தொடர்கள்
வாசகர் மெயில்
வாசகர் மெயில்

20230726004634624.jpg

Heading : கைலாஷ் புனிதப் பயணம் 6 - ஈசனடியும்.... பனிச்சரிவும் !! ராம்

Comment : ராம் குழுவினரின் கைலாய மலைப் பயணம் குறித்து 6 வாரத் தொடரைப் படித்து முடித்தபோது எங்களின் மனதில் ஏகாந்த பிரமிப்பு ஏற்பட்டது. அதுவும், 6-வது வார மலைப்பயணத்தில் ஏற்பட்ட திக்..திக்.. காணொலி காட்சி தொகுப்பு எங்களையும் உறையவைத்தது. பனி படர்ந்த கைலாய மலையில் சிவனடியை தரிசித்து வழங்கிய ராமின் கட்டுரை தொகுப்பு கனகச்சிதம். ஒருசிலர் அடிக்கடி இமயமலை பயணம் என்கிறார்களே, அதுவும் கைலாய மலைப் பயணமும் ஒன்றா?!

ராமசாமி, மாயா குப்புசாமி, ராதா வெங்கட், சென்னை

Heading : ஊட்டி ராகுல் விசிட் ஐ லவ் ட்ரைபல் பீபிள் - ஸ்வேதா அப்புதாஸ் .

Comment : ராகுல்காந்தியின் ஊட்டி விசிட், ஜஸ்ட் லைக் தட் சுற்றுலா பயணிகளின் வருகை போல் மக்களிடையே எவ்வித பரபரப்பையோ பதட்டத்தையோ ஏற்படுத்தாமல் அமைதியாக முடிந்தது. ஆனால், ஒருசிலர் ஊட்டி வந்தாலே மக்கள் பதட்டமாகி விடுகின்றனர். அத்தனை போலீஸ் கெடுபிடி!

கேத்தரின், லாவண்யா, சுகுணா , கோவை

Heading : ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமா ??? கோவை பாலா

Comment : தமிழகத்தில் நிலவி வரும் ஜாதிய மோதல்கள், அதனால் ஏற்படும் அவலங்கள், ஜாதிய துவேஷத்தை வைத்து பணம் சம்பாதிக்கும் கட்சிகளின் மெத்தனம் போக்கு போன்றவற்றால் ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமா என்பது கேள்விக்குறியே, இத்தகைய அவலங்களை வைத்து கோவை பாலாவின் கவிதை வரிகள், கண்களில் ரத்தக் கண்ணீரை வரவழைத்தன.

சுகந்தி வடிவேல், ராஜசேகரன், நாகர்கோவில்

Heading : தமிழகத்தில் சமூக நீதி காணோமடி பாப்பா - விகடகவியார்.

Comment : நாங்குநேரி அரசு பள்ளியில் ஆதிக்க ஜாதி மாணவர்கள் ஒன்றுசேர்ந்து அவமானப்படுத்தி, இதுபற்றி தலைமையாசிரியரிடம் புகார் தெரிவித்ததால், அவரையும் தடுக்க வந்த குடும்பத்தினரை அரிவாளால் வெட்டியது கண்டிக்கத்தக்கது. தமிழக கிராமங்களில் இன்றளவும் ஜாதிய பாகுபாடுகள் உள்ளன. ஆனால், தேர்தல் காலத்தில் திராவிட கட்சிகள் எப்போதுமே எதிர்ப்பு தெரிவிக்காத பார்ப்பனியத்தை கண்டித்து கோஷமிட்டு ஆட்சியைப் பிடிக்கின்றன. இத்தகைய சம்பவங்களை தலித் சமுதாய கட்சிகள் கண்ணை மூடி, அவர்களின் ஓட்டை பேரம் பேசி பணம் சம்பாதிக்கின்றன என்பது நெஞ்சில் சுடும் உண்மை. இந்நிலை இனியாவது மாற்றப்பட வேண்டும்.

செபாஸ்டியன், திரிசங்கு, சண்முகம், ஐதராபாத்

Heading : காதல் காதலைக் காதலிக்கிறது 3 - என்.குமார்

Comment : என்.குமாரின் காதல் காதலைக் காதலிக்கிறது ஒன்று முதல் மூன்று வாரங்களில் வெளியான தொடரின் ஒலிப்பதிவை கேட்கும்போது காதலை நினைச்சு பரவசப்பட வைத்தது. இன்னும் கேட்டால் காதல், காதல், காதல் என மந்திரம் ஜெபிக்க வைத்துவிடும் போலிருக்கே!

தவசீலன், பர்வதவர்ஷினி , கொடைக்கானல்

Heading : வலையங்கம் - இது தொடரட்டும்.

Comment : அரசு பள்ளிகளில் படித்த 274 மாணவர்கள் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்றிருப்பது மகிழ்ச்சிக்குரிய விஷயம். இவர்களை போல் பிற மாணவர்களும் முயற்சித்து வெற்றி பெறவேண்டும். வெற்றி பெற்ற மாணவர்களின் இளங்கலை படிப்பு செலவை தமிழக அரசு ஏற்றது வரவேற்கத்தக்கது.

நித்யா, செங்கமலம், திருவொற்றியூர்

Heading : கத கேளு கத கேளு தமிழோட கத கேளு - 30- பரணீதரன்

Comment : அழகான பாடல்களை மேற்கோள் காட்டி எளிதாக விளக்கிய விதம் அருமை

ஸ்ரீராம், சென்னை

Heading : செம்பகராமன் பிள்ளை - பால்கி

Comment : எப்பவும் போல் பால்கி சாரின் கட்டுரை அருமை. வந்தே பாரதம்..

Murali S, Bangalore