தொடர்கள்
ஆன்மீகம்
குருவே சரணம்  - 046 - ஸ்ரீநிவாஸ் பார்த்தசாரதி

20230724095411347.jpeg

ஸ்ரீ மகா பெரியவாளின் பூர்வாஸ்ரம தம்பி ஸ்ரீ சிவன் அனுகிரஹங்களும், அவருடன் பயணித்தவர்கள்,அவரை தரிசித்தவர்கள் அனுபவங்களை நாம் இந்த வாரம் முதல் தொடர்ந்து பார்ப்போம். நாம் தரிசிக்கும் ஒவ்வொரு அனுபவமும் நம்மை ஸ்ரீ சிவன் ஏதோ ஒரு விதத்தில் தொடர்பை ஏற்படுத்தும்.

சிவன் தரிசனம் வாரம் தோறும் கிடைக்க பெற்று வருகிறோம். சிவன் அனுபவ உரைகளை தேடும்போது நமக்கு கிடைத்த ஸ்ரீ மஹா பெரியவாளின் அனுபவ பகிர்வை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி.

ஸ்ரீ மன்னார்குடி ராமதுரை மாமா

இந்தவாரம் மன்னார்குடியை சேர்ந்த ஸ்ரீ ராமதுரை மாமா அவர்களின் அனுபவம் நமக்கெல்லாம் இரண்டு விஷயங்களை இன்றும் ஸ்ரீ பெரியவாளின் அனுகிரஹமாக கொடுக்கிறது. ஸ்ரீ பெரியவாளை மனதில் வைத்து வேண்டி பக்தியுடன் நெய்வேதனம் செய்து காக்கைக்கு உணவளித்தல் போதும் பெரிய பூஜை தேவையில்லை என்பதும் அதே போல் ஸ்ரீ பெரியவாளுக்கு செம்பருத்தி பூவைத்து அதனை உட்கொண்டு பிரார்த்தனை செய்தால் எப்பேர்ப்பட்ட தடைகளும் விலகும் என்று தெரிகிறது.

இந்தவாரம் அனுக்கிரஹம்