தொடர்கள்
விளையாட்டு
சி.எஸ்.கே ஜெயிக்க என்ன காரணம் ? கொட்டும் மழையும்..சூடான..... - பால்கி

20230502223337291.jpg

சென்னை சூப்பர் கிங்க்ஸ் ஐபிஎல் 2023 கப்பை ஜெயிக்க காரணம் ?

சர் என அன்புடன் அழைக்கப்படும் ரவீந்த்ர ஜடேஜா அந்த கடைசி இரண்டு பந்துகளில் 10 ரங்கள் சிக்சர் ஒண்ணு அடித்து அடுத்த ஃபனல்ஸின் கடைசியும், டோர்னமென்ட்டின் கடைசி பந்தும் போடப்படுகிறது.

பந்து சரியாகவே போடுகிறார் மோஹித் ஷர்மா. நோ பால் என்பதற்கு சான்ஸே இல்லை. கால்ல போட்டதை லாவகமாக லெக்கில் தட்டிவிட லெக் ஸ்லிப்புக்கும் விக்கட் கீப்பருக்கும் இடையே கண்ணிமைக்கும் நேரத்திற்குள் ரியாக்ஷன் ஏதும் செய்து ஓடக் கூட முடியாதபடி மாறி பாய்ந்து பச்சை நிற நிலத்தை இந்த சீஸனுக்கு கடைசி முறையாக வேகமாக தடவிக்கொண்டு பௌண்டரி தாம்பு கயிறைத் தீண்டியது அந்த ஹீரோ பந்து.

க்ஷண நேரம் தான்.

தனது காலுக்கு அருகில் பட்டெழுந்த பந்தை நாலுக்கடிச்சா நான் ஜெயிப்பு. இல்லைனா எதிராளி ஜெயிப்பு. இந்த சூத்திரத்தின் படி ஆடுவது இயல்பு தான். ஹார்திக் பண்ட்யாவும் அப்படித்தான் யோசித்திருந்தார். இது அவரது ஃபீல்ட் செட்டிங்க்லேந்தே தெரிந்தது.

இங்கத் தான் நம்ம தல சிங்கிளா நிக்கார். அவரது அப்ப்ரோச்சே வேற. வேற லெவல்ல இருக்கும். இருந்திருக்கும். அப்படி அங்கிட்டு போன ஜெயிப்புக்களைத் தன்னாண்ட இழுத்து வந்திருக்கின்றார் நிறைய தடவை. நாமும் நல்லாவே கொண்டாடியிருக்கோம்.

நாம ஏன் ஸ்கோர்ஸை சமன் செய்ய முயற்சிக்கக் கூடாது என்ற தொனியில் தோனி அதற்கேற்றார்போல் ஃபீல்ட் செட் பண்ணுவார். சூப்பர் ஓவர்க்கு சென்றிருப்பார். கடைசி வரை முயற்சியில் அவரைப் போன்ற ஒருவர் இனி காண்பது அரிது தான். அந்த மாதிரி முயற்சி ஆஸ்ட்ரேலியாவின் முந்தைய காப்டன் ஸ்டீவ் வாக் செம சல்லீசா செய்வார். பௌண்டரி கயிற்றுக்குத் துணையாக ஆளுங்களை நிக்க வெச்சிருப்பார். சிக்ஸர் அடிச்சாலும் கேட்ச் பிடிச்சிடலாம். பௌண்டரி தாண்டாத மாறி பந்தையும் பிடித்து ரங்களக் குறைக்கலாம். இந்த சூத்திரம் நம்ம ஹார்திக் பண்ட்யாவு ஏன் தோணலியோ. இந்தா கப்புன்னு தூக்கிக் கொடுத்த மாறி உணர்வு ஏற்பட்டிருக்கும் ஹார்திக் பண்ட்யாவுக்கு.

ஆனா நடந்தது என்ன? செம்ம ஸ்டைல்ல கெத் காமிச்சி வேண்டிய ரன்களை அனாயாஸமாக அடித்த உணர்வை நம்ம ஜடேஜா தந்துவிட்டார்.

இது இப்படி இருக்க, இந்த இறுதி போட்டி எப்படி நடந்தது என்றே சற்று ஆராய்வோமே.

மும்பை இண்டியன்ஸ்க்கும் குஜராத் டைட்டன்ஸுக்கும் நடந்த போட்டியின் போதே மழை நானும் மேட்ச் பாக்கணுமே என்று சிணுக்கிக்கொள்ள லேட்டா ஆரம்பிச்சி நடந்து முடிஞ்சது ஒரு வழியா, குஜராத் ஜெயிச்சது.

28ந்தேதி சென்னைக்கும் குஜராத்துக்கும் ஃபைனல்ஸ் என்ற நாள் வர மீண்டும் மழை மேட்ச் பார்க்க ஓ வென அழுது கொண்டே வர அன்னிக்கி ஸ்டேடியத்திலிருந்த பார்வையாளர்களும் மெர்ஸ்ஸலாயிட்டாங்க. மறுநாளைக்கு போட்டி ஒத்தி வைக்கப்பட்டது.

29ந்தேதி ஆரம்பித்த போட்டியின் முதல் இன்னிங்க்ஸ் முழுதும் முடிய அடுத்த் இன்னிங்க்ஸ் ஆரம்பிக்க மழை இடைஞ்சல் கொடுக்க மழை நின்ற பிறகு நிர்வாகிகள் எடுத்த முடிவு 15 ஓவரில் சென்னை 171 ரன் எடுக்கவேண்டும் என்பதாகும்.

இந்த சமயத்தில் தான் அது நடந்தது. அங்க சோ வென மழை பெய்து கொண்டிருந்தது. குடை பிடித்துக்கொண்டு பார்வையாளர்கள் அமர்ந்திருக்க சென்னை டீம் சுட சுட பஜ்ஜி ஜிலேபி உஸ் உஸ்ஸென்று சுவைத்தவாறு தங்களை தயார் படுத்திக்கொண்டிருந்தார்கள். சமூக ஊடகங்களில் இது தான் சென்னை ஜெயிச்சதுக்குக் காரணம் என்று வைரலாகியது.

ஆக அடிக்க வராதீர்கள் நாம ஜெயிச்சதுக்கு காரணமே... கொட்டும் மழையில் சூடான பஜ்ஜியும், ஜிலேபியும் தானாம் !!

மைதானத்துக்கு வெளியே குஜராத்தி அறுசுவை என்றால் மைதானத்திலோ ஒரு குஜராத்தி குஜ்ராத் டீமையே அறுசுவையாக்கி உண்டுவிட்டார்.

நம்ம தலயோட பெருந்தன்மையே... ஜடேஜாவைத் தூக்கி கொண்டாடிவிட்டார். இதுவரை தோனியிடம் யாரும் பார்க்காதது இது.

இப்படியாக ஐபிஎல் 2023 இனிதே முடிவடைந்தது. கப்பை வென்ற கைய்யோடே சென்னை அணி டி.நகர் பெருமாள் கோவிலில் நமஸ்கரித்துக் கொண்டிருந்தது. விளையாட்டுக்கும் ஆன்மீகத்திற்கும் என்ன சம்பந்தம் என்றெல்லாம் இன்றைய திராவிட மாடல் கேள்வி கேட்க மாட்டார்கள். ஏனெனில் இது சி.எஸ்.கே தோனி ஆர்மி.