தொடர்கள்
கவர் ஸ்டோரி
பானி பூரியும்  தமிழர்களும் -விகடகவியார்

20220421011612532.jpg

இந்தி திணிப்பு பற்றி பேசுகிற சாக்கில் ஹிந்தி படித்தவர்கள் தமிழ்நாட்டில் பானி பூரி தான் விற்கிறார்கள் என்று சொல்லியிருக்கிறார் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி. தமிழ்நாட்டில் இந்தி படித்தவர்கள் அல்லது இந்தி பேசத் தெரிந்தவர்கள் பானி பூரி மட்டும் விற்கவில்லை.கார்பன்டர், பெயிண்டர், கட்டிட வேலையில் பெரிய ஆள் அதாவது மேஸ்திரிக்கு அடுத்து இது தவிர ஹோட்டல்களில் சர்வர்கள் கிளீனர் அவ்வளவு ஏன் தோசை மாஸ்டர் கூட இப்போது வட இந்தியர்கள் தான்.

20220421011304105.jpeg

தொழில் நகரங்களான திருப்பூரில் குறைந்த பட்சம் 3 லட்சம் முதல் 7 லட்சம் வரை. இது தவிர ஈரோடு, சேலம், கரூர் என்று இந்தி பேசுபவர்கள் தமிழ்நாட்டில் பரவலாக இருக்கிறார்கள். சென்னையில் 25 லட்சம் பேர் இந்தி பேசுபவர்கள் வசிக்கிறார்கள் அல்லது இருக்கிறார்கள். கிட்டத்தட்ட 50 லட்சம் வட இந்தியர்கள் தமிழ்நாட்டில் ஏதாவது ஒரு வேலை அல்லது அமைச்சர் சொன்ன பானிபூரி உட்பட ஏதாவது ஒரு தொழில் செய்து வருகிறார்கள்.

கருணாநிதி முதல்வராக இருந்தபோது பார்த்துப் பார்த்து கட்டிய புதிய தலைமைச் செயலகம் இப்போது பல்நோக்கு மருத்துவமனையாக இருக்கும் கட்டிடம் முழுக்க முழுக்க வட இந்தியர்கள் கட்டியது தான். அதனால் தான் திறப்பு விழாவிற்கு முன்தினம் அந்த வட இந்தியர்களை கௌரவிக்கும் வகையில் அவர்களுக்கு விசேஷ விருந்து தந்தார் கருணாநிதி அந்த விருந்தில் எல்லாம் வட இந்திய உணவு தான் வழங்கப்பட்டது பானிபூரியும் சேர்த்து. அவர்களை மகிழ்விக்க இந்தி பாடல்கள் ஒலி பரப்பினார்கள். இதெல்லாம் அமைச்சர் பொன்முடிக்கு தெரிஞ்ச விஷயம் தான்.

உத்தரப்பிரதேசம் முதல் பீகார்,கல்கத்தா, ஒரிசா, மற்றும் அசாம் ஏன் நேப்பால் நாட்டில் இருந்து கூட இங்கு வந்து வேலை பார்க்கும் இந்தி பேசுபவர்கள் இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் வேலை நிச்சயம் வருமானம் நிச்சயம் என்று ஒரு நாளைக்கு ஆயிரம் பேர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வட இந்தியாவிலிருந்து நம்பிக்கையோடு இறங்கி வருகிறார்கள் இது ஒரு சமூக ஆர்வலர் சொன்ன புள்ளிவிவரம்.

அண்ணாநகரில் பானிபூரி கடை வைத்திருக்கும் ஒரு தள்ளுவண்டி காரரிடம் விசாரித்த போது போலீஸ் மாமுல் ரவுடி மாமுல் போக ஒரு நாளைக்கு ஆயிரம் ரூபாய் தனக்கு வருமானம் என்றார். சென்னையில் மட்டும் சிறிதும் பெரிதுமாக பத்தாயிரம் பானிபூரி கடைகள் இருக்கிறது என்று அந்த இந்தி வாலா என்னிடம் புள்ளி விவரம் சொன்னார்.கிராமங்களில்கூட பானிபூரி கடைகள் நிறைய நிறைய முளைத்துவிட்டது.

சென்னையை சுற்றி உள்ள தனியார் பல்கலைக்கழகங்களில் ஆண்டுக்கு 50ஆயிரம் வட இந்திய மாணவர்கள் படிக்க வருகிறார்கள். அவர்கள் சாப்பிட்டாச்சா ? எப்படி இருக்க மச்சான்? இன்னும் சில பல கெட்ட வார்த்தைகளை தமிழில் தெரிந்து வைத்திருக்கிறார்கள். அந்தப் பல்கலைக்கழங்களில் சுற்றி எல்லா வட இந்திய உணவுகளும் கிடைக்கும் உணவு விடுதிகள் ஸ்பா எல்லா வட இந்திய வசதியும் கிடைக்க ஏற்பாடு ஆகி இருக்கிறது.

தமிழக அரசில் பணி புரியும் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளில் கிட்டத்தட்ட ஒரு 40% பானிபூரி இந்திக்காரர்கள் தான்.

கட்டிட காண்டிராக்டர் ஒருவரிடம் பேசியபோது அவர் சொன்ன தகவல் இன்னும் சூப்பர்.தமிழ் ஆளுங்கள வேலைக்கு வச்சா 10 மணிக்கு வருவாங்க பதினோரு மணிக்கு டீ சாப்பிட போயிட்டு 12 மணிக்கு திரும்புவார்கள் ஒரு மணிக்கு சாப்பிட கிளம்பிடு வாங்க ரெண்டு மணிக்கு வருவாங்க மறுபடியும் நாலு மணிக்கு டீ 5 மணிக்கு வேலை முடிந்தது கூலி தாங்க என்பார்கள்.ஆனால் வட இந்தியர்கள் டைம் எல்லாம் பார்க்க மாட்டார்கள் டீ குடிச்சிட்டே கூட வேலை பார்ப்பார்கள் சாப்பிட்ட உடனே ஓய்வு எல்லாம் கிடையாது உடனே வேலையை தொடங்குவார்கள்.. ஆறு மணி ஏழு மணி என்று கணக்கெல்லாம் வைத்துக்கொள்ளாமல் வேலையை முடித்துவிட்டு தான் கிளம்புவார்கள். நான் அவர்களுக்கென்று மொத்தமாக ஒரு ஷெட்டில் குடியமர்த்தி வைத்துள்ளேன். நம்பர் ரேஷன் கடை அரிசி கோதுமை இவற்றை ரேஷன் கடையில் டீல் பேசி வாங்கி வருவார்கள். அதுதான் அவர்கள் தினந்தோறும் உணவு. ஞாயிற்றுக்கிழமை மட்டும் அசைவம் சாப்பிடுவார்கள். ஒரு வட இந்தியரின் மாத வருமானம் 30 ஆயிரம் ரூபாய் அதில் சாப்பாடு செலவு ரீசார்ஜ் பான்பராக் இன்ன பிற செலவுகள் என்று 7000 ரூபாய் செலவு செய்துவிட்டு மீதிப் பணம் 23 ஆயிரம் ரூபாயை அப்படியே தங்கள் குடும்பத்தினரின் கணக்கில் ஏடிஎம் மூலம் அனுப்பி விடுவார்கள்.ஒரு மாதத்திற்கு வட இந்தியாவுக்கு தமிழக வங்கிகள் மூலம் 40,000 கோடி செல்கிறது எல்லாம் தமிழர்கள் பணம் தான் ரீசார்ஜ் கடைகளில் வட இந்தியர்கள் மூலம் ஆயிரம் கோடி வருமானம் என்று ஒரு புள்ளி விவரம் சொல்கிறது.

20220421011656182.jpg

தமிழ்நாட்டில் கொரோன காரணமாக மொத்த தொழிலும் முடங்கிப் போனது. வட இந்திய தொழிலாளர்கள் நோய் தொற்று அச்சம் காரணமாக தங்கள் ஊருக்கு போய்விட்டார்கள். இப்போது தான் சகஜ நிலை திரும்பி வட இந்தியர்கள் மீண்டும் வரத் தொடங்கி இருக்கிறார்கள்.ஆனாலும் சில இடங்களில் வட இந்தியர்கள் இல்லாமல் தொழில் முடங்கிப் போய் தான் இருக்கிறது என்பதுதான் உண்மை. சில நட்சத்திர ஓட்டல்களில் நள்ளிரவு கூட காபி ஷாப் இயங்கும். ஆனால் அங்கு வேலை செய்த வட இந்தியர்கள் இன்னும் சென்னை திரும்பாததால் நள்ளிரவு காபி ஷாப் புகழ் சரிவர இயங்குவதில்லை இதனால் நள்ளிரவு காப்பி பிரியர்களுக்கு இது ஒரு மிகப்பெரிய ஏமாற்றத்தை தருகிறது.

வைரமுத்து ஒரு கவிதையில் எழுதியிருப்பார். அவன் பட்டு வேட்டிய பற்றிய கனாவில் இருந்த போது கட்டியிருந்த கோவணமும் களவாடப்பட்டது என்று. இது யாருக்குப் பொருந்துமோ இல்லையோ இந்தி தெரிந்தால் பானி பூரிதான் விற்க முடியும் என்று எள்ளி நகையாடும் தமிழனுக்கு ஏகமாக பொருந்தும். ஏனெனில் ஒவ்வொரு முறை அவன் எள்ளி நகையாடி முடிக்கும் நேரத்தில் கோடிக்கணக்கான பணம் தமிழகத்திலிருந்து வட இந்தியாவிற்கு செல்கிறது.

நம் தமிழர்கள் அனைவரும் இலவசப் பொருட்கள், மற்றும் டாஸ்மாக் வாசலில் படுத்திருக்க, நமது அரசோ ஒரு பக்கம் பண்டிகை தினங்களில் மது விற்பனைக்கு இலக்கு என்று தம்மையும் தம் மக்களையும் ஏமாற்றிக் கொண்டிருக்கிறது. ஒருவருடைய சோம்பேறித்தனம் தான் மற்றொருவருக்கு மூலதனம் என்று ஒரு பழமொழி உண்டு.

அது தமிழர்களுக்கு நன்றாகவே பொருந்தும். பானி பூரி விற்று வருமானத்தை ஈட்டும் வட இந்தியர்களே சாட்சி.

20220421011827563.jpg

இந்த உண்மை கொஞ்சம் கசக்கும் தான் அமைச்சரே, ஆனால் உண்மை, அது தான்.

எந்த வேர்வைக்கும் வெற்றிகள் வேர்வைக்கும் என்பதை என்றும் தமிழர்கள் மறந்து விடக் கூடாது.