
மலர்களை பார்வையிட்ட முதல்வரிடம் விகடகவி சார்பாக வெல்கம் டு ஊட்டி இந்த நாளுக்கு தான் உதகையும் உள்ளூர் வாசிகளும் மலர்களும் காத்து கொண்டிருந்தனர் " என்று கூற தேங்க்ஸ் என்று கூறி போட்டோவுக்கு போஸ் கொடுத்தனர் முதல்வர் தம்பதியினர் .

20220420212345861.jpg

பின்னர் முதல்வர் அரங்குகள் பழங்குடியினர் மாடல் போன்றவைகளை பார்வையிட்டு பொது மக்களுடன் வழக்கமான செலஃபீ எடுத்து கொண்டு விழா அரங்கில் வந்து அமர்ந்தார் .

20220420212454439.jpg
தோடர், படுகர் ,ஒடிசா நடனங்களை ரசித்து பார்த்த முதல்வர் டக் என்று எழுந்து தன் வேனில் ஏறி இத்தாலிய கார்டனை நோக்கி சென்று சுற்றி பார்த்து விட்டு நேராக தமிழக மாளிகைக்கு சென்றார் .
முதல்வர் விழா மேடையில் ஏறவில்லை ..மலர் காட்சியை பற்றியும் ஊட்டியை பற்றி பேசுவார் என்று எதிர்பார்த்து ஏமாத்துவிட்டார்கள் அனைவரும் .

2022042021260802.jpg
ஒரிசாவை சேர்ந்த நடன குழு தலைவி மம்தா , " ஒரிசாவில் பயங்கர வெயில் வாட்டுகிறது இங்கு இதமாக இருக்கிறது .

தஞ்சை கலை பண்பாட்டு மையத்தின் சார்பாக இன்று உலக புகழ் பெற்ற மலர் காட்சியில் முதல்வர் முன் எங்க குரூப் நடனம் அரங்கேற்றுவது பெருமையான ஒன்று " என்று கூறினார் .
மூத்த பத்திரிகையாளர் ஆர் .ஏ .தாஸ் கூறும் போது ,

" இந்த ஊட்டி மலர்க்கட்சி உலக பிரசித்தி பெற்றது வெளிநாட்டு மலர்கள் எல்லாம் இங்கு கொண்டு வந்து கார்டனை உருவாக்கினவர் மேக் ஐவர் .

20220420213021908.jpg

இங்கு உள்ள பெரும்பாலான வீடுகளில் பூச்சட்டி வைத்து அழகு பார்க்கிறார்கள் .மலர் காட்சி இவ்வளவு அழகாக இருப்பதற்கு முக்கிய காரணம் இங்கு பணி புரியும் தோட்டக்காரர்கள் தான் அவர்களுடைய அயராத உழைப்பு தான் இந்த மலர் காட்சி " என்று கூறினார் .

20220420213139503.jpg
சனிக்கிழமை ஊட்டி அரசு கலை கல்லூரி மைதானத்தில் " உதகை -,200 " துவக்க விழா மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா வில் முதல்வர் கலந்து கொண்டார் .

20220420213244169.jpg
முதல்வரின் விசிட்டால் மக்களுக்கு எந்த இடையூறும் இல்லாமல் இருக்கவேண்டும் என்ற முதல்வரின் எண்ணம் கண்ணும் கருத்துமாக கவனிக்க பட்டது .
-ஸ்வேதா அப்புதாஸ்