
தமிழக சட்டப்பேரவை கூட்டம் கடந்த 18-ஆம் தேதி ஆளுநர் உரையுடன் துவங்கியது.
திமுக ஆட்சி மாதிரி ஆளுநர் வெளிநடப்பு எல்லாம் செய்யாமல் ஆளுங்கட்சி எழுதிக் கொடுத்த முழு உரையை அப்படியே வாசித்தார். இதுவே பேசும் பொருளானது.
ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது ஆளுங்கட்சி உறுப்பினர்கள் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, உள்ளிட்ட திமுக அதிமுக எனக்கு எல்லா உறுப்பினர்களும் பேசினார்கள்.
இதற்கு பதில் அளித்து இறுதியாக முதல்வர் விஜய் ஜூன் 23-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை பேசினார்.
தமிழக வெற்றி கழகம் ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்த 40 நாட்களில் நிறைவேற்றப்பட்ட பல்வேறு திட்டங்களை பணிகளை பட்டியலிட்டு சொன்னார்.
அதன் பிறகு திமுக வைத்த குற்றச்சாட்டுகளுக்கும் அவர் தனது உரையில் அவருக்கே உண்டான பாணியில் பதில் சொன்னார்.
தேசிய கீதம் இருமுறை பாடியது பற்றி எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டார்.
இதே சட்டசபையில் திமுக ஆட்சியின் போது குடியரசுத் தலைவர் கலந்துகொண்டு கருணாநிதி படத்திறப்பு விழா நடந்தது அப்போதும் இரண்டு முறை தேசிய கீதம் பாடப்பட்டது.
இதை நான் குறிப்பிட்டால் அதில் பிரதமர் கலந்து கொண்டார் என்று சமாளிப்பார்கள் என்று சிரித்தபடியே சொன்னார் முதல்வர் விஜய்.
அவர்களுடைய தயவில் தான் ஆட்சி நடக்கிறது என்று திரும்பத் திரும்ப திமுக சொல்கிறது.
உண்மையில் மக்கள் ஆதரவில் தான் இந்த ஆட்சி நடக்கிறது.
திமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய கம்யூனிஸ்டுகள் நாங்கள் சுதந்திரமாக எடுத்த முடிவு படி ஆதரவு தருகிறோம் என்று சொல்லுகிறார்கள்.
உங்களை விட்டு வெளியே வந்த கட்சிகளுக்கு நாங்கள் அமைச்சர் பதவி தந்திருக்கிறோம். அதுதான் உங்களுக்கு பிரச்சனை.
நீங்கள் ஆட்சியதிகாரத்தில் பங்குதார மாட்டோம் என்று சொன்னீர்கள் என்று காட்டமாக குறிப்பிட்டார் முதல்வர் விஜய்
மத்திய அரசுடன் இந்த அரசு மோதல் போக்கை கடைபிடிக்காது அரசுடான அரசியல் வேறு நிர்வாகத் தொடர்புகள் வேறு. தமிழ்நாட்டிற்கு நல்லது நடக்கும் என்றால் நான் மத்திய அரசுடன் இணக்கமாக இருப்பேன் என்பதையும் தெளிவுபடுத்தினார் முதல்வர் விஜய்.
கடந்த காலத்தில் "கட்சி நிதி "என்ற பெயரில் வாங்கப்பட்ட தொகை எல்லாம் தற்போது அரசு கஜானாவுக்கு திரும்பிவிட்டது என்று சொன்னதும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி எழுந்து ஏதோ பேச முற்பட அப்போது பேரவை தலைவர் ஜே.சி.டி.பிரபாகரன் முதல்வர் பேசியதும் உங்களுக்கு வாய்ப்பு தருகிறேன் என்று சொல்லியும் கேட்காமல் அவர் நிற்க அவரைத் தொடர்ந்து திமுக உறுப்பினர்கள் கூச்சல் போட்டு அமளி செய்தவர்கள் ஒரு கட்டத்தில் வெளிநடப்பு செய்தார்கள்.
அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்யாமல் அமைதியாக அமர்ந்திருந்தார்கள்.
அப்போதுதான் ஒரு குட்டிக்கதை கூறுவதாக சொல்லி "ஒரு வயதான பெரியவர் எதையோ தேடிக் கொண்டு வர அப்போது அங்கு இருந்த ஒரு பையன் என்ன தேடறீங்க என்று கேட்க உங்க அப்பா இங்கதான் இருப்பாருன்னு சொன்னாங்க ஆனா உங்க அப்பாவ இங்க காணோமே " என்று மறைமுகமாக திமுக தலைவர் ஸ்டாலினை கிண்டல் செய்தவர் கூடவே எங்களுக்கும் இந்த நக்கல் நையாண்டி சம்பந்தமில்லாத குட்டி கதை எல்லாம் பேசத் தெரியும் ஐந்து நிமிடம் பேசியதற்கு கொளத்தூரில் நடந்தது தெரியுமில்ல என்று சொல்லிவிட்டு காங்கிரஸ் உடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்தது என்று ஸ்டாலின் காட்டிய அதே செய்கையை சட்டசபையில் காட்டி கிண்டல் செய்தார் முதல்வர் விஜய்.
முதல்வர் விஜயின் குட்டிக்கதை, சைகை எல்லாம் திமுகவை எரிச்சல் படுத்தியது உதயநிதி ஸ்டாலின் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் கணவரை காணோம் என்று ஒரு பெண்மணி தேடுகிறார் விஜயின் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சனம் செய்தார்.
சட்டசபையில் தேடாதீர்கள் இந்த அப்பா மக்கள் மனதில் இருக்கிறார் என்று ஒரு திருமண விழாவில் திருவாரூரில் திமுக தலைவர் ஸ்டாலின் விஜய்க்கு பதில் சொன்னார். மொத்தத்தில் ஆரோக்கியமான அரசியலாக இது தெரியவில்லை.

Leave a comment
Upload