
வளரும் நாட்டில் விண்வெளி நடவடிக்கைகளின் தேவை குறித்து கேள்வி எழுப்பும் சிலர் உள்ளனர்.
ஆனால், எங்களுக்கோ இந்த செயல்பாட்டின் நோக்கத்தில் என்றுமே தெளிவின்மை இருந்ததே இல்லை.
விக்ரம் சாராபாய் - இந்திய விண்வெளி ஆராய்ச்சியின் தந்தை.

கடந்த 23.08.2023 இந்திய விண்வெளி ஆராய்ச்சிக்கு மணிமகுடம் சூடப்பட்ட நாள். பொன்னால் பொறிக்கப்பட வேண்டிய நாளும் கூட. அன்று தான் சந்திரனில் இந்தியாவின் சந்த்ராயன் 3 என்ற விண்கலம் சந்திரனில் மாலை சரியாக 6.05 மணிக்கு கால் பதித்த நாளாகும். இந்த அரிய சாதனையை* உலகிலேயே நான்காம் நாடெனவும் சந்திரனின் கருமை சூழ்ந்த தென் முனையில் கால் பதித்த முதல் நாடெனவும் பெருமை பெற்றது. முழுக்க முழுக்க மேக் இன் இண்டியா என்ற முறையில் தயாரிக்கப்பட்ட உபரி பாகங்கள் கொண்டது இந்த ஏவுகணை. வெறும் 615 கோடி ரூபாய் செலவில் மிகவும் குறைந்த செலவில் நடந்தேறிய மகத்தான நிகழ்வு. அனைத்து இந்திய விஞ்ஞான உலகிற்கு, குறிப்பாக இஸ்ரோவுக்கு சிரம் தாழ்ந்த நன்றியும் பாராட்டுதலும்.

இந்த இந்திய விண்வெளி ஆராய்ச்சியின் தந்தை விக்ரம் சாராபாயின் நினைவாகவே சந்திரனில் கால் பதித்த லேண்டருக்கு விக்ரம் என்று பெயரும் சூட்டி பெருமை கொண்டது நமது இந்தியா.
கூகுள் தனது சர்ச் இன்ஞினில் இந்தியாவின் நிலாவில் கால் பதித்தத்தை கொண்டாடிய தான் ஹைலைட் !

Leave a comment
Upload