
ஆலந்தூரில் மெட்ரோவை பிடித்து திருவெற்றியூரில் உள்ள தன்னுடையஅலுவலகத்திற்கு செல்ல வேண்டும் மகேஷ். மெட்ரோ பார்க்கிங்கில் வண்டியை நிறுத்திவிட்டு பார்க்கிங் சார்ஜ் பத்து ரூபாயை சில்லரையாகக் கேட்ட பார்க்கிங் இன்சார்ஜ் பையனிடம்,’சில்லறை இல்லை’ என்று இவன் சொல்ல, அவன் காலையிலேயே ’ஏன் சார் படுத்திஎடுக்கிறீங்க? ’என்றான்.
இதை பக்கத்தில் இருந்த நடுத்தர வயது பூக்காரி கேட்டுக் கொண்டிருந்தாள்.
‘தம்பி, இங்க வாங்க. இந்த பத்து ரூபாயை கொடுத்துட்டு வண்டியை பார்க் பண்ணிட்டுப் போங்க. அலுவலகம் செல்லும் வேலையை பாருங்க. மாலை திரும்பி வரும்போதுஎனக்கு இந்த பத்து ரூபாயைக் கொடுங்க.அவன் விடாக் கண்டன்’ என்று சொல்லி அவனுக்குஅவன் கேட்காமலேயே அவள் உதவினாள்.
மகேஷுக்கு தன்மானம் தடுத்தாலும் ’இப்பொழுது தன்னுடைய வேலை முடிய வேண்டும்.அலுவலகத்திற்கு செல்ல வேண்டும்’ என்ற மனநிலையில் இருந்தான். எனவே தன்மானத்தைதடுத்து நிறுத்தி வைத்துவிட்டு அந்த பத்து ரூபாய் சில்லறைக் காசினை வாங்கி பார்க்கிங் பையனிடம் கொடுத்தான்.
மெட்ரோவில் பயணித்து அலுவலகத்திற்குச் சென்றான். நாள் முழுவதும் அவன் மனது அந்தப் பூக்காரியின் பரோபகார சிந்தனையை நினைத்து நினைத்து பார்த்து சிலிர்த்துக்கொண்டது.அவள் மட்டும் அந்த சில்லறையை அப்பொழுது கொடுத்து உதவவில்லையென்றால் அலுவலகத்தில் கால தாமதம் ஆகியிருக்கும்.பொறுப்பான பதவியில்இருக்கும் அவமானத்தை கொண்டு வந்திருக்கும்.
இப்பொழுது எல்லாமே ஆன்லைன் பரிவர்த்தனையாக இருப்பதினால் யாரிடமும்சில்லறைக்காசு அதிகமாக இருப்பதில்லை. இன்று காலை அவனுடைய கைப்பேசியில்சிக்னல் கோளாறு.அதுதான் அவன் பிரச்னைக்குக் காரணம்.நாள் முழுவதும் பணியில்அவனுக்கு கவனம் அதிகமாக செல்லவே இல்லை. ’இப்படிக் கூட இந்த கலிக் காலத்தில்ஒருவர் இருக்கிறாரே!’ என்று அந்த அம்மாவை அவனுடைய மனம் புகழ்ந்து கொண்டேஇருந்தது.
மாலையில் திரும்ப வந்து பத்து ரூபாயை அந்த அம்மாவிடம் திரும்ப கொடுத்தான்அப்பொழுது அந்த அம்மா, ’உனக்கு கல்யாணம் ஆயிடுச்சு இல்ல. உன் மனைவிக்கு கொஞ்சம்பூ வாங்கிக்கொடேன். அவங்க ஆசைப்படுவது. கணவன் கிட்ட இருந்து இதை மட்டும் தான்.எங்க வீட்டுக்காரர் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சாமிக்கும் எனக்கும் பூ வாங்கிட்டுத் தான்வருவார். என்னை சின்னத்தாயின்னுதான அன்பாகக் கூப்பிடுவாரு. அவங்க அம்மாஅவங்களுக்கு பெரிய தாயி. நான் சின்னத்தாயி. உன்னை நம்பி வந்த பெண்னுக்கு ஒவ்வொருவெள்ளிக்கிழமையும் பூ வாங்கி கொடு. எனக்கு வியாபாரம் ஆகனும்’னு இதை நான்சொல்லவில்லை’என்று சொல்லி முடித்தாள்.
அவனிடமிருந்து காசு கூட எதிர்பார்க்காமல் இரண்டு முழம் பூ எடுத்து பையில்போட்டு அவனிடம் கொடுத்தாள். இவன் ஏற்கனவே அவள் மீது வைத்திருந்த மரியாதைஇப்பொழுது கூடுதலாயிற்று. எனவே காசு பற்றி கவலைப்படாமல் அந்த இரண்டு முழம்பூவுக்கான பணத்தைக் கொடுத்துவிட்டு தன்னுடைய இருசக்கர வண்டியில் வீட்டிற்குவந்தான்.
அவனுடைய மனைவி, ’என்னங்க? இது எப்பவுமே இல்லாம திருநாளாக எனக்கு பூவாங்கிட்டு இருக்கீங்க. நாளைக்கு எனக்கு பிறந்த நாள் நீ எப்படி நினைவில்வச்சிருக்கீங்களே? நீங்க எப்பவுமே சர்ப்ரைஸ் கொடுக்கறதுல கில்லாடிங்க’ என்றுசொன்னாள்.
இவனுக்கு ஒன்றுமே புரியவில்லை. இயல்பாக நடந்தது ஒரு சிறப்பு நாளாக மாறிவிட்டது.மறுநாள் காலை தன்னுடைய மனைவியின் தலையில் அந்த பூவை சூடி விட்டு அவளுக்கு ஒருஆனந்தத்தை கொடுத்தான். ’இரண்டு முழம் பூவில் இவ்வளவு இன்பமா?’ என்ற சிந்தித்துகொண்டேன், ’இன்று மாலை கோவிலுக்கு போகலாம்’ என்று சொன்னான்

Leave a comment
Upload