
ஏ.வ .வேலு வீடுகளில் லஞ்ச ஒழிப்பு சோதனை !
இவங்க அரசியல் பழிவாங்கல் அப்டின்னு சொல்லுவாங்க , இதுதான் வழக்கம் !!
செங்கோட்டையன் எப்படிப்பட்டவர் என்று எனக்கு தான் தெரியும் !நயினார் நாகேந்திரன்.
இதெல்லாம் தெரிஞ்ச உங்களுக்கு தேர்தலில் ஜெயிக்க தெரியலையே ?
தமிழக மக்கள் மனதில் அப்பா நிரந்தரமாக உள்ளார், ஸ்டாலின் பதில்.
ஆனா இதைஎல்லாம் வச்சு கோட்டையில் முதல்வர் நாற்காலி உட்கார முடியாதே !!
பனிக்காலம் முடிந்து வசந்த காலம் வரப்போகிறது வைகோ பேச்சு.
ஆ.ராசாவும் இதே தான் சொல்கிறார் ! நீங்க கிளம்பலாம் !!
அரசுப் பேருந்து பயணத்தை அலைபேசியில் வீடியோ எடுத்த முதல்வர் விஜய்.
நீங்க இப்படி பண்றதால்தான் எதிர்க்கட்சித் தலைவர் ரீல்ஸ் ஆட்சி என்கிறார் !!
தமிழக வெற்றி கழக ஆட்சியில் கெட்டது நடந்தால் எதிர்ப்போம் இடது கம்யூனிஸ்ட் மாநில பொதுச் செயலாளர்.
விடுங்க உங்களுக்கு வர வேண்டியது கண்டிப்பா வரும் !!
எங்களை பயங்கரவாதிகள் என்று சொல்வதற்கு மத்திய அமைச்சருக்கு வெட்கமாக இல்லையா கரப்பாம்பூச்சி கட்சித் தலைவர் கடும் தாக்கு.
அமைச்சர் கரப்பான் பூச்சிக்கு பயப்படுவார் அதனால் தான் !!
கண்கள் பனித்தன ! இதயங்கள் சேர்ந்தன !! பாமக நிறுவனர் ராமதாஸ் அன்புமணி கட்டியணைப்பு.
ரொம்ப லேட் , தேர்தலுக்கு முன்பு இந்த கட்டியணைப்பு நடந்திருந்தால் கூடுதலா ரெண்டு மூணு சீட்டு ஜெயிச்சிருப்பாங்க !!
நான் பேசினாலும் பிரச்சனை பேசாவிட்டாலும் பிரச்சனை ரஜினிகாந்த் பேச்சு.
மொத்தத்துல நீங்க ஒரு நடமாடும் பிரச்சினை உடுங்க !!
அரசு செயலாளர்களை தேடிச் செல்லும் அமைச்சர்கள்.
ஆமா நெளிவு சுளிவு எல்லாம் அவங்களுக்கு தானே தெரியும் !!
தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் தொடர விரும்பவில்லை, செல்வப் பெருந்தகை.
ஆமா இந்த கூட்டணி உங்களுக்கு செட் ஆகாது, ஜம்ப் பண்ணுங்க அறிவாலயத்துக்கு !!
திமுக மீது பழி போடுவதே தமிழக வெற்றி கழகத்தின் வழக்கம் உதயநிதி.
எல்லாம் நீங்க சொல்லிக் கொடுத்தது தான், நீங்க எதற்கெடுத்தாலும் மத்திய அரசு மீது பழி போடலையா ? அதே பாணி தான் !!
திமுக பாஜக இடையே நெருக்கமான உறவு உள்ளது அமைச்சர் நிர்மல் குமார்
எல்லோரும் கழற்றி விட்டால் அங்க தானே போகணும் !!

Leave a comment
Upload