தொடர்கள்
அரசியல்
தர்மன்

கமல் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் படம் எப்போது ? யார் இயக்குனர் ? படத்தின் பெயர் என்ன? இப்படி நிறைய கேள்விகளுடன் காத்திருந்த ரஜினி ரசிகர்களுக்கு அந்த சஸ்பென்ஸை உடைத்தார் கமல்.

ஏற்கனவே சுந்தர்.சி, சிபி.சக்கரவர்த்தி, இப்படி பல இயக்குனர்கள் கதை சொல்லியும் கதை பொறுத்தவரை ரஜினி முடிவே இறுதியானது என்பதை உறுதியாக இருந்த கமல் கடைசியாக "ஓ மை கடவுளே' மற்றும் டிராகன் படம் மூலம் தமிழ் சினிமாவில் கவனிக்கப்பட்ட இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து கதைக்கு ரஜினி ஓகே சொல்லி இருக்கிறார். இந்தப் படத்தில் ஏழைகளுக்கு உதவி செய்யும் ரெண்டு ரூபா டாக்டராக ரஜினிகாந்த் நடிக்கிறார்.

படத்தின் பெயர் தர்மன்.

இந்தப் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு எந்தவித ஆரவாரம் இன்றி பூந்தமல்லியில் உள்ள ஒரு இடத்தில் பிரம்மாண்டமாக செட் போடப்பட்டு ஓபனிங் சாங் மற்றும் ரஜினி இல்லாத முக்கிய காட்சிகளின் படப்பிடிப்பு நடந்து வருகிறது..

விரைவில் இந்த படப்பிடிப்பில் ரஜினிகாந்த் கலந்துக்கொள்ள இருக்கிறார்.

இந்தப் படத்தில் ரஜினிகாந்துடன் இயக்குனர் மிஷ்கின், பாஸில் ஜோசப், இது தவிர ஷங்கர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இதில் இயக்குனர் ஷங்கர் வில்லன் வேடத்தில் நடிக்க இருக்கிறார்.

இந்தப் படத்தில் பர்ஸ்ட் லுக் அறிமுகம் மற்றும் தொடக்க விழாவில் ரஜினி பேசும்போது "மேடைக்கு என்னை அழைக்கிறார்கள் என்று சொன்னாலே ஒரு தயக்கம் ஏற்படுகிறது. நான் பேசினாலும் பிரச்சனை பேசாவிட்டாலும் பிரச்சனை அமைதியாக இருந்தால் வாயில் என்ன கொழுக்கட்டை வைத்திருக்கிறாரா ? என்று கிண்டல் அடிக்கிறார்கள். நீண்ட காலத்துக்கு பிறகு நான் ஒரு விஷயத்தை புரிந்து கொண்டேன். நம்மை பிடிக்காதவர்களுக்கு நாம் என்ன செய்தாலும் பிடிக்காது. எனவே எல்லோருடைய திருப்திக்காகவும் நாம் வாழ முடியாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தை தொடங்கிய போதே என் நிறுவனத்துக்காக நீங்கள் ஒரு படம் பண்ண வேண்டும் கதையைப் பற்றியோ அல்லது படப்பிடிப்பு குறித்து விவரங்களையோ நான் கேட்க வேண்டாம் அனைத்தையும் உங்களிடமே விட்டு விடுகிறேன் என்று அவர் என்னிடம் முழு பொறுப்பை ஒப்படைத்தார். ஜாம்பவான் கமல் என் மீது வைத்திருந்த நம்பிக்கை எனக்கு பெரியப் பொறுப்பை உயர்த்தியது நான் கதை கேட்டேன் ஆனாலும் கமல் முழுமையாக கேட்டு அவர் ஓகே சொன்ன பிறகு தான் படத்தை தொடங்குவது என்று நாங்கள் முடிவு செய்தோம் "என்றார் ரஜினிகாந்த்.