தொடர்கள்
அழகு
பாட்டும் நானே பாவமும் நானே: கண்ணதாசன் 100 – ஷோபா ஜெயராமன்


20260525231942915.jpg

சார் போஸ்ட்!

அனுப்புனர் : மும்பை சண்முகானந்தா சபா.

பெற்ற அழைப்பிதழ் பகிர்ந்த விபரம் தான் கீழே இதோ.

20260525232315816.jpeg

ஜூன் 20ஆம்தேதி. மும்பை சண்முகானந்தா ஹாலில் கண்ணதாசனைக் காதலிப்போம் -

கவியரசரின் நூற்றாண்டு விழாவை ஆரம்பிப்போம் : QFR குழுவினர் நேரலையாய் தொடருவார்.

சபாவின் அங்கத்தினரும் கவிஞரின் ரசிகரும் பட்டாளமென குவிந்து விட்டனர் சபை முன்னே.

20260527074654194.jpeg

2026052707472019.jpeg

வந்தவர் சென்ற நூற்றாண்டில் கவிஞரின் தமிழ்த்தேன் மழையில் குளித்தவர்கள். ஆமாங்க, எண்பது வயதினரும் ஆஜர்.

தேன் குடித்த நரி நான் கண்ணதாசனைக் காதலி என்றால் விடுவேனா…கொண்டாடிவோம்ல என்று QFRன் சுபஸ்ரீ தணிகாசலம் முழக்கத்துடன் தான் ஆரம்பித்தார். ஆரம்பமே ஆரவாரம் தான். அரங்கம் முழுதும் கண்ணதாசனைக் கொண்டாடியது.

கொண்டாட்டம் களை கட்டியது

20260527074802541.jpeg

சபையோரின் தூண்டுதலாலா? அல்லது மெல்லிசைக் குழுவினரின் பாடிய விதத்திலா? அல்லது கவிஞரின் காவியக் கவிதைகளாலா?

பட்டி மன்றமே நடத்திடலாம். நிச்சயம் கொண்டாட்டத்தின் விதை காலத்தால் அழியாத கவியரசரின் பாடல்களே என்று கண்ணை மூடிக்கொண்டு சொல்லிவிடலாம்.

ஆனால், பாடியவர்கள், இசையமைப்பாளர்கள் மற்றும் அன்றும் இன்றும் ஆதரித்து பாடி ஆடிக் கொண்டாடி மகிழும் ரசிகர்கள் என்ற இணைப்பு ஒரு தவிர்க்கமுடியாத பாலங்கள் தான்.

நிறைந்த அரங்கம்,

20260525232459837.jpg

ஒவ்வொரு பாட்டினிடையேயும் முடிவிலும் தொய்வில்லாத கைதட்டல்கள் என்ன!, விசில்கள் என்ன!, எழுந்து நின்று கை தட்டிய விதமென்ன? சண்முகானந்தா சபை நிகழ்ச்சிக்கு இது ஆச்சர்ய ரசிகர் கூட்டம் தான்.

அன்று ஜூன் 20, மெல்லிசை மன்னரின் பிறந்த தினம். என்ன ஒரு தானாய் அமைந்திட்ட ஒரு வியத்தகு ஒற்றுமை. ஆமாம். மெல்லிசை மன்னரும் கவியரசரும் இணை பிரியாத தோழர்கள் தானே. ஜூன் 24 கவியரசரின் பிறந்த நாள். 1927ல் பிறந்த கவியரசுக்கு வரும் ஆண்டு முழுதும் நூற்றாண்டு தானே.

இந்த கொண்டாட்டங்களை, இதில் மும்பை, முக்கியமாக சண்முகானந்தா சபா, மும்பையில் ஆரம்பித்து வைத்து விட்டது எனலாம்.

20260525232610212.jpg

சுபஸ்ரீ தணிகாசலம் வடிவமைத்துத் தொகுத்து வழங்கும் 'QFR' (Quarantine From Reality) எனும் இசை சார்ந்த இணையத் தொடர், 800-க்கும் மேற்பட்ட அத்தியாயங்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. காலத்தால் அழியாத தமிழ் திரைப்படங்களின் இனிமையான பாடல்களைப் புதிய வடிவில் மீளுருவாக்கம் செய்ததற்காக இத்திட்டம் பெரிதும் பாராட்டப்படுகிறது.

கேட்பாளர்களை இனிய இசைப் பயணத்திற்கு அழைத்துச் செல்லும் பிரபலமான நிகழ்ச்சி QFR என்று அனைவரும் ஏகோபிப்பர்.

20260525232655589.jpg

ஏற்கனவே பல வெற்றிகரமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தயாரித்துள்ள சுபஸ்ரீ தணிகாச்சலம் இசை நிகழ்ச்சியின் பின்னணியில் செயல்படும், 'QFR'-ஐத் தொடங்கத் தூண்டிய காரணங்களை சொல்கிறார்.

உலகமே கொரோனா மஹாமாரி தொற்று நோய்க்கு துவண்டதில் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட மார்ச் 23, 2020 அன்று, மிகவும் எளிமையான முறையில் இந்நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. பெருந்தொற்று மற்றும் அதனால் ஏற்பட்ட தனிமைப்படுத்தல் சூழல் மக்களை வீட்டுக்குள்ளேயே முடக்கியது; தங்களை எவ்வாறு பயனுள்ள வகையிலும் மகிழ்ச்சியாகவும் ஈடுபடுத்திக்கொள்வது என்று தெரியாமல் பலர் தவித்தனர். அந்தச் சூழலில்தான், பழைய நினைவுகளை மீட்டெடுக்கும் ஒரு இசைப் பயணத்தை மேற்கொள்ளும் யோசனை சுபஸ்ரீ தணிகாச்சலத்திற்குத் தோன்றியது. அதனைத் தொடர்ந்து, புகழ்பெற்ற இசையமைப்பாளர்களின் காலத்தால் அழியாத பாடல்களை ஒன்றிணைத்து வழங்கும் 'QFR' (Quarantine From Reality) எனும் தொடரை அவர் தொடங்கினார்.

இந்த கண்ணதாசனைக் காதலிக்கும் நிகழ்ச்சி ஒரு லட்டு தான் இந்த குழுவினருக்கு. பாடும் பாடகர்கள் அனைவருமே பிரபலங்கள் அல்ல என்றாலும் நிகழ்வுக்கு பக்க பலங்களே. இளம் வளர்ந்து வரும் பாடகர்களைக் கொண்டது இந்த குழு, ஒரு சிறப்பு அம்சம் தான்.

2026052523284700.jpg

குழுவினர் ஒவ்வொருவரும் தத்தம் திறமைகளை இசைக்கருவிகளின் மூலமாகட்டும், பாடுவதாகட்டும் அனுபவித்து செய்ததனால் நிகழ்ச்சி படு கல கலப்பாக இருந்தது. குழுவில் தலைவி சுபஸ்ரீயின் ஒவ்வொரு பாட்டுக்கான பின்னணி கதையினை சுருக்கிப் புனைந்த விதம் நிகழ்ச்சிக்கு முதுகுத் தண்டு தான்.

ஒவ்வொரு பாடலின் போதும் பின்னணியாய் திரையில் திரைப்படத்திற்காக பாடிய பின்னணிப் பாடகர்களின் படங்களை வைத்தது நன்ராயிருந்தது.

செந்தமிழ் தேன்மொழியாள், காலங்களில் அவள் வசந்தம், நான் பேச நினைப்பதெல்லாம், மாலைப் பொழுதின் மயக்கத்திலே, அத்திக்காய் காய் காய், உன்னைக் காணாத கண்ணும், மனிதன் என்பவன் தெய்வமாகலாம், பால்வண்ணம் பருவம் கண்டு, சொன்னது நீ தானா?, பெண்ணொன்று கண்டேன், ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால், என முத்தான முத்துக்கள் அத்தனையும் முத்துக்கள் என அள்ளி அள்ளி வீசினர்.

20260525233043457.jpg

காதல், தோழமை, உறவுகள், தத்துவம், பக்தி என அனைத்தையும் கலந்த ஒரு பாமாலை தான் அன்றைய மாலை.

முத்தைய்யாவின் முத்துக்கள் சிதறின.

பிறவிக் கவிஞன் அவன். அவன் நாவிலிருந்து வந்தது எது சோடை போயிருக்கு?

ஏதை எடுப்பது எதை விடுவது என்று தத்தளித்து தான் போயிருப்பார் தொகுப்பாளினி சுபஸ்ரீ.

தொட்டதெல்லாம் முத்துகள். முத்தைய்யாவின் முத்துக்கள்.

ஒரு நான் ஸ்டாப் கொண்டாட்டமாகத்தான் அன்று அங்கு அரங்கேறியது.

அடுத்த நாள் உலக இசை நாள். அன்று மெல்லிசை மன்னரின் பிறந்தநாள்.

மும்பையில் ஆரம்பிச்சாச்சு. இனி உலகெங்கும்….. ஒலிக்கும்