தொடர்கள்
விகடகவியார்
வாரிசு நடிகர்கள் இடையே போட்டி - லைட் பாய்

20260527075725319.png

நடிகர் தனுஷின் சகோதரி மகனும், 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் 'படத்தில் மூலம் அறிமுகமான பவிஷ் தனது இரண்டாவது படமான 'லவ் ஓ லவ்' படம் ஜூலை 10 அன்று ரிலீஸ். இந்தப் படத்தில் பிரபல தெலுங்கு யூடியூபர் நாக துர்கா கதாநாயகியாக அறிமுகமாகிறார். இவர்களுடன் செல்வராகவன் கே.எஸ்.ரவிக்குமார், வனிதா விஜயகுமார், ரம்யா, ஆதித்யா, கதிர் என்று நிறைய பேர் நடிக்கிறார்கள். கிரெடிட் கார்ட் கடனால் காதலன் படும் பாட்டை ஜாலியாக சொல்லி இருக்கிறார் இயக்குனர் மகேஷ் ராஜேந்திரன்.

'லவ் ஓ லவ் ' வெளியாகும் அதே தேதியில் அதர்வா நடிப்பில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் 'இதயம் முரளி' திரைப்படமும் ரிலீஸ் ஆகிறது. இந்தப் படத்தில் காயடுலோஹர் ப்ரீத்தி முகுந்தன் ஃபஹத் பாசில் ஆகியோர் நடிக்கிறார்கள். இயக்கம் ஆகாஷ் பாஸ்கரன். இவர்கள் இருவரில் ஜெயிக்கப் போவது யார் என்ற சஸ்பென்ஸ் இப்போது வரை தொடர்கிறது.