நயன்தாரா

தென் இந்திய நடிகைகளில் சொந்தமாக ஜெட் விமானம் வைத்திருக்கும் ஒரே நடிகை நயன்தாரா. இந்த விமானத்தின் மதிப்பு 50 கோடி ரூபாய்.
காஜல் அகர்வால்
"இளம் நடிகைகளுக்கு நான் எந்த வகையிலும் சளைத்தவள் அல்ல. அவர்களுக்கு சவால் விடும் வகையில் ரொமாண்டிக்காக கிளாமர் வேடங்களில் நடிக்க தயார் " என்கிறார் நடிகை காஜல் அகர்வால்.
ஜோதிகா

நடிகை ஜோதிகா தற்சமயம் ஆடை அலங்காரத்தில் தனி கவனம் செலுத்துகிறார். கவர்ச்சியான உடைகளை தயார் செய்வதற்கு என்று பிரத்யோகமாக அலங்கார நிபுணர் ஒருவரை நியமித்திருக்கிறார்.
இயக்குனர் மிஷ்கின்
இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிக்கும் ரஜினியின் 173-வது படத்தில் இயக்குனர் மிஷ்கின் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
ஜான்வி கபூர்
ஜான்வி கபூர் கவர்ச்சி வேடத்தில் நடிக்க அவரின் தந்தை போனி கபூர் தடை விதிக்கிறார். உங்கள் அம்மா பெயரைக் கெடுக்க வேண்டாம் என்று எச்சரிக்கை வேறு செய்திருக்கிறார்.
பூஜாஹெக்டே

சக நடிகைகள் பொறாமை கொள்ளும் தனது நீளமான தலை முடியை வெட்டி வீசிவிட்டு குட்டை முடி கெட்டப்புக்கு மாறியுள்ள பூஜா ஹெக்டே அதை வீடியோவாக எடுத்து வெளியிட்டு இருக்கிறார். இப்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.
ராகுல் ப்ரீத் சிங்
"கவர்ச்சி என்பது நடிப்பின் ஒரு அங்கம் தான். எல்லை மீறாதஅளவு அந்த கவர்ச்சி நல்லது தான். இங்கு கவர்ச்சி என்பதை தவறாக பார்க்கும் கோணம் மாறிவிட்டாலே பாதி பிரச்சனைகள் தீர்ந்துவிடும் " என்கிறார் நடிகை ராகுல் ப்ரீத் சிங்.
பாக்கிய ஸ்ரீ போர்ஸ்

தற்போது சிவகார்த்திகேயன் ஜோடியாக நடித்துவரும் பாக்கியஸ்ரீ போர்ஸ் "அவுரங்காபாத் முதல் வீடு என்றால் ஹைதராபாத் எனது இரண்டாவது வீடு என்று சொல்லி இருக்கிறார். ஏற்கனவே தெலுங்கு நடிகர் ஒருவரை காதலிப்பதாக கிசு கிசு. அது உண்மைதானா என்னமோ யாருக்கு தெரியும்?
மகுடம்

விஷால்,அஞ்சலி, தூஷரா விஜயன் ஆகியோர் நடித்த மகுடம் படத்தின் படப்பிடிப்பு நிறைவு. விஷால் நடித்து படம் ரிலீஸ் ஆகி ரொம்ப வருஷம் ஆன மாதிரி தெரியுது !!
'இதயம் 'முரளி
அதர்வா, பகத் பாஸில், ப்ரீத்தி முகுந்தன், காயடுலோஹர் நடித்த 'இதயம் முரளி படம் ஜூலை பத்தாம் தேதி ரிலீஸ்.
நிதி அகர்வால்

"நான் பார்க்க சாந்தமாக இருக்கிறேன். அதற்காக எல்லாவற்றிலும் நான் அப்படியே இருப்பேன் என்று எதிர்பார்க்காதீர்கள். பூனை போல் இருக்கும் நான் தேவைப்பட்டால் புலியாகவும் மாறுவேன். அது சந்தர்ப்ப சூழ்நிலை பொறுத்தது" என்கிறார் நடிகை நிதி அகர்வால்.

Leave a comment
Upload