வழக்கமாக தென் மேற்கு பருவமழை கடந்த காலங்களில் மே மாதம் கடைசி வாரத்தில் துவங்கும்.

தென் மேற்கு பருவ காற்று கேரளாவில் பருவ மழை வெடிப்பு கோழிக்கோடு கடற்கரை பகுதியில் துவங்கும்.
பலத்த மழை பெய்யும் அது மெதுவாக நகர்ந்து மேற்கு தொடர்ச்சி மலையை கடந்து செல்லும் போது நீலகிரி மலை பகுதியில் மழை பெய்ய துவங்கும்.

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள மாவட்டங்கள் முழுவதும் மிதமான மற்றும் கன மழை பெய்யக்கூடும்.
இதன் தாக்கம் நீலகிரி மற்றும் தமிழகத்தில் உள்ள சில மாவட்டங்களில் பரவலான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது எல்நினோ தாக்கம் அதிகமாக இருப்பதால் பசிபிக் கடல் பகுதியில் நிலவும் தல காற்று காரணமாக மிக பெரிய அளவில் இயற்கை சீற்றங்கள் ஏற்படும் அபாயம் உள்ளது என்று கூறுகிறார்கள் வானிலை ஆய்வாளர்கள்.
இயற்கை ஆர்வலர் சிவதாஸ் கூறுகையில்,

“ நம் நாட்டில் இரண்டு பருவ மழை மிக முக்கியமான ஒன்றாக உள்ளது.
அதே சமயம் தென் மேற்கு பருவ மழையின் தாக்கம் அதிகமாக பாதிப்பை ஏற்படுத்தும் சில சமயம் மிதமான மழை பெய்யும்.
கடந்த காலங்களில் இந்த பருவ மழை விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை அளிக்கும் காரிப் பருவம் சிறப்பாக இருக்கும் .
தமிழகம்,கேரளா , கர்நாடக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் நீர்பிடிப்பு பகுதிகளில் இந்த மழை பெய்தால் தண்ணீர் தட்டுப்பாடு இருக்காது.

தென் மேற்கு பருவ மழை மே மாதத்தில் துவங்கி செப்டம்பர் மாதம் வரையில் பெய்யும் இது கரீப் பருவ பயிர்களுக்கு மிகவும் உகந்த பருவமாக இருக்கும்.
தற்போது எல்நினோ தல காற்றால் பத்து நாட்களுக்கு தொடர்ந்து பெய்யும் மழை ஒரே நாளில் கொட்டி தீர்த்து மிக பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது என்பது ஆபத்தானது.
எல்நினோ தல காற்று 1578 ஆம் ஆண்டே துவங்கியுள்ளது.
1963-64, 1982-83,1986-87,1997-98,2009-10,2015-16 என்று எல்நினோ பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

எல்நினோ என்பது மத்திய மற்றும் கிழக்கு பசிபிக் பெருங்கடல் பகுதியில் கடல் நீரின் மேற்பரப்பு வழக்கத்தை விட மிக அதிக வெப்பமடையும் ஒரு இயற்கையான கால நிலை மாற்றமாகும்.
இது உலகெங்கிலும் உள்ள பருவமழை மற்றும் வெப்பநிலையை பெருமளவில் பாதிக்கிறது.
1963-64 ஆம் வருடம் ஏற்பட்ட எல்நினோ காற்றால் இந்தியாவில் மிக பெரிய வறட்சி ஏற்பட்டுள்ளது அதை மையமாக வைத்து ‘தண்ணீர் தண்ணீர் ‘ படம் எடுக்கப்பட்டது.

பசிபிக் பெருங்கடலில் 4 டிகிரி உஷ்ணம் அதிகரித்து உலகெங்கிலும் பருவ மழையை பாதித்துள்ளது.
பருவ மழை தொடர்ந்து ஜூன் மாதத்தில் பெய்யும் தற்போது எல்நினோ காரணத்தால் சில மணிநேரம் கன மழை பெய்து நின்றுவிடுகிறது.
தூத்துக்குடி கடல் பகுதியில் புயல் சுழற்சி (Toranto) ஏற்பட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த எல்நினோ புயலால் மழை காலமும் பனி காலமும் பாதிக்க பட்டுள்ளது.
அதிக மழை அல்லது மிக குறைந்த மழை பொழிவு அதிக பனி குளிர் நிலவும் பனி குறைந்து வெப்பம் அதிகரிக்கும்.
இதனால் பயபட வேண்டிய அவசியமில்லை எதையும் தாங்கும் இதயம் வேண்டும் இயற்கையோடு ஒன்றி வாழ வேண்டியது தான்.
இந்த இயற்கை மாற்றதால் காரிப் பருவம் பாதிப்பு அதிக மழையால் நடப்படும் விதைகள் அடித்து செல்லப்பட்டு பயிர்கள் சேதம் அடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

அதிக மழை வறட்சி ஏற்படும் பட்சத்தில் வன விலங்குகள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
மழை குறைந்தால் அணைகளில் தண்ணீர் குறைந்து மின் உற்பத்தி பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.” என்றார்.
எல்நினோ எப்படி உருவாகிறது என்றால் “ வழக்கமாக பூமத்திய ரேகையை ஒட்டியுள்ள பசிபிக் கடற்பகுதியில் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி வீசும் காற்று குளிர்ந்த நீரை மேற்கிலும், வெப்பமான நீரை ஆசிய பகுதியில் நிலை நிறுத்தும்.
எல்நினோ காலத்தில் இந்த காற்று பலவீனமடைவதால் வெப்பமான நீர் காற்று கிழக்கு பசிபிக் பகுதிக்கு திரும்பி விடுகிறது. இதனால் உலகின் பல பகுதிகளில் வழக்கத்திற்கு மாறான வறட்சி, காட்டு தீ அல்லது மிக கடுமையான வெள்ளப்பெருக்கு போன்ற தீவிரமான தட்பவெப்ப நிலைகள் உருவாகி பயப்பட வைக்கின்றன.

கடந்த ஏப்ரல் மாதம் ஊட்டி அருகே உள்ள பார்சன்ஸ் வேலி,நடுவட்டம், முதுமலை வன பகுதியில் பயங்கர காட்டு தீ ஏற்பட்டு பல ஏக்கர் காட்டு பகுதி எரிந்து சாம்பலானது அதில் வன விலங்குகள் உயிரிழந்தன மற்றும் விலையுயர்ந்த மரங்கள் தீயில் கருகி நாசம் ஆகி போனது.
தற்போது சூப்பர் எல்நினோ உருவாகி பெரிய பயத்தை ஏற்படுத்தி உள்ளது.
மத்திய மற்றும் கிழக்கு பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பு வெப்பநிலை நீண்ட காலத்திற்கு இயல்பை விட 2 டிகிரி செல்சியஸ் அதற்கு மேல் அதிகரிக்கும் ஒரு தீவிர வானிலை நிகழ்வாகும்.

இது உலகம் முழுவதும் பருவமழைகளில் கடுமையான மாற்றங்களையும் வரலாறு காணாத வெப்ப அலைகளையும் ஏற்படுத்துகிறது.
வெப்ப அலைகள்,பருவமழை குறைவு,வறட்சி அபாயம் ஏற்படும் சூழல் நிலவுகிறது.
இந்த பாதிப்பு 2027 மே மாதம் வரை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Leave a comment
Upload