தொடர்கள்
கவர் ஸ்டோரி
அப்பாவி உயிர்கள்.. அமோனியா பயங்கரம்.. - 2 விகடகவியார்

20260527073441258.jpeg

சென்னையின் புறநகர் பகுதியையொட்டி பெரியபாளையம் அருகே மஞ்சங்காரணை (கன்னிகைப்பேர்) என்ற பகுதியில்...

‘செயின்ட் பீட்டர் அண்ட் பால் சீஃபுட் எக்ஸ்போர்ட்ஸ் பிரைவேட் லிமிடெட்’ (St. Peter & Paul Seafood Exports Pvt. Ltd) என்ற தனியார் இறால் மற்றும் கடல் உணவு பதப்படுத்தும் ஏற்றுமதி நிறுவனம் இயங்கி வருகிறது.

ஞாயிற்றுக்கிழமை தொழிலாளர்களுக்கு விடுமுறை நாள். ஆனால், அந்த ஆலையின் வளாகத்திலேயே அமைக்கபட்டிருந்த தங்குமிடங்களில் (Quarters) நூற்றுக்கும் மேற்பட்ட வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்தனர்.

ஆலைக்குள் இருந்த அமோனியா குழாயில் இருந்து வெளியேறிய நச்சுவாயு, அவர்கள் தங்கியிருந்த குடியிருப்புப் பகுதிக்குள் அதிவேகமாகப் பரவியது.

அமோனியா வாயுவின் வீரியம் மிக அதிகமாக இருந்ததால், தூங்கிக் கொண்டிருந்த மற்றும் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த தொழிலாளர்களுக்கு உடனடியாகக் கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

சிலருக்கு மூக்கு மற்றும் வாயில் இரத்தக்கசிவு ஏற்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விபத்து நடந்த முதல் நாளில் 7 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில், மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருந்தவர்கள் அடுத்தடுத்த நாட்களில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தனர். தற்போதைய நிலவரப்படி (ஜூன் 26, 2026) பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.

பலியான 14பேருரமே பெண் தொழிலாளர்கள் என்று தெரிகிறது. அவர்கள் வாழ்வாதாரம் தேடி ஒடிசா (11 பேர்), அஸ்ஸாம் (2 பேர்), மற்றும் ஜார்கண்ட் (ஒருவர்) ஆகிய மாநிலங்களில் இருந்து இங்கு வந்து வேலை செய்த புலம்பெயர் தொழிலாளர்கள் என்பது கூடுதல் சோகம்.

60-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் படுகாயமடைந்து சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனை, வேல்ஸ் மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். பல தொழிலாளர்கள் இன்னமும் வென்டிலேட்டர் மற்றும் ஆக்சிஜன் உதவியுடன் உயிருக்குப் போராடி வருகின்றனர்.

ஐஸ் கட்டிகளைத் தயாரிக்கும் இயந்திரங்களை (Ice-flaking machines) நிறுவுவதற்கோ, அதற்கான அமோனியா குழாய்களைப் பதிப்பதற்கோ ஆலை நிர்வாகம் முறையான மாற்றுத் திட்ட அனுமதியை (Revised Plan Approval) அரசிடம் பெறவில்லை எனக் கூறப்படுகிறது.

ஆலை மூடப்பட்டதைத் தொடர்ந்து, அச்சமடைந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த எஞ்சிய 60-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஜூன் 26 அன்று சிறப்பு அதிகாரிகள் உதவியுடன் ரயில்கள் மூலம் தங்களது சொந்த ஊர்களுக்குத் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.

கடந்த 2023-ல் எண்ணூரில் நடந்த அமோனியா கசிவின் போது பெரிய அளவில் உயிர்ப்பலி ஏற்படவில்லை.

அந்த விபத்திலிருந்து பாடம் கற்கத் தவறியதன் விளைவை, இந்த 2026 ஜூன் மாத விபத்தில் 14 ஏழைப் பெண் தொழிலாளர்கள் தங்களின் உயிரைக் கொடுத்துச் சந்தித்துள்ளனர்.

லாப நோக்கம் மட்டுமே பிரதானமாக இல்லாமல், எளிய தொழிலாளர்களின் உயிருக்கு உத்தரவாதம் அளிக்கும் கடுமையான சட்ட அமலாக்கமும், தொடர் கண்காணிப்பும் மட்டுமே இனி இதுபோன்ற ஆலைத் துயரங்களைத் தடுக்கும்.